1. ஒயின் ஃபேசியல் : ஆல்கஹாலை வைத்து ஃபேசியல் செய்வதில் ஒயின் ஃபேசியல் மிகவும் சிறந்தது. இந்த ஒயினை வைத்து ஃபேசியல் செய்தால் சருமமானது ரிலாக்ஸ் ஆகும். மேலும் இதை தலைவலியானது அதிகம் இருக்கும் போது அருந்தினால், தலைவலியானது உடனடியாக சரியாகிவிடும். ஒயினானது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் அடக்கியுள்ளது. இத்தகைய ஒயினை கற்றாழை ஜெல்லுடன் கலந்து பூசும் போது, இது சருமத்தில் ஊடுருவிச் சென்று பொலிவைத் தருகிறது. இந்த ஃபேசியலை செய்வதால் சருமத்தில் இருக்கும் இறந்த செல்கள் எளிதில் வெளிவந்துவிடும்.
2. பீர் ஃபேசியல் : பீர் ஆனது கூந்தலுக்கு மட்டும் பளபளப்பைத் தருவதில்லை, முகத்திற்கும் பளபளப்பைத் தருகிறது. 2 டேபிள் ஸ்பூன் பீரை தேன் மற்றும் வினிகருடன் கலந்து முகத்திற்கு தடவி வந்தால் முகமானது பளபளப்புடன் மின்னும். மேலும் பீரில் சருமத்திற்கு ஏற்ற வைட்டமின் பி இருக்கிறது. இது முகத்தில் குளிர் இல்லது மழை காலத்தில் வறட்சியால் ஏற்படும் வெடிப்பை சரிசெய்து, முகத்திற்கு அழகைத் தருகிறது.
3. வோக்கா ஃபேசியல் : வோக்கா என்பது நீர்நிலையில் பிடிக்கம் புகையிலை. இந்த வோக்காவை ஐஸ் கட்டியாக செய்து தான் ஃபேசியல் செய்ய வேண்டும். மேலும் இதை வைத்து ஃபேசியல் செய்வது மிகவும் குறைவு. இதற்கு முதலில் புதினா டீ மற்றும் ரோஸ் டீ-யை தனியாக செய்து கொள்ளவும். பின் அதோடு 2 டேபிள் ஸ்பூன் வோக்கா மற்றும் எலுமிச்சை சாற்றை ஊற்றி ஃபிரிட்ஜில் வைத்து கட்டிகளாக்கி, முகத்தில் தேய்த்துக் கொள்ளவும். இது முகத்திற்கு ஏற்ற இளமைப் பொலிவைத் தருகிற ஒரு ட்ரிக் ஆகும்.
4. விஸ்கி ஃபேஸ் பேக் : விஸ்கி ஒரு ஆன்டிசெப்டிக் பொருள். இது முகத்தில் இருக்கும் சுவடுகளை எளிதில் நீக்கும் திறன் கொண்டது. மேலும் முகத்தில் பரு, கட்டி, கொப்புளம் இருப்பவர்கள், இந்த விஸ்கி ஃபேஸ் பேக்கை பயன்படுத்தினால் ஒரு நல்ல பலன் கிடைக்கும். இதற்கு முட்டையின் வெள்ளைக் கருவை உடைத்து ஒரு பௌலில் ஊற்றி, அதில் 1 டேபிள் ஸ்பூன் பால் பவுடர் மற்றும் எலுமிச்சை சாற்றை ஊற்றி, அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் விஸ்கியை ஊற்றி முகத்திற்கு தடவ வேண்டும்.
மேற்கூரிய ஃபேசியல்களை செய்து பாருங்கள், முகமானது பளபளப்புடன் இருப்பதோடு, முகமும் அழகாக இருக்கும். பிறகு என்ன நீங்கள் உலக அழகி ஆகாவிட்டாலும், ஒரு வீட்டு அழகியாவது ஆவீர்கள்…