22.4 C
Chennai
Saturday, Dec 13, 2025
09 1507528722 1turmeric
முகப் பராமரிப்பு

இந்த ஒரு மூலிகை நீராவி முகப்பருக்களை மாயமாக மறைய வைத்திடும்!!

வெயில் காலத்தில் சருமதில் பல வித எரிச்சல் தோன்றுகிறது. கடுமையான வெயிலின் தாக்கம், புகை, தூசு, மாசு போன்றவை முகத்தில் படர்ந்து, முகத்திற்கு சோர்வை அளிக்கின்றன. அழகு நிலையத்திற்கு சென்று முக அழகை மீட்டெடுக்காமல் வீட்டிலேயே இருந்து உங்கள் சருமத்தை மீண்டும் பொலிவடைய செய்யலாம். பருக்கள் மற்றும் சருமத்தின் எண்ணெய் பசையை போக்குவதற்கான வழிகளை இப்போது பார்ப்போம்.

நீராவி பயன்படுத்தி முக அழகை மேம்படுத்துவதற்கான முறையை இப்போது பார்ப்போம் நீராவி பேஷியல் முற்றிலும் இயற்கையானது. எளிதாக வீட்டிலேயே செய்ய கூடியது. ஆனால் இந்த முறையை அடிக்கடி பயன்படுத்தும்போது சரும சேதம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அதிகமான பருக்கள் இருக்கும்போது வாரத்திற்கு 2 முறை இதனை மேற்கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்: மஞ்சள் தூள் லவங்க பட்டை க்ரீ டீ தண்ணீர்

செய்முறை: க்ளென்சர் பயன்படுத்தி முகத்தை அழுக்கில்லாமல் கழுவி கொள்ளவும். 1 லிட்டர் தண்ணீர் எடுத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி கொதிக்க விடவும். கொதிக்கும் நீரில் 1 ஸ்பூன் மஞ்சள் தூள், 3 அல்லது 4 லவங்க பட்டை , 1 ஸ்பூன் க்ரீ டீ ஆகியவற்றை போடவும். பிறகு அடுப்பை அணைக்கவும். ஒரு ஸ்பூனால் அந்த நீரை நன்றாக கலக்கவும். கொதிக்கும் நீர் நல்ல மஞ்சள் நிறத்தில் தோன்றும்.

பயன்படுத்தும் முறை : ஒரு கனமான போர்வை அல்லது துண்டு எடுத்து உங்களை முழுதும் போர்த்தி கொள்ளவும். இப்போது அந்த நீரில் இருந்து வரும் ஆவியை நீங்கள் நுகர தொடங்கலாம். தண்ணீர் மிக அதிகமாக கொதிக்க கூடாது. அது சருமடத்தை சேதமடைய செய்யும். ஓரளவு ஆவி வரும் அளவுக்கு கொதிக்க வைப்பது நலம். சென்சிடிவ் சருமமாக இருந்தால் 8-10 நிமிடங்கள் ஆவி பிடிப்பது நலம். எண்ணெய் சருமமாக இருக்கும்போது 20 நிமிடங்கள் செய்யலாம். கண்களை மூடிக்கொண்டு ஆவியை முகத்தில் நன்றாக எடுத்துக் கொள்ளுங்கள். அதிக சூடு அசௌகரியத்தை ஏற்படுத்தினால் சற்று போர்வையை விலக்கி ரிலாக்ஸ் செய்து கொள்ளலாம். . முடிந்த அளவு ஆவியை எடுத்துக்கொண்டு, போர்வையை விலக்கி முகத்தை காய விடவும். பின்பு டோனர் அல்லது மாய்ஸ்ச்சரைசேர் பயன்படுத்தலாம்.

கிரீன்டீ : க்ரீன் டீ சருமத்திற்கு பல நன்மைகளை செய்கிறது. மென்மையான , சுத்தமான பொலிவான சருமத்தை தருவது இதன் முக்கிய தன்மையாகும். சூரிய ஓளியால் ஏற்படும் சேதத்தை தவிர்த்து வீக்கத்தை தடுக்கிறது. அதிக அளவு பாலிபீனால்கள் க்ரீன் டீயில் இருப்பதால் வயது முதிர்வை தடுக்கிறது. சருமம் அழகாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க உதவுகிறது.

மஞ்சள் தூள் : மஞ்சளில் இருக்கு அதிக அளவு சல்பர் ஆன்டிபயாடிக் போல் செயல்பட்டு சரும தொற்றுக்களை எதிர்த்து போராடுகிறது. பருக்கள் மறைவதற்கு இதுவே முக்கிய காரணமாகும்.

லவங்க பட்டை: லவங்க பட்ட இயற்கையான சரும நிவாரணி. சருமத்தை புதுப்பிக்க உதவும் ஒரு பொருள். சருமத்தின் துளைகளை திறந்து சருமத்துக்குள் ஊடுருவி சருமத்தை புதுபிக்க உதவுகிறது . இதனுடன் சேர்ந்த மூலப்பொருட்கள் சருமத்தில் நுழைந்து வேலை புரிய உதவுகிறது. இந்த எளிய முறை நீராவி பேஷியலை செய்வதன் மூலம் பருக்கள் குறைந்து, எண்ணெய் பசை சருமம் பொலிவாக காணப்படும்.09 1507528722 1turmeric

 

Related posts

உங்க முகம் எப்பவும் பளிச்சுன்னு இருக்கணுமா?

nathan

சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டு சருமத்தைப் பராமரித்து வந்தாலே சரும அழகை மேம்படுத்தலாம்.

nathan

பெண்கள் முகத்தில் முடி வளர இந்த 5 விஷயம் தான் காரணம்..!!

nathan

எந்த உணவுடன் எதனை சேர்த்து சாப்பிடக்கூடாது

nathan

பீல் ஆஃப் மாஸ்க் வீட்டிலேயே செய்ய ட்ரை பண்ணியிருக்கீங்களா? இப்ப ட்ரை பண்ணுங்க ஈஸியா

nathan

முகத்தின் கருமையை போக்கும் இயற்கை மாஸ்க்குகள்

nathan

இரண்டே மாதங்களில் தோல் சுருக்கங்கள் நீங்கி, மேனி பளபளப்பாகிவிட சூப்பர் டிப்ஸ்!….

sangika

இதோ எளிய நிவாரணம்! சரும வறட்சியினால் ஏற்படும் அரிப்புக்களைத் தடுக்கனுமா?

nathan

வாரம் 3 முறை இத செஞ்சா, சரும சுருக்கமின்றி எப்போதும் இளமையுடன் இருக்கலாம் தெரியுமா?

nathan