தற்போதைய பருவகால மாற்றங்கள் மிகவும் கடுமையானதாக உள்ளது. பனி மற்றும் அனல் காற்று நம் சருமத்திற்கும் கூந்தலுக்கும் பெரும் அழிவை ஏற்படுத்துகிறது. ஆனாலும் உங்கள் கூந்தலை காட்டிலும் சருமமே மிக அதிகமாக பாதிப்படைகிறது. உங்கள் சருமம் மிக உலர்ந்து நிறமிழந்து அரிப்பும் எரிச்சலும் தருவதாக மாறிவிடுகிறது. சருமம் மிகவும் உலர்ந்து சிறந்த மாய்ஸ்ட்ரைஸர் உபயோகித்தும் கூட பயனில்லாமல் போக வாய்ப்புள்ளது. சருமத்தின் மேல்படலத்தில் தேவையான ஈரப்பத்தமில்லாமல் போனால் சருமம் வறட்சியடைகிறது. வயதானவர்களுக்கு இது பொதுவாக இருக்கும் பிரச்சினை தான் என்றாலும் இன்றைய சமநிலையற்ற வானிலையாலும் சுற்றுப்புற மாசுபாடுகளாலும் இளவயதினரையும் சரும வறட்சி பிரச்சினைகள் குறிவைக்கிறது. செயற்கை குளிரூட்டி பயன்படுத்துதல் மற்றும் போதிய அளவு நீர் அருந்தாமல் இருத்தல் போயன்றவையும் சரும வறட்சிக்கு மற்ற காரணிகளாகும். ஆனால் குளிர்காலங்களில் இந்நிலை மிக மோசமாகிறது.
பெரும்பாலான மக்கள் இந்த சரும வறட்சி பிரச்சினையை சந்திக்கிறார்கள். இந்த சமயத்தில் நம் சருமத்திற்கு அதிகமான அளவிலான டி. எல். சி (Total Leucocytes Count – TLC) தேவைப்படுகிறது. லோஷன்களும் மாய்ஸ்ட்ரைசர்களும் தற்காலிகமாக இந்த பிரச்சினைகளை எதிர்கொள்கிறது. ஆனால் நீங்கள் முழுமையாக சரும வறட்சிக்கு தீர்வு காண விரும்பினால் இயற்கை முறை தயாரிப்புகளை நாடுவதே சிறந்தது.
சரும வறட்சியை தடுக்கும் சக்திவாய்ந்த இயற்கை வைத்திய முறைகளில் ஒன்று ஓட்ஸ். இது உங்களுக்கு வியப்பளிக்கலாம். ஏனெனில் பெரும்பாலும் ஓட்ஸ் சருமத்தின் மாசுகளை நீக்குவதற்கு மட்டுமே பயன்படுத்துகிறது. மேலும் உலர்ந்த சருமத்தை மீட்க ஓட்ஸ் உபயோகிக்க எந்த பரிந்துரையும் இல்லை மற்றும் ஓட்ஸ் சருமத்திற்கு இன்னும் வறட்சியை தரும் என்றே நினைக்கிறீர்களா? உங்களது கணிப்பு தவறு. ஓட்ஸ் நல்ல ஈரப்பதமூட்டியாக, அழற்சி எதிர்ப்பானாக, ஆன்டிஆக்ஸிடெண்டாக மற்றும் பல புத்துணர்வூட்டும் காரணிகளை உள்ளடக்கியுள்ளது. மேலும் இது சருமத்தை அழகாக கூடிய எண்ணற்ற உயிர் மூலக்கூறுகளை உள்ளடக்கியுள்ளது. இது சருமத்தோடு ஒரு பிணைப்பாக இருந்து எரிச்சலூட்டும் காரணிகளிடமிருந்து உங்கள் சருமத்தை பாதுகாக்கிறது. மேலும் சருமப்படலத்திற்கு ஈரப்பதமூட்டும் பாலிசாக்ரைடுகளை உள்ளடக்கியுள்ளது.
ஓட்ஸிலுள்ள உணர்ச்சியூட்டும் உள்ளடங்கங்கள் அரிப்பிலிருந்து உங்கள் சருமத்தை பாதுகாக்கிறது. மிகச்சிறிய ஓட்ஸ் இத்தனை நற்பலன்களை கொண்டுள்ளதென்று யாருக்கு தெரியும்? சரும வறட்சியிலுருந்து காக்கும் அழகுபடுத்தும் திட்டங்களில் ஓட்ஸை சேர்த்த சில வழிகள்
1. மாய்ஸ்டர்ஸிங் ஓட்ஸ் கிரீம் தேவையான பொருட்கள்:
½ கப் ஓட்ஸ்
¾ கப் தேங்காய் எண்ணெய்
5 துளி லாவெண்டர் எண்ணெய்
செய்முறை
1) ஓட்ஸை நன்கு பொடியாக அரைத்துக் கொள்ளவும்
2) தேங்காய் எண்ணெய் சூடாக்கவும்
3) தேங்காய் எண்ணெய் முழுதும் திரவாமனதும் அடுப்பை அணைத்துவிட்டு எண்ணெய்யில் ஓட்ஸ் பொடியை
போடவும்.
4) புருடுகள் இல்லாதவாறு எண்ணெய்யில் ஓட்ஸை நன்கு கலக்கவும்
5) லாவெண்டர் எண்ணெய்யை அதோடு சேர்த்து நன்கு கலக்கவும்
6) சுத்தமான ஒரு கிண்ணத்தில் போட்டுவைத்து, தினசரி முகத்தில் போசம் கிரீமாக பயன்படுத்துங்கள்.
2. ஓட்ஸ் மற்றும் வாழைப்பழ மாஸ்க் (MASK) வாழைப்பழம் சிறந்த ஈரப்பதமூட்டியாக இருக்கும். மேலும் ஓட்ஸோடு சேர்ந்து உங்கள் சருமத்தில் பல அற்புதங்களை செய்யும்.
தேவையான பொருட்கள்
1 கப் ஓட்ஸ்
1 பழுத்த வாழைப்பழம்
2 டேபிள் ஸ்பூன் வெதுவெதுப்பான பால்
செய்முறை
1) ஓட்ஸை நன்கு பொடியாக அரைத்துக் கொள்ளவும்
2) வாழைப்பழத்தை மசித்து ஓட்ஸ் பொடியோடு சேர்க்கவும்
3) இந்த கலவையில் வெதுவெதுப்பான பாலை ஊற்றி கலக்கி சருமத்தில் உலர்ந்த பகுதிகளில் பூசவும்
4) 15-20 நிமிடம் வைத்திருந்து பின்னர் கழுவினால் நல்ல பலன் கிடைக்கும்
3. ஓட்ஸ் மற்றும் தேன் ஃபேக் (PACK) தேன் இயற்கையான ஈரப்பதமாக மூலக்கூறுகளை கொண்டுள்ளது. இது மிக உலர்ந்த சருமத்திற்கும் நல்ல ஈரப்பதத்தை தரும்.
தேவையான பொருட்கள்
½ கப் ஓட்ஸ் பொடி
1 கப் பால்
1 டீஸ்பூன் தேன்
செய்முறை
1) ஓட்ஸ் பொடியை பாலில் சேர்த்து நன்கு கலக்கவும்.
2) இரண்டு நிமிடங்கள் அப்படியே வைத்திருக்கவும்
3) அதனோடு தேனை கலந்து, இந்த கலவையை சருமத்தின் உலர்ந்த பகுதிகளில் பூசவும்.
4. புத்துணர்ச்சி தரும் ஓட்ஸ் குளியல் உங்கள் சருமத்திற்கு புத்துணர்வும் ஈரப்பதமும் தரும் ஓட்ஸ் குளியலை
எடுத்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்
2 கப் ஓட்ஸ் பொடி
1 கப் பால்
2 டேபிள் ஸ்பூன் தேன்
செய்முறை
1) உங்கள் குளியல் தொட்டியில் நீரை நிரப்புங்கள். அதிக சூடான நீரை விட வெதுவெதுப்பான நீரே சிறந்தது, ஏனெனில் வெதுவெதுப்பான நீர் தான் உங்கள் சருமத்தின் எண்ணெய் பசையை பாதுகாத்து சருமம் வறட்சியடையாமல் பாதுகாக்கிறது
2) மேற்கூறிய பொருட்களை குளியல் தொட்டியில் கலந்து 15-20 நிமிடங்கள் வரை அதில் குளிக்கவும்.