28.3 C
Chennai
Tuesday, Jul 15, 2025
Chettinad Chicken Biryani
அசைவ வகைகள்

செட்டிநாடு மட்டன் பிரியாணி

என்னென்ன தேவை?

பாஸ்மதி – 4கப்
அரிந்த வெங்காயம் – 2
அரிந்த தக்காளி – 2
கறிவேப்பிலை – சிறிதளவு
தயிர் – 1/2 கப்
நெய் – 2 டேபிள்ஸ்பூன்
உப்பு, எண்ணெய் – தேவைக்கு

மட்டனில் வேகவைக்க

மட்டன் – 1/2கிலோ
வரமிளகாய்த்தூள் – 2டீஸ்பூன்
மஞ்சள்தூள் – 1 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது – 1 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு

அரைக்க:

காய்ந்த மிளகாய் – 2
பச்சை மிளகாய் – 2
சின்ன வெங்காயம் – 10
பூண்டு – 10
சோம்பு – 1 டீஸ்பூன்
கிராம்பு – 2
ஏலக்காய் – 2
இஞ்சி – 1 சிறுதுண்டு
புதினா – 1கைப்பிடி

தாளிக்க:

பிரியாணி இலை – 2
கிராம்பு – 3
பட்டை – 1துண்டு
ஏலக்காய் – 2
சோம்பு – 1டீஸ்பூன்
எப்படிச் செய்வது?

குக்கரில் சிறிது எண்ணெய் விட்டு மட்டனில் வேக வைத்துள்ள பொருட்களைப் போட்டு சிறிது உப்பு மற்றும் நீர் விட்டு 3விசில் வரை வேக வைக்கவும். அரைக்க கொடுத்துள்ளவைகளை நைசாக அரைக்கவும். அரிசியை கழுவி 10 நிமிடம் ஊற வைக்க்வும். கடாயில் 1டேபிள்ஸ்பூன் நெய் விட்டு அரிசியை 5நிமிடம் வதக்கி தனியாக வைக்கவும். வேகவைத்த மட்டனிலிருந்து மட்டனை தனியாகவும் தண்ணீரை அளந்தும் வைக்கவும்.

குக்கரில் மீதமுள்ள நெய்+எண்ணெய்யை விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களைப் போட்டு தாளித்து வெங்காயம்,கறிவேப்பிலை,அரைத்த மசாலா,தக்காளி,மட்டன், தயிர் அனைத்தையும் ஒன்றன்பின் ஒன்றாக போட்டு வதக்கவும். 4கப் அரிசிக்கு 6கப் தண்ணீர் வைக்க வேண்டும். மட்டனில் வேகவைத்த நீரின் அளவுடன் மீதி அளவு நீர் விட்டு கொதிக்க விடவும். உப்பு மற்றும் புதினா சேர்க்கவும். ஆவி போனவுடன் மல்லித்தழை தூவி பரிமாறவும்.
Chettinad Chicken Biryani

Related posts

காரசாரமான முட்டை குழம்பு செய்முறை விளக்கம்

nathan

உருளைக்கிழங்கு – முட்டை ஆம்லெட்

nathan

சுவையான சில்லி சிக்கன் கிரேவி | chilli chicken gravy

nathan

சிக்கன் கிரேவி / Chicken Gravy

nathan

புதினா ஆம்லேட்

nathan

சுவையான மஸ்ரூம் பெப்பர் ப்ரை

nathan

சூடான சுவையான சில்லி கார்லிக் சிக்கன் விங்ஸ்!

nathan

கொத்து பரோட்டா

nathan

வறுத்தரைத்த சாளை மீன் குழம்பு

nathan