23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
1508235515 192
அசைவ வகைகள்

மட்டன் குருமா செய்ய வேண்டுமா…!

தேவையான பொருட்கள் :

மட்டன் – ½ கிலோ
நல்லெண்ணெய் – தேவைக்கேற்ப
இஞ்சிபூண்டு விழுது – 2 டீஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
மஞ்சள் தூள் – ¼ டீஸ்பூன்
சோம்பு தூள் – ½ டீஸ்பூன்
கொத்துமல்லி – சிறிதளவு
கறிவேப்பிலை – ஒரு கொத்து
புதினா – சிறிதளவு
தயிர் – 3 டீஸ்பூன்
முந்திரி – 150 கிராம் (விழுதாக அரைக்கவும்)
சீரகம் – ½ டீஸ்பூன்
சோம்பு – 1 டீஸ்பூன்
பட்டை – 2
கிராம்பு – 5
ஏலக்காய், மிளகு – ½ டீஸ்பூன்
வெங்காயம் – 2
பச்சை மிளகாய் – 3
தக்காளி – 2
தேங்காய் விழுது – 3 டீஸ்பூன்
நெய் – 2 டீஸ்பூன்

1508235515 192

செய்முறை :

தக்காளி, வெங்காயம், புதினா, கொத்தமல்லி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். மட்டனை நன்றாக கழுவி வைக்கவும். ஒரு பாத்திரத்தில் மட்டன், இஞ்சி பூண்டு விழுது, பாதி அளவு தக்காளி, மஞ்சள் தூள், தயிர், மிளகாய்த் தூள், கொத்துமல்லி, கறிவேப்பிலை, முந்திரி விழுது, புதினா இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்துப் பிசைந்து, குளிர்சாதனப் பெட்டியில் ஒரு மணி நேரம் வைக்கவும்.

குக்கரை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் சேர்த்து, சீரகம், சோம்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், மிளகு சேர்த்து வதக்கிய பின்னர், நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு இஞ்சி விழுது மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கிய பின்னர் தக்காளி மற்றும் தேவையான மஞ்சள் தூள், மிளகாய் தூள், சோம்புத் தூள், உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கவும். அடுத்து அதில் குளிர்சாதனப் பெட்டியில் வைத்துள்ள மட்டன் கலவையை சேர்த்து, குக்கரை மூடி 5 விசில் வைத்து இறக்கவும்.

விசில் போனவுடன் குக்கரை திறந்து அரைத்து வைத்துள்ள முந்திரி விழுது மற்றும் தேங்காய் விழுதை சேர்த்து, அத்துடன் சிறிதளவு தண்ணீர் விட்டு ஐந்து நிமிடங்கள் கொதிக்க வைத்து சிறிதளவு நெய் மற்றும் கொத்தமல்லி தூவி இறக்கவும். சுவையான மட்டன் குருமா தயார்.

Related posts

வஞ்சரம் மீன் குழம்பு

nathan

இறால் மசால்

nathan

ஆந்திரா சிக்கன் குழம்பு

nathan

செட்டிநாட்டு முந்திரி சிக்கன் கிரேவி

nathan

குழந்தைகளுக்கு சத்தான கேரட் முட்டை ஆம்லெட்

nathan

செட்டிநாட்டு ஆ‌ட்டு‌க்க‌றி குழம்பு

nathan

சூப்பரான முட்டை மஞ்சூரியன்

nathan

அரைக்கீரை கொத்துக்கறி மசாலா

nathan

சுவையான மட்டன் சொதி செய்வது எப்படி

nathan