29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
17 1508239826 12
தலைமுடி சிகிச்சை

நீளமா கூந்தல் வளரனுமா? அப்போ நீங்க கட்டாயம் இதெல்லாம் செஞ்சே ஆகனும்!!

தலை முடி உதிராமல் தவிர்ப்பதடன் இன்னும் நீளமாகவும் அடர்த்தியாகவும் வளர்க்க வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் இருக்கும். அதற்கு முடிக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை கொடுக்க வேண்டும்.

 

கூந்தலை வளர்க்க விதவிதமான ஹேர்பேக் பயன்படுத்தியிருப்போம் வாரம் ஒரு முறை கூட நாம் பயன்படுத்தும் ஷாம்புவை மாற்றியிருப்போம். வெளியிலிருந்து செய்பவற்றைத் தாண்டி முடிக்கு ஊட்டச்சத்து என்பது உள்ளிருந்து வர வேண்டும். வெளியில் நாம் சேர்ப்பவற்றால் அவற்றின் தோற்றத்தில் வேண்டுமானால் மாற்றம் தெரியலாமே தவிர முடியின் வளர்ச்சியில், ஆரோக்கியத்தில்,உறுதியில் மாற்றங்கள் தெரிவது அரிது.

கூந்தல் வளர்ச்சிக்கு தேவையான மற்ற எல்லாசத்துக்களையும் விட விட்டமின் சத்து தான் முடிக்கு அதிகமாக தேவைப்படுகின்றன. முடிக்கு எந்த மாதிரியான கால்சியம் தேவைப்படுகிறது. அதனை எப்படி எடுத்துக் கொள்ளலாம் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

 

முடியின் வாழ்நாள் :
சராசரியாக, சுமார் 1,00,000. முடி வளர்ந்துகொண்டே இருப்பதில்லை, மாறாக இரண்டு முதல் ஆறு வருடங்கள்தான் வளருகிறது. பின்னர் அது உதிர்ந்து, சிறிது இடைவெளிக்கு பிறகு அதே துளையிலிருந்து மற்றொரு புதிய முடி வளர ஆரம்பிக்கிறது.
ஒருவருக்கு தலைமுடி சம்பந்தமாக எந்த பிரச்சினையும் இல்லாதிருந்தாலும்கூட, இந்த சுழற்சியால் ஒவ்வொரு நாளும் ஏறக்குறைய 70 முதல் 100 முடிகள் தானாகவே உதிர்வது சாதரணமானது தான். இதைத் தாண்டினால் மட்டுமே முடியை கவனிக்க வேண்டும்.

 

விட்டமின் பி :
பி விட்டமின்ஸ் என்றும் இதனைக் குறிப்பிடலாம். ஏனென்றால் இதில் பி சார்ந்திருக்கும் விட்டமின் (பி,பி1,பி2,பி3,பி5,பி6,பி7,பி9,பி12)
அனைத்து விட்டமின்ஸ்களும் அடக்கம் .
நாம் சுறுசுறுப்பாக இருப்பதற்கும், சருமம், நகம் மற்றும் முடியின் ஆரோக்கியத்திற்கும் பி விட்டமின்ஸ் மிகவும் அவசியமாகிறது. இது செல் வளர்ச்சியை துரிதப்படுத்துகிறது. பெரும்பாலும் இந்த விட்டமின்கள் தண்ணீரில் கரையக்கூடியதாகவே இருக்கும். பி விட்டமின்ஸ் எடுத்துக் கொண்டதை நம்மால் சேமித்து வைக்க முடியாது. அவை சிறுநீரில் கரைந்திடும். எப்போதும் சோர்வாக இருப்பது, முடி அதிகமாக உதிர்வது,அல்லது எளிதாக முடி உடைவது போன்ற காரணங்களைக் கொண்டு இந்தச் சத்துக் குறைபாடு கண்டுபிடிக்கலாம்.
முட்டை,நட்ஸ்,தானியங்கள்,காய்கறிகளில் அதிகப்படியான பி விட்டமின்ஸ் கிடைக்கும்.

 

பயோட்டின் :
ஆரோக்கியமான நீண்ட கூந்தல் வேண்டும் என்று விரும்புகிறவர்கள் பயோட்டினை மறக்க வேண்டாம். முடியின் வளர்ச்சியை துரிதப்படுத்தும் மிக முக்கியமான சத்துக்களில் பயோட்டினும் ஒன்று.
இந்த விட்டமின் குளோக்கோஸ் உற்பத்தியை அதிகரிக்கிறது அதோடு அமினோ அமிலங்களை ப்ரோட்டின்களாக உருமாற்றுகிறது. இதனால் முடிக்கு தேவையான ப்ரோட்டீன் கிடைக்கும்.
காளான், அவகேடோ,முட்டை,பீனட் பட்டர்,சால்மன் மீன் போன்றவற்றில் பயோட்டின் அதிகமாக இருக்கிறது.

 

நியாசின் :
இது நம்முடைய தலைப்பகுதிக்கு ஊட்டச்சத்து அளித்திடும். இதனால் முடி வளர்ச்சி துரிதமாகும். தலைப்பகுதியில் முடிக்குத் தேவையான ஊட்டச்சத்து கிடைத்தால் மட்டுமே முடி உதிராமல் ஆரோக்கியத்துடன் வளர முடியும்.
சட்டென முடிவெடுப்பதில் சிரமங்கள், வயிற்றுப் போக்கு உண்டாவது,தலையில் அரிப்பு போன்றவை அடிக்கடி ஏற்ப்பட்டால் உங்கள் உடலில் நியாசின் குறைபாடு இருக்கும்.
சிக்கன்,காளாண் போன்றவற்றில் அதிகப்படியான நியாசின் இருக்கிறது.

 

விட்டமின் இ :
விட்டமின்களில் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. முடியின் வளர்ச்சிக்கு மிகவும் அத்தியாவசியமானதாக பார்க்கப்படுகிறது. பாதாம், அவகேடோ,ப்ரோக்கோலி போன்றவற்றில் அதிகப்படியான விட்டமின் இ இருக்கிறது.
விட்டமின் ஈ போதுமான அளவு இருந்தால் மட்டுமே தலைக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்கப்பெற்று முடியின் வேர்கால்கள் வலுப்பெறும்.
விட்டமின் ஈ கேப்ஸூல் இரண்டை இரண்டு ஸ்பூன் தேங்காய் எண்ணெயுடன் கலந்து ஆயில் மசாஜ் கூட செய்திடலாம்.

 

விட்டமின் ஏ :
இது செல்வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருக்கக்கூடியது. அதோடு சீபம் உற்பத்திக்கும் துணை நிற்கிறது. சீபம் சுரந்தால் மட்டுமே தலைமுடி வறட்சியின்றி இருக்கும்.
கேரட்,கீரைகள் போன்றவற்றில் அதிகப்படியான விட்டமின் ஏ இருக்கிறது.
பார்வை திறனில் மாற்றங்கள்,சருமப் பிரச்சனைகள் அடிக்கடி ஏற்ப்பட்டால் விட்டமின் ஏ குறைபாடு உண்டென்று கண்டு கொள்ளலாம்.

 

விட்டமின் டி :
சூரியன் மூலமாக கிடைக்க கூடிய சத்து இது. உணவுகள் மூலமாக எடுத்துக் கொள்வதை விட வெளியில் சூரியன் மூலமாக கிடைக்ககூடியதே போதுமானது.
ஒரு நாளைக்கு அரை மணி நேரம் நின்றாலே போதுமானது. இதைத் தவிரா உங்களுக்கு விட்டமின் டி தேவையானதாக இருக்கிறதென்றால் முட்டை,காளான்,பால் ஆகியவற்றை அடிக்கடி எடுத்துக் கொள்ளுங்கள்.

 

இரும்புச்சத்து :
விட்டமினை தாண்டி மிகவும் அவசியமானது இரும்புச்சத்து.இரும்புச்சத்து முடியின் வளர்ச்சியை துரிதப்படுத்துவதுடன் அவற்றின் ஆரோக்கியத்திற்கும் உறுதிக்கும் துணை நிற்கின்றது.
இரும்புச்சத்து குறைபாடு இருந்தால் முடி அதிகமாக கொட்டுவது,அதிக வறட்சியுடன் காணப்படும்.

 

மக்னீசியம் :
செல் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பவற்றில் ஒன்று மக்னீசியம். தலைமுடியின் ஆரோக்கியத்திற்கும் நீண்டு வளர்வதற்கும் மக்னீசியம் மிகவும் தேவையாகும்.
இதைத் தவிர மக்னீசியம் குறைப்பாட்டினால் இதயம் தொடர்பான கோளாறுகள்,டைப் 2 வகை சர்க்கரை நோய்,சோர்வு,மன அழுத்தம்,போன்றவை கூட ஏற்படும்.

 

ப்ரோட்டீன் :
விட்டமின் குடும்பத்தை சேராதது ஆனால் முடியின் வளர்ச்சிக்கு மிகவும் அவசியமான ஒன்று இது. இது போதுமானளவு இல்லையென்றால் தலையின் வேர்கால்களில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் இதனால் தலை வறண்டு போவது,முடி உடைவது போன்றவை ஏற்படும்.
முடியின் நிறம் மாறினால் ப்ரோட்டீன் எடுத்துக் கொள்வதை அதிகப்படுத்துங்கள்.

 

17 1508239826 12
ஜிங்க் பற்றாகுறை இருந்தால் அது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்திடும். இதனால் செரிமானக்கோளாறுகள் முதற்கொண்டு ஹார்மோன் பிரச்சனைகள் வரை ஏற்படக்கூடும்.இவற்றில் ஒன்றாக முடி உதிர்வு பிரச்சனை அதிகமாக இருக்கும்.
பூசணி விதைகள், காளாண்,பூண்டு,கீரை,தயிர் போன்றவற்றில் அதிகப்படியான ஜிங்க் இருக்கிறது.

Related posts

எப்போது முடி நரைக்க தொடங்கும்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…ஹேர் ஸ்ட்ரைட்னிங் செய்வதால் சந்திக்கும் பிரச்சனைகள்!!!

nathan

முடி கொட்டுவது இயல்பானதா?

nathan

பூண்டை இப்படி யூஸ் பண்ணுனீங்கனா… முடி கொட்டுறது நின்னு…

nathan

கலர் செய்த கூந்தலை பராமரிக்க உதவும் மூன்று சிறந்த வழி!…

nathan

40 வயதிற்கு மேல் கூந்தலை பராமரிக்க

nathan

எவ்வளவு முயற்சித்தும் உங்களால் பொடுகை போக்க முடியவில்லையா? அப்ப இத ட்ரை பண்ணி பாருங்க…

nathan

தேங்காய் பாலைக் கொண்டு எப்படி முடி வளர்ச்சியை அதிகப்படுத்தலாம்

nathan

தலையிலிருக்கும் பேனை ஒழிக்க சில எளிய வீட்டுக் குறிப்புகள்

nathan