பெண்கள் தினம், தினம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளில் தலையாய பிரச்சனையாக அமைவது உள்ளாடை சமாச்சாரம்.
இதை சில சமயங்களில் பெண்கள், பெண்களிடமே பகிர்ந்துக் கொள்ள முடியாது. உள்ளாடை பிரச்சனைகள் எனும் போது, பெண்களே அவர்களை அறியாமல் செய்யும் தவறு, தவறான சைஸ் உள்ளாடை தேர்வு செய்வது தான்.
இதனால், மூச்சுத் திணறல், சரும பிரச்சனைகள், அழற்சி போன்றவை உண்டாகின்றன. இதற்கு ஒரு மாற்றாக, சிறந்த தீர்வாக எரின் ராபர்ட்சன் என்பவர் பிராவிற்கு ஒரு மாற்று உடையாக "டா டா டவல்" என்ற உள்ளாடை வகையை வடிவமைத்துள்ளார்..
அசௌகரியங்கள்! பெண்களுக்கு தங்கள் உடலை அழகாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசை கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது. அதிலும் மேலழகு சமாச்சாரத்தில் அதிக சிரத்தையுடன் காணப்படுவார்கள். இதனால், சிலர் தங்கள் அழகு நன்றாக இருக்க வேண்டும் என டைட்டாக உள்ளாடை உடுத்துவது உண்டு. இதனால், பல அசௌகரியங்கள் ஏற்படும். முக்கியமாக அதிகமாக வியர்க்கும் போது, மூச்சுவிடும் போது சிரமங்கள் உண்டாகும். முக்கியமாக., நாள்பட சரும அழற்சிகள் ஏற்படும்.
டா டா டவல்! அமெரிக்காவை சேர்ந்த எரின் ராபர்ட்சன் எனும் நபர் இதற்கான ஒரு தீர்வாக இந்த டா டா டவலை வடிவமைத்துள்ளார். இது பெண்கள் மிகவும் சௌகரியமாக உணர பல வகைகளில் உதவுகிறது. வீட்டில் நிலாக்ஸ் செய்யும் போது, பீச் செல்லும் போது மற்ற பிராக்களை அசௌகரியமாக உடுத்துவதற்கு மாற்றாக இந்த டா டா டவல் திகழ்கிறது.
டவல்! எரின் ராபர்ட்சன் இதை டவலில் இருந்து தான் வடிவமைத்துள்ளார். இவர் இது அனைத்து வயதுமிக்க பெண்களுக்கு சிறந்த வகையில் உதவும் என கருத்து தெரிவித்துள்ளார். தாய் பாலூட்டும் அம்மாக்களுக்கு, வீட்டில் கொஞ்சம் ரிலாக்ஸாக இருக்க நினைக்கும் பெண்களுக்கு இது ஒரு சிறந்த பலனளிக்கும் என்கிறார் எரின் ராபர்ட்சன்.
சொந்த வாழ்க்கை… எரின் ராபர்ட்சன் ஒரு நாள் டேட்டிங் செல்லும் போது பட்ட அவஸ்தையின் முடிவாக தான் எரின் ராபர்ட்சன் இந்த டா டா டவலை வடிவமைத்துள்ளார். மேலும், இப்போதிருக்கும் வடிவிலான பிராக்கள் அதிக வியர்வை சுரக்கவும், வியர்வை தேங்கி மார்பக பகுதியில் சரும அழற்சி உண்டாகவும் காரணமாக இருக்கிறது. இதற்கு சிறந்த தீர்வளித்துள்ளது டா டா டவல் என கூறியுள்ளார் எரின் ராபர்ட்சன்.
தோழி! பிரா அணிந்து வியர்வை தேங்கி சரும அழற்சியால் அவதிப்பட்டு வந்த தனது தோழிக்கு, இந்த டா டா டவல் நல்ல மாற்றத்தை உணர செய்ததாகவும். இதை பயன்படுத்த ஆரம்பித்த சில நாட்களிலேயே தோழிக்கு உண்டாகியிருந்த சரும அழற்சி குறைய துவங்கியது என்றும் எரின் ராபர்ட்சன் கூறியுள்ளார்.
வியர்வை உறிஞ்சும்! சரியான அளவாக இருப்பினும் இதர வகை பிராக்கள் அணியும் போது பெண்களுக்கு இந்த வியர்வை பிரச்சனை ஏற்படும் வாய்ப்புகள் இருக்கின்றன. இந்த அசௌகரியத்தை இந்த டா டா பிரா முற்றிலும் போக்கும். இது உடுத்தவும், கழற்றவும் கூட மிகவும் எளிமையானது. இதனால், எந்த விதமான சிரமத்திற்கும் பெண்கள் ஆளாகமாட்டார்கள் என எரின் ராபர்ட்சன் கூறியுள்ளார்.