22.4 C
Chennai
Saturday, Dec 13, 2025
thokkumashroom
அறுசுவைசைவம்

மஷ்ரூம் தொக்கு

தேவையான பொருட்கள் :

  • மஷ்ரூம் – கால் கிலோ
  • பெரிய வெங்காயம் – 3
  • தக்காளி – 2 (நடுத்தரமான அளவு)
  • பூண்டு – 10 பற்கள்
  • இஞ்சி – ஒரு துண்டு
  • கொத்தமல்லி, புதினா இலை – சிறிது
  • பச்சை மிளகாய் – 5
  • மல்லித் தூள் – ஒரு தேக்கரண்டி
  • மஞ்சள் தூள் – சிறிது
  • எண்ணெய், உப்பு – தேவைக்கேற்ப
  • நெய் – 2 தேக்கரண்டி
  • சீரகம் – ஒரு தேக்கரண்டி

thokkumashroom

செய்முறை :

  • மஷ்ரூமைச் சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
  • பூண்டு மற்றும் இஞ்சியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • பச்சை மிளகாயுடன் கொத்தமல்லி மற்றும் புதினா இலைகளைச் சேர்த்து அரைத்து வைக்கவும்.
  • தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும்.
  • கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கிய 2 பெரிய வெங்காயத்தை நறுக்கி வதக்கவும். நன்கு வதங்கியதும் அதனுடன் 2 தக்காளியையும் சேர்த்து வதக்கி, மஞ்சள் தூள் மற்றும் மல்லித் தூள் சேர்த்து மிக்சியில் போட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும்.
  • பிறகு பூண்டு மற்றும் இஞ்சியைச் சேர்த்து சிவக்க வதங்கவிடவும்.
  • நன்றாக வதங்கியதும் மஷ்ரூம் துண்டுகளைச் சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கவும்..
  • வதங்கிய பிறகு வெங்காயம், தக்காளி விழுதை ஊற்றி, தேவையான அளவு உப்பு போட்டு கொதிக்கவிடவும்.
  • லேசாகக் கொதித்ததும் பச்சை மிளகாய் விழுதை ஊற்றி, உப்பு சரிபார்த்து மீண்டும் கொதிக்கவிடவும்.
  • நன்றாகக் கொதித்து பிரட்டல் பத‌த்திற்கு வந்ததும், கடாயில் நெய் விட்டு சீரகம் தாளித்துச் சேர்த்துப் பிரட்டி இறக்கவும்.
  • சூடான, சுவையான மஷ்ரூம் தொக்கு ரெடி.

Related posts

மாம்பழம், அன்னாசி மற்றும் வெள்ளரிக்காய் ஸ்மூத்தீ

nathan

பூந்தி லட்டு எப்படி என்று பார்க்கலாம்.

nathan

சத்தான சுவையான அரைக்கீரை குழம்பு

nathan

உருளைக்கிழங்கு மொச்சை வறுவல்

nathan

வரகு குடைமிளகாய் சாதம்

nathan

வாழைக்காய் சட்னி

nathan

தக்காளி சீஸ் ரைஸ்

nathan

வெண்டைக்காய் சாதம்

nathan

சூப்பரான கொண்டைக்கடலை குருமா

nathan