இந்த எண்ணெய் வழிதலின் முக்கிய காரணம் என்ன என்று பார்த்து அதற்கான தீர்வு எடுக்க வேண்டியது அவசியம். அதுமட்டுமில்லாமல் இயற்கை வழியில் என்ன தீர்வு உள்ளது என்பதை ஆராய்வதும் அவசியம்.
ரோஸ் வாட்டர் மற்றும் கற்பூரம்
தேவையான பொருட்கள்
1. 200 மிலி ரோஸ் வாட்டர்
2. 2 டீஸ்பூன் கற்பூரம்
செய்முறை
ரோஸ் வாட்டரில் கற்பூரத்தை கலந்து பிரிட்ஜில் சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும். இது முகப்பருக்களை மட்டுமில்லாமல், முகத்தின் நிறம், சருமத்தில் உள்ள கிருமிகள், அரிப்பு, முகப்பருக்களால் உண்டான குழிகள் ஆகியவற்றையும் போக்கும்.
முகப்பருவிற்கான ஃபேஸ் பேக்
ஆண்கள் முகப்பருக்களை கிள்ளுதல் போன்ற வேலைகளில் ஈடுபடுவார்கள். இது மிகப்பெரிய தொல்லையாக இருக்கும். தொல்லை தரும் முகப்பருக்களுக்கு இந்த ஃபேஸ் பேக் உதவியாக இருக்கும்.
தேவையான பொருட்கள்
அரை டீஸ் பூன் கற்பூரம்
2 டீஸ்பூன் புதினா விழுது
2 கிராம்பு ரோஸ் வாட்டர்
1 டீஸ்பூன் சந்தன பவுடர்
செய்முறை
இந்த அனைத்து பொருட்களையும் நன்றாக கலக்க வேண்டும். பின்னர் இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி, நன்றாக காய்ந்ததும், முகத்தை நீரினால் கழுவி விட வேண்டும். இந்த பேஸ்டை பிரிட்ஜில் வைத்து 10 நாட்கள் வரை தினமும் பயன்படுத்தலாம்.