24.7 C
Chennai
Saturday, Dec 13, 2025
தலைமுடி சிகிச்சை

முடி உதிர்வு மற்றும் நரைமுடிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் இயற்கை கலரிங்!

இன்றைக்கு இளநரை என்பது சர்வ சாதரணமாகிவிட்டது. வாழ்க்கை முறை மாற்றம், உணவுப்பழக்கம் போன்றவற்றால் இளநரை பலருக்கும் வருகிறது. அதனை மறைக்க ஹேர் டை பயன்படுத்துகிறவர்கள் அதிலிருக்கும் கெமிக்கல் பாதிப்பினை உணராமல் தொடர்ந்து பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

கெமிக்கல் பாதிப்பிலிருந்து தப்பிக்க ஆர்கானிக் முறையில் வீட்டிலேயே எளிதாக ஹேர் டை தயாரிக்கலாம். அதனால் என்னென்ன நன்மைகள் என்பதைப் பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்.

இயற்கையான ஹேர் டை :
கெமிக்கல் ஹேர் டைக்கு மிகச் சிறந்த மாற்று என்றே சொல்லலாம். கெமிக்கல் ஹேர் டையை குறுகிய காலம் மட்டும் நிறம் கொடுக்கும் என்றாலும் அதனால் ஏற்படும் தீங்கு நீண்ட காலத்திற்கு பின் தொடரும்.
இயற்கையான ஹேர் டையில் பூக்கள், இலைகள், பழங்கள், வேர்கள் என இயற்கையாக கிடைக்கும் பொருட்களைக் கொண்டே தயாரிக்கப்படுகிறது. பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட கெமிக்கல் ஹேர் டைகளில் இருக்கும் பெராக்ஸைடு, பாராபீன்ஸ்,அமோனியா போன்ற எந்த கெமிக்கலும் இதில் சேர்க்கப்படுவதில்லை.
உங்களுக்குப் பிடித்த வண்ணங்களிலும் முடியை இயற்கையான முறையில் கலரிங் செய்து கொள்ளலாம்.

 

சிகப்பு :
ஒரு கப் பீட்ரூட் ஜூஸ், அரை கப் கேரட் ஜூஸ் எடுத்துக் கொள்ளுங்கள். இரண்டையும் ஒன்றாக கலந்து தலை முழுவதும் தடவிக் கொள்ளுங்கள். ஒரு மணி நேரம் நன்றாக ஊறிய பிறகு தலைக்கு குளிக்கலாம். ரோஸ் நிறம் அல்லது இளஞ்சிவப்பு நிறம் வரும்.

 

டார்க் பிரவுன் : இரண்டு டேபிள் ஸ்பூன் காபி பவுடர் அரை கப் தண்ணீர் . தண்ணீரை கொதிக்க வைத்து அதில் இந்த காபி பவுடரை போடுங்கள். அவை பாதியாக குறையும் அளவுக்கு வற்றியதும் இறக்கிவிடலாம். பின்னர் அதனை நன்றாக ஆறியதும் தலை முழுவதும் தடவி ஒரு மணி நேரம் கழித்து தலைக்குளிக்கலாம். கருப்பு நிறம் வேண்டுபவர்கள் காபி த்தூளுடன் டீத்தூளையும் சிறிதளவு சேர்த்துக் கொள்ளுங்கள்.

கருப்பு : ஆப்பிள் சீடர் வினிகர் அரை கப்,சோயா சாஸ் அரை கப் இரண்டையும் ஒன்றாக கலந்து கொள்ளுங்கள். இதனை தலையில் பயன்படுத்துவதற்கு முன்னதாக தலை குளித்திருக்க வேண்டும். சுத்தமாக இருக்கும் போது இதனை பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும். இந்த கலவையை தலை முழுவதும் அப்ளை செய்து கொள்ளுங்கள். லேசாக அப்ளை செய்தாலே போதுமானது. பின்னர் அப்படியே காயவைக்கலாம். இன்னொரு முறை தலைக்குளிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. இவற்றைத் தவிர மருதாணி அரைத்து பூசிக் கொள்வது, செம்பருத்தி பூ, மாதுளம் பழம்,குங்குமப்பூ போன்றவையும் தலைக்கு பயன்படுத்தலாம்.

நன்மைகள் : இயற்கையான பொருட்களைக் கொண்டு நீங்களே எளிதாக வீட்டில் தயாரிக்க முடியுமென்பதால் இதில் கெமிக்கல்கள் கலக்கப்பட்டிருக்குமோ அல்லது இது நமக்கு சேருமா என்ற ஐயம் கொள்ளத் தேவையில்லை. இது எல்லா வகை முடி இருப்பவர்களுக்கும் சேரும். அதோடு முடிக்கு தேவையான சத்துக்களும் கிடைப்பதால் முடி அதிகம் உதிராது ஆரோக்கியத்துடன் வளரும்.

 

07 1507361099 1

Related posts

நீண்ட வளமான கூந்தலுக்கு தேனை எப்படி பயன்படுத்தலாம்!

nathan

கூந்தல் உதிர்வா…? எளிய தீர்வுகள் இதோ…

nathan

உங்களுக்கு தெரியுமா நரை முடி வர நீங்க தினமும் சாப்பிடும் இந்த உணவுகள் தான் காரணம்!

nathan

தெரிஞ்சிக்கங்க… ஒரு பைசா செலவில்லாமல் அழகான நீண்ட தலைமுடியை பெற செய்யும் அற்புத இலை!!!

nathan

உங்களுக்கு முடி அதிகமா கொட்டி சீக்கிரம் வழுக்கை வராமல் இருக்க

nathan

கோடையில் கூந்தல் பராமரிக்கும் வழிகள்

nathan

கொத்து கொத்தா முடி கொட்டுதா? இதை முயன்று பாருங்கள் !

nathan

படுக்கும் முன் கூந்தலை பராமரிப்பது எப்படி?

nathan

தலைமுடி உதிர்வதைத் தடுக்க இஞ்சியைப் பயன்படுத்துவது எப்படி?

nathan