24.7 C
Chennai
Saturday, Dec 13, 2025
images
கூந்தல் பராமரிப்புதலைமுடி சிகிச்சை

எந்த ஷாம்பூ போட்டீங்க… கண்டிஷனரா? சில்க் டைப்பா? டிரையா..

ஆண், பெண் இருவருக்கும் குளியலில் முக்கிய பங்கு வகிப்பது ஷாம்பூ. ‘எந்த ஷாம்பூ போட்டீங்க… கண்டிஷனரா? சில்க் டைப்பா? டிரையா…’ இப்படி பலர் கேட்பதுண்டு. கடைகளில் வகை வகையான ஷாம்பூகள் விற்பனையாகின்றன. இவைகளுக்கு நிகராக இயற்கையும் சில ஷாம்பூகளை நமக்கு தந்திருக்கின்றன. அவற்றை பார்ப்போமா?

images* வெட்டிவேர், விலாமிச்சை வேர், கோரைக்கிழங்கு, பூலான்கிழங்கு, சந்தனச்சிறாய், பாசிப்பயறு என அத்தனையையும் சமமான அளவில் எடுத்து அரைத்து பொடி போல செய்யவும். இதுதான் நலுங்கு மாவு. இதனை தலை, உடம்பில் அழுத்தித் தேய்த்துக் குளித்தால், அடிக்கிற வெயிலுக்கு புத்துணர்ச்சியாக இருக்கும்.

* தண்ணீரில் சிகைக்காய்களை நன்றாக ஊற விட்டு, சிறிதளவு வெந்தயம் சேர்த்து நன்றாக அரைக்கவும். (சில மாவு மில்களிலும் அரைக்கின்றனர்). இதனை கிண்ணத்தில் எடுத்து நல்லெண்ணெய் குளியலின்போதோ அல்லது தனியாகவோ தலையில் தேய்த்து குளித்தால் முடி பொலிவு பெறும்.

* ஆவாரை இலை, பூக்கள் பறித்து அதை நன்றாக நைத்து தலைக்கு தேய்த்து குளிக்கலாம். கண்ணெரிச்சல் நீங்கும். உடல் குளிர்ச்சியுடன் சர்க்கரை நோயில் ஏற்படும் அரிப்புக்கும் இது சிறந்தது. இதேபோல் உசில மரத்து இலைகள் பறித்து காயவைத்து பொடி செய்தும் குளிக்கலாம். எள்ளுச்செடியை பறித்து வந்து, அப்படியே அரைக்கும்போது பொங்கும் நுரையை தேய்த்துக் குளித்தால் தலையில் உள்ள அழுக்குகள் வெளியேறும்.

* எண்ணெய் எடுத்து மிஞ்சிய இலுப்பைப் புண்ணாக்கை ‘தலைப்புண்ணாக்கு’ என அழைப்பதுண்டு. இதனை பொடி செய்து தலைக்கு பூசி 10 நிமிடங்கள் ஊற வைத்து குளிக்க தலைவலி, மண்டைக்கரப்பான், முடி உதிர்தல் என அனைத்தும் நீங்கும்.

Related posts

உங்க தலையில வெள்ளை முடி அதிகமா இருக்கா? அதைப் போக்க இதோ சில வழிகள்!

nathan

முடி கொட்டுவதை தடுக்கும் நெல்லிக்காய் தைலம்! மருத்துவ டிப்ஸ்!!

nathan

முடிக்கு அதிக அளவில் ஈர்ப்பத்தை ஏற்படுத்தி, முடி கொட்டாமல் பார்த்து கொள்ள சில வழிகள்!…

sangika

குளிரில் கொட்டுமா முடி?

nathan

வீட்டிலேயே சீயக்காய் தயாரிப்பது பற்றி

nathan

பட்டுப் போன்ற கூந்தல் கிடைக்க செம்பருத்தி மாஸ்க்!

nathan

கூந்தல் பிரச்சனையை தீர்க்கும் நெல்லிக்காய் எண்ணெய்

nathan

கட்டுக்கடங்காமல் முடி வளர்வதற்கு 1 ஸ்பூன் கிராம்பு போதும்.தெரிந்துகொள்வோமா?

nathan

கூந்தலுக்கு ஆரஞ்சு தோல் சிகிச்சை

nathan