26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
Samba rice chicken biryani
அசைவ வகைகள்

சீரக சம்பா அரிசி சிக்கன் பிரியாணி

தேவையான பொருட்கள்:

சிக்கன் -அரை கிலோ
சீரக சம்பா அரிசி -1 கப்
பெரிய வெங்காயம்-1
தக்காளி -1
கொத்தமல்லி தழை -1 கப்
பச்சை மிளகாய் -2
மஞ்சள் தூள் -அரை டீஸ்பூன்
மிளகாய் தூள் -1 டேபிள் ஸ்பூன்
மல்லி தூள் -2 டேபிள் ஸ்பூன்
உப்பு -தேவையான அளவு
எண்ணெய் -தேவையான அளவு
இஞ்சி பூண்டு பேஸ்ட் -2 ஸ்பூன்
பட்டை -2
கிராம்பு -2
ஏலக்காய் -2
பிரியாணி இலை-1
செய்முறை:

முதலில் வெங்காயத்தையும் மற்றும் தக்காளியையும் தனி தனியாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லி தழையும் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும். அரைத்து வைத்த பின்பு ஒரு பாத்திரத்தில் சிக்கனுடன் அரைத்து வைத்த வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி தழை மற்றும் மஞ்சள் தூள், உப்பு, மிளகாய் தூள், மல்லி தூள், தயிர், இஞ்சி, பூண்டு பேஸ்ட் எல்லாவட்டரையும் சேர்த்து பிசைந்து அரைமணி நேரம் உற வைத்துக் கொள்ளவும்.
பின்பு குக்கரில் எண்ணெய் ஊற்றி அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, பொருட்களை போட்டு எண்ணெய் சேர்த்து தாளித்த பின்பு அதில் உற வைத்த சிக்கனை போட்டு சிறிது நேரம் வேக விடவும்.
வேக வைத்த பின்பு அதில் அரிசியையும் போட்டு கிளறி விட்டு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி விட்டு இரண்டு விசில் விட்டு பத்து நிமிடம் சிமிழ் வைத்து இறக்கவும்.
சிக்கன் பிரியாணி ரெடி.
குறிப்பு: (சீரக சம்பா அரிசி ஒரு கப் அரிசி வைத்தால் ஒன்றை கப் தண்ணீர் ஊற்றினால் போதும் அதிகம் தண்ணீர் ஊற்றினால் சாதம் குழைந்து விடும்.
Samba rice chicken biryani

Related posts

புதினா சிக்கன்

nathan

நண்டு ஃப்ரை

nathan

சைனீஸ் ப்ரைட் ரைஸ் : செய்முறைகளுடன்…!

nathan

பாசிப்பருப்பு பொரித்த முட்டை குழம்பு!!

nathan

சுவையான மசாலா மீன் ப்ரை

nathan

கேரளா சிக்கன் ரோஸ்ட் மசாலா

nathan

சுவையான சில்லி சிக்கன் கிரேவி | chilli chicken gravy

nathan

எண்ணெய்யில் பொறித்த காரசாரமான மட்டன் லெக் பீஸ்

nathan

சுவையான காஷ்மீரி மட்டன் ரெசிபி

nathan