25.9 C
Chennai
Sunday, Feb 23, 2025
10 1502361616 1
சரும பராமரிப்பு

பார்லர் அழகு வீட்டிலிருந்தபடியே பெறலாம்!!உங்களுக்காக சின்ன சின்ன அழகுக் குறிப்புகள்!!

தங்களை அழகாக காட்டிக்கொள்ள வேண்டும் என்று விரும்பாதவர்கள் யாருமே இருக்க முடியாது. முகத்தையும் சருமத்தையும் பராமாரிக்க கடைகளில் கிடைக்கும் க்ரீம்களை பயன்படுத்துவதை விட வீட்டிலேயே எளிய முறையில் தயாரிக்கப்படும் பொருட்களைக் கொண்டு பராமரிக்கலாம். செயற்கையை விட இயற்கைக்கு என்றுமே மதிப்புண்டு. இயற்கையான முறையில் நீங்கள் வீட்டிலேயே தயாரிக்கும் பொருள் என்பதால் அவற்றில் கலப்படம் இருக்குமோ அதனால் சருமத்திற்கு பாதிப்பு உண்டாகுமோ என்று கவலைப்பட வேண்டாம்.

உங்கள் அழகை பராமரிக்க வீட்டிலேயே செய்யக்கூடிய சில எளிய டிப்ஸ்

உதடுகளுக்கு : இரவில் படுக்க போகும் போது வெண்ணையை உதட்டில் தடவிக் கொள்ள வேண்டும்.அதனை துடைக்கத் தேவையில்லை மறுநாள் காலையில் வழக்கம் போல உங்கள் வேலையை தொடரலாம். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் உதடு பொலிவுடன் இருக்கும்.

வெப்பம் : அதிக உடற்சூட்டினாலோ அல்லது வெயில் அதிகம் அலைபவர்களுக்கு முகத்தில் புள்ளிகள் தோன்றும், இதற்கு முள்ளங்கி சாறுடன் இரண்டு ஸ்பூன் மோர் கலந்து முகத்தில் தடவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

கருமை : வெயிலினாலோ அல்லது முகத்தை சரியாக பராமரிக்கவில்லை என்றாலோ முகத்தில் கருமை தோன்றும். இதனை போக்க, வேப்பங்கொழுந்து சிறிதளவு ஆரஞ்சு பழத்தோல் சிறிதளவு மற்றும் கஸ்தூரி மஞ்சள் மூன்றையும் சம பங்காக கலந்து பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதனை கருமை படந்துள்ள இடங்களில் தடவி நன்றாக காய்ந்ததும் கழுவி விடலாம்.

கண்கள் : கண்களில் வருகின்ற முக்கிய பிரச்சனையாக இப்போது கருவளையம் மாறிவிட்டது. இதனை போக்க, கண்களைச் சுற்றி பாதாம் ஆயில் தடவி லேசாக மசாஜ் செய்திடலாம். அல்லது கொத்தமல்லிச் சாறு எடுத்து கண்களைச் சுற்றி தடவினால் நல்ல பலன் கிடைக்கும்.

சருமம் : கைகால்களில் பொரிப்பொரியாக இருக்கும். அதனை போக்க பார்லி பவுடர் 4 டீ ஸ்பூன் மஞ்சள் தூள் 1டீஸ்ப்பன் கலந்து தடவி வாருங்கள். இதனால் சருமத்தில் பொரிப்பொரியாக இருப்பது குறைவதுடன் சருமத்திற்கு பொலிவாகவும் இருக்கும்

கழுத்து : அதிகமாக வியர்வை சுரக்கும் இடமான கழுத்தில் ஏற்படும் சுருக்கங்களை நீக்க முட்டையின் வெள்ளைக் கரு, கிளிசரீன், ரோஸ்வாட்டர் மூன்றையும் ஒன்றாக கலந்து பேஸ்ட்டாக்கி கழுத்தில் தடவி அரைமணி நேரம் கழித்து கழுவுங்கள்.

10 1502361616 1

Related posts

எப்பவுமில்லாம உங்க சருமம் புதுசா ஜொலிக்கனுமா? இந்த ஒரு ரெசிபி ட்ரை பண்ணுங்க!!

nathan

அழகை கெடுப்பது போலிருக்கும் மச்சத்தை நீக்க வேண்டுமா? இதை முயன்று பாருங்கள்

nathan

தோல் பளபளப்பாக!

nathan

அசிங்கமாக தொங்கும் மார்பகங்களை சிக்கென்று மாற்ற வேண்டுமா? அப்ப இத ட்ரை பண்ணுங்க…

nathan

சருமத்திற்கு அழகு சேர்க்கும் மூலிகை மருத்துவ டிப்ஸ்

nathan

உடல் நாற்றம்… எப்படித் தவிர்க்கலாம்?

nathan

அக்குளில் இருக்கும் கருப்பைப் போக்குவதற்கான சில எளிய வழிகள்!!!

nathan

ஷவரில் குளிப்பதற்கு முன் நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்!!

nathan

சரும சுருக்கத்தை தவிர்க்க

nathan