29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
201708111421100186 hair combing method for hair care SECVPF
ஹேர் கலரிங்

தலை வாரும் போது கவனிக்க வேண்டியவை

தினம் ஒரு முறை தலை வாருவதில் இருந்து, நிமிடத்துக்கொரு முறை வாருவது வரை ஒவ்வொருவருக்கு அதில் ஒவ்வொரு விருப்பம். தலை வாருவதில் சில விதிமுறைகள் உள்ளன. அவற்றை பற்றி பார்க்கலாம்.
* உங்கள் கூந்தலுக்கு ஷாம்பு குளியல் எடுத்து, கண்டிஷனிங் செய்த பிறகு ஈரம் போக டவலால் துடையுங்கள். மென்மையான டவலால் கூந்தலை மிருதுவாக சுற்றித் துடைக்க வேண்டும். அழுத்தித் தேய்த்து அரக்கப் பரக்கத் துடைத்தால் கூந்தல் உடைந்து உதிரும். தலைக்குக் குளித்ததும், கூந்தல் சீக்கிரமே உடைந்து போகும் நிலையில் மிக பலவீனமாக இருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
* அகலமான பற்கள் கொண்ட சீப்பினால் கீழிருந்து மெதுவாக வாரி விட வேண்டும்.
* கூடியவரையில் கூந்தலை உலர்த்த ஹேர் டிரையர் உபயோகிப்பதைத் தவிர்க்கவும். விரல்களால் கூந்தலைக் கோதிவிட்டு, சிக்குகள் இன்றி, பிரித்து விட்டு, உலர்த்தவும்.
* கூந்தலை பகுதிகளாகப் பிரித்து, ஒவ்வொரு பகுதியாக பிரஷ் செய்யவும்.
சரியான பற்கள் கொண்ட சரியான பிரஷ்ஷை பயன்படுத்துவது என்பது கூந்தல் பராமரிப்பில் மிக முக்கிய பங்கை வகிக்கிறது.
தலை வாரும் போது கவனிக்க வேண்டியவை…
* எப்போதும் கூந்தலை சுத்தமாக வைத்திருங்கள். மென்மையான பற்கள் கொண்ட பிரஷ்ஷினால் வாருங்கள். இது போன்ற பிரஷ் பொடுகுப் பிரச்சனை உள்ள கூந்தலுக்கும் நல்லது. எப்போதுமே கடினமான பிளாஸ்டிக் அல்லது மெட்டல் கொண்ட பிரஷ்ஷை உபயோகிக்காதீர்கள்.
* அழுக்கான சீப்பு மற்றும் பிரஷ்ஷை உபயோகிக்கக்கூடாது.
* தினமும் 2 முறைகள் கூந்தலை வாரி விடுங்கள். அது மண்டைப் பகுதியின் ரத்த ஓட்டத்தைத் தூண்டிவிடும். தவிர அது மண்டைப் பகுதியில் உள்ள இறந்த செல்களையும் அகற்றும். கூந்தலை அதிக அழுத்தத்துடனும் அடிக்கடியும் வார வேண்டாம்.
* கூந்தலை ஒருபோதும் இறுக்கமாகக் கட்டிக் கொள்ளாதீர்கள். அது கூந்தலின் வேர்க்கால்களை பலமிழக்கச் செய்து, உதிர்வுக்குக் காரணமாகி விடும்.
6 முதல் 8 வாரங்களுக்கு ஒருமுறை கூந்தலை ட்ரிம் செய்து விடுங்கள். வாரம் ஒருமுறை உங்கள் சீப்பு மற்றும் பிரஷ்ஷை சோப் கலந்த வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவி உபயோகியுங்கள். பிரஷ்ஷில் ஒரு பல் உடைந்தால்கூட அதை உடனே மாற்றுங்கள். Back combing எனப்படுகிற தலைகீழ் தலைவாருதலைத் தவிருங்கள். அது கூந்தலின் ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல.201708111421100186 hair combing method for hair care SECVPF

Related posts

கூந்தலுக்கு அழகு சேர்க்கிறதா ஹேர்கலரிங்?

nathan

இளநரை ஏன் ஏற்படுகிறது?.. இவை தான் காரணங்களாக இருக்கலாம்…

sangika

ஹேர் டை உபயோகிப்பது ஆபத்தானதா?

nathan

பிளாக் ஹென்னா பேக்

nathan

நரைமுடியை கருப்பாக மாற்றும் அற்புத மூலிகை கற்பூர வல்லி! சூப்பர் டிப்ஸ்!

nathan

உங்க ஹேர் கலரை நீக்க வேண்டுமா?அப்ப இத படிங்க!

nathan

ஹேர் கலரிங் செய்யப் போறீங்களா?

nathan

முக அழகை வசிகரமாக்கும் வண்ண கூந்தல்!

nathan

கூந்தலுக்கு இயற்கை நிறமூட்ட

nathan