ஒருவரின் அழகை அதிகமாக வெளிக்காட்டுவதில் அவர்களின் உதட்டுக்கு முக்கிய பங்குள்ளது. ஆனால் இன்றைய காலத்தில் இயற்கையோகவே சிகப்பு நிற உதடு இருப்பவர்களை பார்ப்பது அரிது. ஏனெனில் பலருக்கு உதடுகள் மென்மையின்றி, தோலுரிந்து, கருப்பாக இருக்கும். இதற்கு அளவுக்கு அதிகமான சூரியக்கதிர்களின் தாக்கம், காப்ஃபைன், புகைப்பிடித்தல் போன்ற பல விஷயங்கள் தான் காரணமாக உள்ளது. இதனால் தான் பெண்கள் தங்களின் அழகை அதிகரித்துக் காட்ட மேக்கப் போடும் போது உதடுகளுக்கு லிப்ஸ்டிக்குகளைப் போடுகிறார்கள். எனவே உதடுகளின் சிவப்பு நிறத்தின் அழகை இயற்கையாகவே அதிகரிக்க என்ன செய்யலாம் என்பதை தெரிந்துக் கொள்வோம்.
* பீட்ரூட்டை துண்டாக நறுக்கி அதை ஃப்ரிட்ஜில் வைத்து, பின் குளிர்ச்சியானதும், அந்த பீட்ரூட் துண்டுகளை எடுத்து உதடுகள் மீது 2 நிமிடம் மசாஜ் செய்து, பின் 20 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இதே போல் தினமும் செய்தால், உதடுகளில் உள்ள கருமை விரைவில் மறைந்து விடும்.
* மாதுளம் பழத்தின் சாற்றை உதடுகளின் மீது பூசி வந்தால் உதடுகள் அழகாகும்.
* உதடு காய்ந்திருக்கிறதா என்று அடிக்கடி உதட்டை எச்சிலால் ஈரப்படுத்தக்கூடாது. உதட்டில் இருக்கும் கொஞ்சம் ஈரப்பதமும் போய்விடும். எச்சிலில் இருக்கும் பாக்டீரியாவால் உதட்டில் புண்கள் ஏற்படலாம்.
* கொத்தமல்லி இலைகளின் சாற்றை எடுத்து தினமும் படுக்கைகுச் செல்லும் முன் உதடுகளில் தடவி வந்தால் உதடு சிவப்பாகும்.
* கொழுப்புச் சத்துக் குறைய குறைய உதடுகள் சுருங்கி வயதானத் தன்மையை அடைகின்றன. அதற்கு வெளிப்புறத்திலிருந்து ஊட்டம் தரலாம். உதடுகளுக்கு வேசிலின் தடவுவது நல்லது.
* தினமும் இரவில் படுப்பதற்கும் முன்பு எலுமிச்சை சாற்றில், சிறிதளவு சர்க்கரையை சேர்த்து, சர்க்கரை கரைவதற்குள், அதனை உதடுகளில் தடவி மென்மையாக ஸ்கரப் செய்து, பின் 10 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
* ஊட்டச்சத்துள்ள உணவை சாப்பிட வேண்டும். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.
* தேங்காய் எண்ணெயில் அரை டீஸ்பூன் ஜாதிக்காய் பொடியைச் சேர்த்து குழைத்து உதடுகளின் மேல் தடவி வந்தால் உதடுகள் சிவந்து பளபளப்பாக காட்சியளிக்கும்.
* கற்றாழையின் ஜெல்லை இரவில் படுக்கும் முன் உதடுகளில் தடவி, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் சூடான நீரில் கழுவ வேண்டும். இதே போல் தினமும் செய்து வந்தால், கருமை நீங்கி, உதடுகளுக்கு அழகான சிவப்பு நிறம் கிடைக்கும்.
* கருமையான உதடு சிவப்பாக: பாலேடு ஒரு ஸ்பூன் எடுத்துக் கொள்ளவும். நெல்லிக்காய் சாறு 5 சொட்டுகள் கலந்து, தினமும் உதடுகளில் பூசி வந்தால், உதட்டின் கருமை மறையும்.
* தினசரி உதடுகளின்மேல் நெய் அல்லது வெண்ணெய் தடவி வந்தால் வறண்ட உதடுகள் மாறி வழவழப்பாகும்.
* உதட்டில் அரை ஸ்பூன் ஆரஞ்சுப் பழச்சாறு கலந்து உதட்டில் தடவவும். இப்படிச் செய்தால் உதடு சிவப்பாகும்.