தலைமுடியை பிடிக்காதவர்கள் யாருமே இல்லை. எல்லா வயதினருக்கும், அவர்கள் அழகை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு அவர்கள் தலை முடிக்கு உண்டு. குறிப்பாக
இளைஞர்கள் அவர்கள் முடியை வளர்ப்பதிலும் அதை அலங்காரம் செய்வதிலும் மிகுந்த ஆர்வம் காட்டுகிறார்கள். சுவரை வைத்து தான் சித்திரம் வரைய முடியும் என்பது போல ஆரோக்கியமான தலை முடி இருந்தால் மட்டுமே பலவகை முடி திருத்தங்களை செய்து கொள்ள முடியும்.
இன்றைய பொருளாதார தேவைகளினாலும்,தினசரி வாழ்வியல் பிரச்சனைகளாலும் ஏற்படும் மன அழுத்தங்கள் முடி உதிர்தலுக்கு காரணமாகின்றன. இந்நாட்களில் வயது
வேறுபாடின்றி எல்லா வயதினருக்கும் முடி உதிர்தல் ஒரு அசச்சுறுத்தலாகவே கருதப்படுகிறது .
முடி உதிர்தலுக்கு முக்கிய காரணம், மாசு கலந்த சுற்றுப்புற சூழல்,தவிர்க்க முடியாத வேலை பளு, நவீன வாழ்க்கைமுறை ஆகியன. இந்த அவசர யுகத்தில்,நம்மால் நம்கூந்தலை சரிவர பராமரிக்க முடிவதில்லை. அழகுக்காகவும், நறுமனத்திற்காகவும் நாம் ரசாயனக் கலவையை முடிக்குள் செலுத்தி அவற்றின் வளர்ச்சியை தடுக்கிறோம்.
அதையும் தாண்டி அந்த ரசாயனம் பல்வேறு முடி சார்ந்த பிரச்சனைகளை நமக்கு விட்டுச் செல்கிறது. இதை சரி செய்ய நாம் முடி சிகிச்சை நிபுணரிடம் செல்கிறோம்.
ஆண் பெண் இருவருமே இந்த முடி உதிர்தல் மற்றும் பொடுகு தொல்லையிலிருந்து மீண்டு வர இயற்கை சிகிச்சை முறைகளை பின்பற்றுவது சிறந்தது.
விளக்கெண்ணெய் எளிதாக கிடைக்கப்பெறும் எண்ணெய். இந்த எண்ணெய் எல்லா விதமான உடல் உபாதைகளுக்கும் ஒரு சிறந்த மருந்து. சிறு குழந்தைகளுக்கு காலையில் எழுந்தவுடன் தலையின் உச்சியில் விளக்கெண்ணெய் தேய்க்கும் பழக்கம் பல வருடங்களுக்கு முன்பு இருந்து வந்தது. இதன் மூலம் உடல் முழுதும் குளிர்ச்சி அடைகிறது.
விளக்கெண்ணையை தொடர்ந்து தேய்ப்பதால் வழுக்கை விழுவது தடைபடும். விளக்கெண்ணையை சூடாக்கி தலையில் தடவுங்கள். 10 நிமிடங்கள் அப்படியே விட்டு விட்டு பிறகு நன்றாக மசாஜ் செய்யுங்கள். பிறகு ஒரு ஈர துண்டை எடுத்து தலையில்
சுற்றி 20 நிமிடங்கள் வைத்திருக்கவும். இதை செய்வதால் உடல் சூடு தணிந்து குளுமையாக உணர்வீர்கள். முடியும் வழுவழுப்பாகும்.
முடி அடர்த்தியாக மற்றும் மென்மையாக வளர முட்டையை பலவகையாக உபயோகப்படுத்தலாம்.
1..முட்டையும் எலுமிச்சை சாறும்:
தேவையான பொருட்கள்:
1.முட்டை – 2
2.எலுமிச்சை சாறு – 2 தேக்கரண்டி
செய்முறை:
2 முட்டைகளை ஒரு கிண்ணத்தில் ஊற்றிக் கொள்ளவும். அதனுடன் எலுமிச்சை சாற்றை ஊற்றி நன்றாக கலக்கவும். 2-3 நிமிடங்கள் கலந்த பின் அதை எடுத்து கூந்தலில்
தடவவும். 1 மணி நேரத்திற்கு பிறகு ஷாம்பூவால் கூந்தலை அலசவும். உங்களால் உடனடியாக வித்தியாசத்தை உணர முடியும்.
2. முட்டையும் ஆலிவ் எண்ணையும்:
ஆலிவ் எண்ணெய் அழகு மற்றும் ஆரோக்கியத்திற்கு பயன்படக்கூடியது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த எண்ணையை பயன்படுத்தி மாஸ்க், ஸ்க்ரப் முதலியவற்றை செய்யலாம். முடி உதிர்வை தடுத்து, அதன் வளர்ச்சியை இது மேம்படுத்துகிறது. இது ஒரு இயற்கையான கண்டிஷ்னராக பயன்படுகிறது. ஆலிவ் எண்ணையை தொடர்ந்து
பயன்படுத்துவதால் கூந்தல், பளபளப்பாகவும்,மிருதுவாகவும் தோற்றமளிக்கும்.
தேவையான பொருட்கள்:
1.முட்டை – 2
2.ஆலிவ் எண்ணெய் – 2 தேக்கரண்டி
செய்முறை:
முட்டையுடன் ஆலிவ் எண்ணையை நன்றாக கலக்கவும்.
இந்த கலவையை கூந்தலில் தடவுவதற்கு முன், மிதமான ஷாம்பூவை கொண்டு தலையை அலசுங்கள். அலசியபின் சற்று ஈரமான நிலையிலேயே இந்த கலவையை
தலையில் தடவவும். பிறகு ஷவர் கேப் அணிந்து 1 மணி நேரம் ஊற விடவும். அதன் பிறகு சாதாரண ஷாம்பு கொண்டு தலை முடியை அலசவும். இப்படி வாரத்திற்கு 2
முறை செய்வதால் அடர்த்தியான கூந்தலை பெற முடியும்.
முட்டையும் தேங்காய் எண்ணையும்:
தேங்காய் எண்ணெய் எல்லாத்தரப்பு மக்களுக்கும் எளிதில் கிடைக்கக் கூடியது. இந்த எண்ணையை தினமும் தலைக்கு தேய்த்து மசாஜ் செய்தால் தலையின் சூடு குறையும்.
உடலுக்கு குளிர்ச்சியூட்டும். பொடுகு தொல்லை மற்றும் முடி உதிர்தலை போக்கும். தலை முடியின் வேரிலிருந்து வலிமை படுத்துவதால், முடி உடைதல் குறையும்.
தேவையான பொருட்கள்:
1.முட்டை – 2
2.தேங்காய் எண்ணெய் – 2 தேக்கரண்டி
செய்முறை:
முட்டையின் மஞ்சள் கருவை மட்டுமெடுத்து அதனுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்றாக கலக்கவும். இந்த கலவையை தடவுவதற்கு முன் கூந்தலை நனைத்துக்
கொள்ளவும்.பின் இதை தடவி, 10 நிமிடங்களுக்கு பிறகு கழுவவும். இதன் மூலம் சொரசொரப்பான கூந்தலை மென்மையாக மாற்ற முடியும்.
இயற்கை முறையில் செய்யப்படும் சிகிச்சைகளும், சரியான பராமரிப்பும் உங்கள் தலை முடியை எந்த பிரச்னையிலிருந்தும் பாதுகாக்கும். அழகுக்காக பல இரசாயனக்
கலவையை உபயோகிக்கும்போது தலைமுடியின் வலு குறைந்து உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.