உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தும் ஓர் கண்ணாடியாக இருப்பது உங்களுடைய முகம் தான். உங்களை அடையாளப்படுத்த பயன்படுத்திடும் முகத்தை பராமரிக்க விளம்பரங்களை பார்த்தும் விதவிதமான மருத்துவங்களை முயற்சித்து வருகிறோம்.
பேஷியல், ப்ளீச் போன்றவற்றை செய்தும், வீட்டில் உள்ள பொருட்களை வைத்தும் முகத்திற்கு பல்வேறு மெனக்கடல்களை எடுத்து வருகிறோம். இதே நேரத்தில் முகத்தில் தடவக்கூடாத விஷயங்களைப் பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்.
ஷாம்பு : முகமும் முடியும் வெவ்வேறு வகையிலான திசுக்களால் ஆனது. தலைமுடிக்கு வீரியமிக்க பொருட்கள் தேவைப்படும் ஏனென்றால் அவை தலையில் படிந்திருக்கும் அழுக்கு மற்றும் எண்ணெயை போக்க வேண்டும். ஆனால் முகத்தில் மைல்ட்டான பொருட்களை பயன்படுத்தினாலே போதுமானது. ஷாம்பு வில் இருக்கும் கெமிக்கல் சருமத்திற்கு பயன் தராது. இதனை பயன்படுத்தினால் முகம் விரைவில் வறண்டு போய்விடும்.
ஹேர் கலர் : ஹேர் கலரிங் செய்யும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கலரிங்கில் இருக்கும் அதிகப்படியான கெமிக்கல்கள் உங்கள் சருமத்திற்கு அலர்ஜியை ஏற்படுத்திடும். பாக்கெட்டுகளில் புருவங்கள் மற்றும் மீசைக்கு கலரிங் செய்ய விரும்புபவர்கள் கெமிக்கல் கலந்த கலரிங் பயன்படுத்துவதை விட இயற்கையன முறையில் தயாரிக்கும் வண்ணங்களை பயன்படுத்தலாம்.
சீரம் : தலை முடிக்கு பயன்படுத்தும் சீரம் முகத்தில் படக்கூடாது. தலைமுடியை மிருதுவாக்க பயன்படுத்தப்பட்டாலும் சருமத்திற்கு அரிப்பு ஏற்படுத்தும். அதோடு ஹேர் சீரமில் அதிகளவு வாசம் இருப்பதாலும் முகத்தில் பயன்படுத்துவதை தவிர்த்திடுங்கள்.
ஸ்ப்ரே : ஹேர் ஸ்டைல் செட் ஆக ஸ்ப்ரே பயன்படுத்துவார்கள். அதை முகத்திலும் அடித்துக் கொண்டால் மேக்கப் அப்படியே நிக்கும் என்று சிலர் நம்பி ஹேர் ஸ்ப்ரேயை முகத்திற்கும் பயன்படுத்தி வருகிறார்கள். இது முற்றிலும் தவறானது. ஸ்ப்ரேயில் ஆல்கஹால் மாற்றும் லாக்குவர்ஸ் என்ற திரவம் உள்ளது. இவை உங்கள் சருமத்தை வறண்டதாக்கிவிடும்.
பாடி லோஷன் : உடலில் உள்ள ஒவ்வொரு பகுதி சருமத்திற்கும் ஒவ்வொரு மாதிரியான க்ரீம்கள் தேவைப்படும். உடலுக்கு பயன்படுத்தும் லோஷனை முகத்திற்கும் சேர்த்து பயன்படுத்தக்கூடாது. பாடி லோஷன் எப்போதும் அடர்த்தியாகவும் அதே சமயம் வாசமுள்ளதாகவும் இருக்கும். இதனை உங்கள் முகத்திற்கு பயன்படுத்தக்கூடாது.
ஃபுட் க்ரீம் : அதிகளவு யாரும் பயன்படுத்துவதில்லை என்றாலும் ஓர் எச்சரிக்கையாக இந்த தகவல். ஃபுட் க்ரீம் எப்போதும் மிகவும் அடத்தியான கெமிக்கல்கள் இருக்கும். அதோடு காலில் இருக்கும் கடினமான இறந்த செல்களை நீக்க பயன்படும் இந்த க்ரீமை கண்டிப்பாக முகத்திற்கு பயன்படுத்தாதீர்கள்.
மயோனைஸ் : முடிகளுக்கு மயோனைஸ் தாரளமாக பயன்படுத்தலாம். நல்ல பலன் கிடைத்திடும். ஆனால் இதனை முகத்திற்கு பயன்படுத்தக்கூடாது. இதிலிருக்கும் அமிலம் முக துவாரங்களை அடைத்துவிடும். இதனால் சருமத்தில் சுரக்கும் எண்ணெய் வெளியேற முடியாமல் பருவாக மாறிடும்.
வினிகர் : வினிகரை முகத்தில் டோனராக பயன்படுத்துவதுண்டு. இவை சருமத்தில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி விடும். மிகக்குறைந்த அளவே பயன்படுத்த வேண்டும். அதிகளவு பயன்படுத்தினால் அவை முகத்தில் எரிச்சலை ஏற்படுத்தும். அதனால் உங்கள் சருமத்தின் தன்மைக்கேற்ப டோனரை வாங்கி பயன்படுத்துங்கள்.