தேவையான பொருட்கள்:
மட்டன் – 1/4 கிலோ
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
தனியா தூள் – 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
இஞ்சி,பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
வெங்காயம் – 2 பொடியாக
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – ஒரு குழிக்கரண்டி
பட்டர் – 1/2 தேக்கரண்டி
கொத்தமல்லி – சிறிதளவு
பட்டை – சிறிதளவு
செய்முறை:
மட்டனை கழுவி சுத்தம் செய்து அதனுடன், மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் தூள், இஞ்சி, பூண்டு விழுது மற்றும் உப்பு சேர்த்து நன்கு வேகவைத்து, தண்ணீர் முழுவதும் சுண்டியவுடன் இறக்கவும்.
கடாயில் எண்ணெய் மற்றும் பட்டர் போட்டு காய்ந்ததும் பட்டை சேர்த்து பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கி பிறகு வேகவைத்த மட்டனை போட்டு நன்றாக வறுத்து இறக்கும்போது மிளகுத் தூள், எலுமிச்சை சாறு, கொத்தமல்லி தூவி சிறிது நேரம் கழித்து இறக்கவும். நன்கு ட்ரையாக வரும்வரை வைத்திருந்து பிறகு இறக்க வேண்டும்.
குறிப்பு: தேவைப்பட்டால் தக்காளியை ஒன்று அல்லது இரண்டு சேர்த்து கொள்ளலாம்.