26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
16 1508153065 4
தலைமுடி சிகிச்சை

இளநரையைப் போக்க இந்த எளிய மருந்தை முயற்சி செய்து பாருங்க!!!

விளைச்சல் : பசுமை மாறாத கற்பூர மரம் சீனா மற்றும் ஜப்பான் நாடுகளைச்சேர்ந்த. வெப்ப மற்றும் மிதவெப்ப மண்டல நாடுகளில் வளர்க்கப்படுகிறது. இந்தியாவில் அலங்காரத்தாவரமாக அறிமுகப்படுத்தப்பட்ட இது கற்பூரம் தயாரிக்க தோட்டப்பயிராக பயிரிடப்படுகிறது. கற்பூரமரத்தில் பல எளிதில் ஆவியாகும் எண்ணெய் வகைகள் உள்ளன. கேம்ஃபர், செப்ரோல், யூஜினால் மற்றும் டெர்பினியரல், இவற்றுடன் லிக்னான்களும் காணப்படுகின்றன.

மருத்துவ குணங்கள் : இரத்த ஓட்டத்தை சீராக்க உதவுகிறது. வாயுத் தொல்லை மற்றும் வாயுவு பிரச்சனையால் வயிறு வீங்குதல் போன்றவை ஏற்படாமல் இருக்கிறது.செரிமான உறுப்புகளை சீராக்கி செரிமானத்திற்கு உதவுகிறது. சளித்தொல்லையில் இருந்து விடுபட கற்பூரம் பயன்படுகிறது. நுரையீரலை சுத்தம் செய்து சுவாசிப்பதை எளிதாக மாற்ற பயன்படுகிறது.கற்பூர எண்ணெய் கொண்டு மசாஜ் செய்வதால் தசை பிடிப்பு மற்றும் நரம்பு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் வராது.

உறுதியான கூந்தல் : மன அழுத்தம், சத்தான ஆகாரங்கள் சாப்பிடாமல் இருப்பது, மாசு, இவையெல்லாம் உங்கள் முடியின் உறுதியினை இழக்கச் செய்திடும்.இதனால் அதிகமாக முடி உதிர்வு ஏற்படும். இதனை தவிர்க்க நீங்கள் சூடம் பயன்படுத்தலாம். கற்பூர எண்ணெயுடன் ஒரு முட்டையை உடைத்து ஊற்றிடுங்கள். அதனை நன்றாக கிளறி தலையில் தேய்க்க வேண்டும். முக்கியமாக முடியின் வேர்கால்களில் பட வேண்டும். ஒரு அரை மணி நேரம் நன்றாக ஊறியதும் தலைக்குளித்துவிடலாம்.

முடி உதிர்வு : அதிகமாக முடி கொட்டுவதால் உண்டாகும் சொட்டை உங்கள் தன்னம்பிக்கையை குலைத்துவிடும் ஒன்றாக இருக்கிறது. முடி கொட்டாமல் இருக்கவும் சொட்டை விழாமல் இருக்கவும் இதனைச் செய்திடுங்கள். கற்பூர எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் இரண்டையும் சம அளவு எடுத்துக் கொண்டு நன்றாக கலந்து கொள்ளுங்கள்.இதனைக் கொண்டு உங்கள் தலைக்கு ஆயில் மசாஜ் செய்திடலாம். ஒரு மணி நேரம் நன்றாக ஊறிய பிறகு தலைக்கு குளிக்க வேண்டும் இதனை வாரம் இரண்டு முறை செய்திடலாம்.

முடி வளர்ச்சிக்கு : என்ன தான் முடியின் உறுதிக்கும் முடி கொட்டாமல் தடுக்கவும் கற்பூரம் பயன்பட்டாலும் முடியின் வளர்ச்சிக்கு கற்பூரம் மிகவும் பயனுள்ளதாய் இருக்கிறது என்பது தான் உண்மை. இதனை தொடர்ந்து செய்வதால் முடி கொட்டாமல் தவிர்க்கப்படுவதுடன் புதிய முடி வளரவும் வழிவகை செய்வதால் கூந்தல் வளர்ச்சி ஆரோக்கியமானதாக இருக்கும். கற்பூர எண்ணெயுடன் லேவண்டர் ஆயில் சேர்த்து ஆயில் மசாஜ் செய்திடுங்கள் அப்படியில்லை எனில் கற்பூர எண்ணெய் இரண்டு ஸ்பூன் தயிர் ஒரு ஸ்பூன் முட்டை மூன்றையும் ஒன்றாக கலந்து ஹேர் மாஸ்க்காக போடுங்கள். நன்றாக காய்ந்ததும் தலைக்குளித்துவிடலாம். இதனை வாரம் ஒரு முறை செய்தாலே போதுமானது.

வரண்ட முடி : முடிக்கு தேவையான போஷாக்கு கிடைக்கவில்லையெனில் முடி வறட்சியுடையதாக காணப்படும். அப்படியிருக்கும் போது முடியுதிர்வு அதிகரிக்கும். கற்பூர எண்ணெயுடன் தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் ஆயில் கலந்து தலைக்கு ஆயில் மசாஜ் செய்ய வேண்டும். இதனை இரண்டு நாட்களுக்கு ஒரு முறை செய்யலாம். நல்ல பலன் கிடைக்கும்.

அரிப்பு : தலையில் ஈரப்பசை இல்லையெனில் அரிப்பு ஏற்படக்கூடும். இது அப்படியே தொடர்ந்தால் முடி வலுவிழந்து உதிரத்துவங்கிவிடும், இதனால் முறையாக தலைமுடியை பராமரிப்பது அவசியம் தலை லேசாக அரிக்கத்துவங்கும் போதே கவனம் செலுத்துங்கள். இதனை நீங்கள் கற்பூரத்தை வைத்தும் கட்டுக்குள் கொண்டு வரலாம். சூடத்தை பொடியாக்கி தலையில் போட்டு தேய்த்து வர தலையில் சேர்ந்திருக்கும் பாக்டீரியாவை அது கொன்றிடும். அதோடு வாரம் ஒரு முறை கற்பூர எண்ணெய் தேய்த்து தலைக்குளித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். கற்பூரத்தை தலையில் தடவுவதற்கு முன்னால் தலையில் உங்களுக்கு வேறு எந்த பொருட்களாலும் அலர்ஜி இல்லை என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

பொடுகு : சில நேரங்களில் தலையில் பொடுகு இருந்தால் கூட தலை அதிகப்படியாக அரிக்கும். பொடுகினை போக்க சூடம் பயன்படுத்தலாம். கற்பூர எண்ணெயைக் கொண்டு தினமும் தலையில் மசாஜ் செய்து வர பொடுகு அழிவதுடன் தலைக்கு தேவையான போஷாக்கு கிடைத்திடுகிறது. இதனால் பொடுகுத் தொல்லை உங்களை நெருங்காது.

பேன் மற்றும் ஈறு : நீளமான முடியிருந்தால் பேன் தொல்லை இருக்கும். அதுவும் பொதுயிடங்களுக்கு செல்பவர்களுக்கு இது மிகுந்த தர்ம சங்கரத்தை ஏற்படுத்திடும். பல ஷாம்புகள் மாற்றி மாற்றி பயன்படுத்தியும் எந்த விதமான பலனும் இல்லை என்று கவலைபடுபவர்கள் சூடத்தை பயன்படுத்தினால் உடனடி பலன் கிடைத்திடும். தலைக்கு குளிக்கும் போது அந்த தண்ணீரில் இரண்டு ஸ்பூன் கற்பூர எண்ணெய் கலந்து கொள்ளுங்கள். அந்த தண்ணீரை தலையில் ஊற்றிக் குளித்தாலே பேன்கள் எல்லாம் ஒழிந்திடும். தொடர்ந்து ஒரு மாதம் வரை செய்து வர தலையில் இருக்கும் எல்லா பேன் மற்றும் ஈறுகள் இருக்கும் இடம் தெரியாமல் மறைந்திருக்கும்.

இளநரை : இன்றைய இளையோருக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. இன்றைய வாழ்க்கை முறை மாற்றத்தினால் பலருக்கும் மிகவும் இள வயதிலேயே நரைமுடி வந்துவிடுகிறது. இதனைப் போக்க சந்தையில் கிடைக்கிற எண்ணற்ற பொருட்கள் வாங்கி வீணாக காசு செலவாகிப்போனதே தவிர நல்ல பலன் கிடைக்கவில்லை என்று வருந்துகிறவர்கள் சூடத்தை பயன்படுத்திப்பாருங்கள். ஒரு கப் தேங்காய் எண்ணெயில் நான்கைந்து செம்பருத்திப் பூ போட்டு சூடாக்குங்கள். நன்றாக சூடேறியதும் அதில் இரண்டு கற்பூரத்தை போடவும்.பின்னர் அந்த கலவை நன்றாக ஆறியதும் அந்த எண்ணெயை தலைக்குத் தேய்த்துக்குளிக்கலாம். இதனை தொடர்ந்து செய்ய வேண்டிய அவசியமில்லை.

ஸ்ப்லிட் ஹேர் : பொதுவாக பலருக்கும் இந்தப் பிரச்சனை இருக்கும். முடியின் நுனிப்பகுதியில் ஸ்ப்லிட் ஹேர் வந்துவிட்டால் மேற்கொண்டு முடி வளராது என்று சொல்லிக்கொண்டிருக்கிறோம், பல நேரங்களில் முடிகளிலும் பூச்சித் தொற்று ஏற்பட வாய்ப்புண்டு, இதற்கு முழு காரணம் நாம் சரியாக முடியை பராமரிக்காமல் இருப்பது தான். வாரம் ஒரு முறையாவது கற்பூர எண்ணெய் தேய்த்து தலைக்குளிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.வெறும் கற்பூர எண்ணெயை பயன்படுத்துவதற்கு பதிலாக நீங்கள் அன்றாடம் தலைக்குத் தேய்க்கப் பயன்படுத்தும் எண்ணெயுடனோ அல்லது நல்லெண்ணெயுடன் கலந்து தலைக்கு ஆயில் மசாஜ் கொடுத்தால் நல்ல பலன் கிடைக்கும்.

16 1508153065 4

Related posts

உங்களுக்கு தெரியுமா எண்ணெய் தேய்க்கும்போது நாம் என்ன தவறு செய்கிறோம்? அப்ப இத படிங்க!

nathan

குளிர்கால கூந்தல் உதிர்வை கட்டுப்படுத்தும் வழிகள்

nathan

கூந்தலுக்கு வளர்ச்சியை தூண்டும் பழங்கள்

nathan

தலை முழுவதும் பொடுகா? நீங்கள் செய்ய வேண்டியது இப்படித்தான்!!

nathan

இதை முயன்று பாருங்கள் அரையடிக் கூந்தலோ, இடுப்பைத் தாண்டிய கூந்தலோ…

nathan

பிசுபிசுப்பான எண்ணெய் தலைமுடியை தவிர்க்க கீழ் உள்ளவற்றை பயன்படுத்துங்கள்:

nathan

உங்களுக்கு தெரியுமா வீட்டிலேயே தயாரிக்கலாம் “நேச்சுரல் ஹேர் டை”

nathan

தலைமுடியின் வளர்ச்சியை வேகமாக்கும் இந்த ஷாம்பு பற்றி கேள்விப்பட்டதுண்டா?

nathan

இரவு உறங்கச் செல்வதற்கு முன் தலை முழுவதும் எண்ணெய் மசாஜ் செய்து கொள்வது சிறந்த பலன்களை தரும்

nathan