24.7 C
Chennai
Saturday, Dec 13, 2025
07 1502084211 31 1490954758 1
சரும பராமரிப்பு

அழகுக்கலை வல்லுனர்களால் மட்டுமே சில விஷயங்களை சிறப்பாக செய்ய முடியும்

மருக்களை நீக்குதல்
07 1502084211 31 1490954758 1
மருக்களை நீக்குவதற்கு நூல் போன்ற பொருட்களை கொண்டு மருவிற்கு செல்லும் இரத்த ஓட்டத்தை தடுத்து நிறுத்தி, மருக்கள் நீக்கப்படுகின்றன. இந்த சிகிச்சையை நீங்கள் வீட்டில் செய்தால் அது முற்றிலும் தவறானது. அதிக இரத்த கசிவை ஏற்படுத்திவிடும்.
07 1502084038 1
வாக்சிங்
வீட்டிலேயே வாக்சிங் செய்வதை சரியான முறை என்றும் கூறலாம், தவறான முறை என்றும் கூறலாம். வாக்சிங் செய்யும் போது மிகுந்த கவனத்துடன் செய்ய வேண்டியது அவசியம். கவனமில்லாமல் செய்தால் ஒரு சில நேரங்களில் தோல் உரிந்து வந்துவிடக்கூடும்.
07 1502084120 3
கரும்புள்ளிகளை நீக்குதல்
கரும்புள்ளிகளை வேருடன் பிடுங்குவதற்கான சிகிச்சையை நாம் வீட்டிலேயே செய்தால், தொற்றுக்கள் ஏற்பட்டுவிடும். இது ஆபத்துகளை விளைவிக்கும். எனவே நீங்கள் முகப்பருக்களை பிடுங்குதல் மற்றும் கரும்புள்ளிகளை பிடுங்குதல் போன்றவற்றை மருத்துவரிடமே விட்டுவிடுவது நல்லது.
07 1502084147 4
டை அடிப்பது!
கண் இமைகளுக்கு நீங்கள் டை அடிப்பவராக இருந்தால், இதனை வீட்டில் முறையான பயிற்சி இன்றி செய்யாதீர்கள். இவ்வாறு செய்தால், கெமிக்கல்கள் கண்ணுக்குள் சென்று விட நீங்களே காரணமாகிவிடுவீர்கள். எனவே இதனை அழகுக்கலை நிபுணர்களிடம் விட்டுவிடுங்கள்.
07 1502084068 2
திரெட்டிங்
திரெட்டிங் சிறந்த அழகுக்கலை நிபுணர்களிடம் செய்வதே மிகச்சிறந்தது. கண்களின் அருகில் மிக முக்கிய நரம்புகள் இருக்கும். இதனை கையாள தெரியாமல் செய்வது பெரும் ஆபத்தில் கொண்டு சேர்க்கும்.

Related posts

தெரிந்துகொள்வோமா? உடல் சூட்டை தணிக்க சில ஸ்பெஷல் குளு குளு குளியல்கள்!!

nathan

முகத்தில் சுருக்கம், முதிர்ச்சி ஆகியவற்றை தடுக்க அவகாடோ வை இவ்வாறு பயன்படுத்துங்கள்!…

nathan

கோடையில் சரும எரிச்சலை போக்கும் வழிமுறைகள்

nathan

அவசியம் படிக்க.. கழுத்தில் இருக்கும் கருமை நீங்க வேண்டுமா? இதோ சூப்பரான டிப்ஸ்

nathan

வேனிட்டி பாக்ஸ்: பாடி வாஷ்

nathan

எண்ணெய் பசை சருமம் உஷார்! இதோ அற்புதமான எளிய தீர்வு

nathan

காலையில் எழுந்ததும் இவற்றை செய்து பாருங்கள்!….

sangika

மூன்றே மாதத்தில் சரும கருமையை போக்கும் ஃபேஸ் பேக்

nathan

உபயோக அழகு‌க் கு‌றி‌ப்புக‌ள்

nathan