29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
04 1507110517 7 1
தலைமுடி சிகிச்சை

உருளைக்கிழங்கு தோலை கொண்டு புதிய முடிகளை வளர செய்யும் டிரிக்ஸ்!

முடி உதிர்வு பிரச்சனை என்பது ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும் பொதுவான ஒன்று தான். இன்று பலரும் அனுதினமும் நினைத்து நினைத்து கவலைப்படும் பிரச்சனைகளில் ஒன்று முடி உதிர்வு பிரச்சனை. இந்த பிரச்சனையானது, அழகு சார்ந்ததாகவும் இருக்கலாம், ஊட்டசத்து குறைபாடு காரணமாகவும் இருக்கலாம். இது சில சமயம் பரம்பரையாக தொடரும் பிரச்சனையாகவும் இருக்கலாம்.

முடி உதிர்வு பிரச்சனைக்களுக்காக நீங்கள் வாங்கிப்பயன்படுத்தும் கெமிக்கல் பொருட்களை பற்றி நீங்கள் முழுமையாக அறிந்து வைத்திருப்பது அவசியம். இது விலை அதிகமானது மட்டுமின்றி, தினசரி பயன்படுத்தும் போது, பாதிப்பை தருவதும் கூட…

அதிஷ்டவசமாக, உங்களுக்கு இயற்கையே ஒரு அருமையான பொருளை தந்துள்ளது. உருளைக்கிழங்கு அழகை பாதுகாக்கும் பொருட்களில் ஒன்றாக திகழ்கிறது. இது உங்களது முடியை சில தினங்களிலேயே ஆரோக்கியமாகவும், வளமாகவும் வளர வைக்க வல்லது.

என்ன பிரச்சனை? உங்களது முடி உடைந்து காணப்படுகிறதா? வறட்சியாக உள்ளதா? இது உங்களது முடியை வழுவிழக்கச் செய்து சீக்கிரமாக உதிர வைக்கும். உங்களது அழக்கிற்கும், ஆரோக்கியத்திற்கும் முக்கியமாக, கால்சியம், மெக்னீசியம், ஜிங்க் மற்றும் இரும்புச்சத்துக்கள் முக்கியமாக தேவைப்படுகின்றன.

எப்படி பெருவது? நீங்கள் உங்களது ஆரோக்கியத்திற்கும், அழகிற்கும் தேவையான சத்துக்களை பெற தினசரி காய்கறிகளை சாப்பிட்டாலே போதுமானது. ஆனால் இதனை நேரடியாக முடிக்கு அப்ளை செய்யும் போது மிகச்சிறந்த பலனை பெறலாம்.

உருளைக்கிழங்கு ஜூஸ் முடி உதிர்வை கட்டுப்படுத்த பல வழிகள் இருந்தாலும் கூட, ஜூஸை தலையில் அப்ளை செய்வது மிகச்சிறந்த வழியாக இருக்கும். இதில் பல விட்டமின்கள் உள்ளன. இவை உங்களது தலைமுடிக்கு தேவையான ஊட்டத்தை கொடுத்து தலைமுடியை வலிமையாக்குகிறது.

தேவையான பொருட்கள் : உருளைக்கிழங்கு – 4 தண்ணீர் – 1/2 கப் (100மிலி)

செய்முறை : 1. முதலில் உருளைக்கிழங்கை நன்றாக கழுவி, பின்னர் பெரிய பெரிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். 2. பின்னர் அரைக்கப் தண்ணீர் ஊற்றி மிக்ஸியில் போட்டு உருளைக்கிழங்கை நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும். 3. இந்த உருளைக்கிழங்கு நன்றாக அரைப்பட்டதும், அதை சுத்தமான துணியில் போட்டு, அதன் சாறை வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.

பயன்படுத்தும் முறை : உருளைக்கிழங்கு ஜூஸை முதலில் முடியின் வேர்க்கால்களில் நன்றாக தடவி, மசாஜ் செய்து கொள்ள வேண்டும். பின்னர் மீதமுள்ள ஜூஸை தலைமுடியில் தடவி மசாஜ் செய்து கொள்ளுங்கள். 20 முதல் 25 நிமிடங்கள் வரை காத்திருந்து பின்னர் முடியை மிதமான சூடுள்ள நீர் அல்லது குளிர்ந்த நீரில் அலச வேண்டும்.

எத்தனை நாட்களுக்கு ஒருமுறை : நீங்கள் பலனை கண்கூடாக பார்க்கும் வரை இதனை தினமும் செய்ய வேண்டும். அதன் பின்னர் வாரத்திற்கு மூன்று முறை இதே போன்று செய்யலாம். இந்தமுறை உங்களது முடியை மட்டும் வளர்ச்செய்வதோடு, முகத்தையும் ஒளிரச்செய்யும்.

உருளைக்கிழங்கு தோல் உருளைக்கிழங்கின் ஜூஸ் மட்டுமல்லாமல், உருளைக்கிழங்கின் தோலும் உங்களது முடியை வலிமையாக்க உதவுகிறது. இது முடி உதிர்வையும் தடுத்து நிறுத்துகிறது.

தேவையான பொருட்கள் : 1. உருளைக்கிழங்கு தோல் 2. தண்ணீர் – 1 லிட்டர்

செய்முறை : 1. உருளைக்கிழங்கு தோலை மண் இல்லாமல் நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். அதன் தோலை ஒரு லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைக்க வேண்டும். 2. சில நிமிடங்கள் உருளைக்கிழங்கு தோல் தண்ணீரில் நன்றாக கொதித்ததும், அதனை குளிர செய்ய வேண்டும்.

பயன்படுத்தும் முறை : உருளைக்கிழங்கு தோல் நீரை, முடியில் நன்றாக அலச வேண்டும். இதனை வாரத்தில் இரண்டு முதல் மூன்று தடவைகள் செய்வதன் மூலம், நல்ல பலனை பெற முடியும்.

04 1507110517 7

Related posts

உங்களுக்கு தெரியுமா வீட்டிலேயே தயாரிக்கலாம் “நேச்சுரல் ஹேர் டை”

nathan

பொடுகு தொல்லையில் இருந்து விடுதலைத் தரும் பாட்டி வைத்தியங்கள்!!!

nathan

உடலுக்கு புத்துணர்ச்சி மற்றும் உரோமத்திற்கு வளர்ச்சி.!!

nathan

ஒரே வாரத்தில் முடி உதிர்வதைத் தடுக்க தலைக்கு பூண்டு யூஸ் பண்ணுங்க…

nathan

சும்மா தலைக்கு குளிச்சா என்ன ஆகும் தெரியுமா ?

nathan

சூப்பர் டிப்ஸ்! இப்படி முடி வெடிக்குதா? தேனை இப்படி செஞ்சு அப்ளை பண்ணுங்க…

nathan

பொடுகு பிரச்சனையால் றொம்ப அவதி படுகிறீங்களா;அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

சொட்டையில் முடி வளர வைக்கும் வால் மிளகு பற்றி தெரியுமா?

nathan

கூந்தலில் நுனி பிளவா? பப்பாளி பேக் ட்ரை பண்ணுங்க

nathan