32.7 C
Chennai
Sunday, Feb 23, 2025
1503043216 142
அசைவ வகைகள்

சுவையான சிக்கன் லெக் ஃப்ரை செய்ய தெரியுமா…!

தேவையான பொருட்கள்:

சிக்கன் – 1 கிலோ (லெக் பீஸ் அல்லது மார்பக பீஸ்)
இஞ்சி பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்
பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்
சோயா சாஸ் – 1 டேபிள் ஸ்பூன்
சில்லி சாஸ் – 1 டேபிள் ஸ்பூன்
தக்காளி சாஸ் – 1 டேபிள் ஸ்பூன்
மிளகு தூள் – 1 டீஸ்பூன்
உப்பு – 1 1/2 டீஸ்பூன்
தண்ணீர் – 1 கப்
மைதா – 1 1/2 கப்
முட்டை – 1 (நன்கு அடித்துக் கொள்ளவும்)
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
மிளகு தூள் – 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

கோட்டிங் செய்ய:

பிரட் தூள் – தேவையான அளவு
எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

முதலில் சிக்கன் துண்டுகளை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். பின்னர் அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் தக்காளி சாஸ், சோயா சாஸ், சில்லி சாஸ், இஞ்சி மற்றும் பூண்டு பேஸ்ட், மிளகு தூள், உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் அடுப்பில் வைத்து, சிக்கன் முக்கால்வாசி வெந்ததும், அதனை இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு மற்றொரு பாத்திரத்தில் மைதா, உப்பு, மிளகு தூள், மஞ்சள் தூள், அடித்து வைத்துள்ள முட்டை மற்றும் தண்ணீர் ஊற்றி சற்று நீர்மமாக கலந்து கொள்ள வேண்டும். பிறகு ஒரு தட்டில் பிரட் தூளை போட்டு வைத்துக் கொள்ள வேண்டும்.

பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சிக்கன் துண்டை எடுத்து, மாவில் நனைத்து, பிரட் தூளில் பிரட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். இதுபோன்று அனைத்து சிக்கன் துண்டுகளையும் செய்தால், சுவையான கேஎஃப்சி ஸ்டைல் சிக்கன் ரெடி.1503043216 142

Related posts

சூப்பர் தயிர் சிக்கன் : செய்முறைகளுடன்…!

nathan

உருளைக்கிழங்கு மீன் குழம்பு,

nathan

கணவனை அசத்த….. சூப்பரான கனவா மீன் தொக்கு!….

sangika

சுவையான கூர்க் ஸ்டைல் ப்ரைடு சிக்கன்

nathan

மட்டன் குருமா செய்ய வேண்டுமா…!

nathan

பெண்களே கேஎஃப்சி சிக்கனை வீட்டிலேயே செய்ய ஆசையா..?

nathan

தக்காளி ஆம்லெட்

nathan

இறால் கறி

nathan

சீரக சம்பா அரிசி சிக்கன் பிரியாணி

nathan