26 C
Chennai
Thursday, Jan 30, 2025
03 1501747497 11foundation
முகப் பராமரிப்பு

உங்கள் மேக்கப் கச்சிதமா வரனும்னு ஆசையா? இந்த ட்ரிக்ஸ் ட்ரை பண்ணிப் பாருங்களேன்!!

சில பெண்கள் தங்களை தினமும் அழகுபடுத்தி கொள்ள மேக்கப் போடுவர். இன்னும் சில பெண்கள் ஏதாவது நிகழ்ச்சிகளுக்கு மட்டும் தங்களை அழகுபடுத்த மேக்கப் செய்வர். எப்பொழுதும் உங்கள் மேக்கப் பொருட்கள் ஒரு சமமான அழகை தருவதில்லை.

மேக்கப் என்பது படிப்படியாக செய்து அப்படியே உங்கள் அழகை வழக்கமாக இல்லாமல் மெருகேற்றும் முறை ஆகும். மேக்கப்பின் ஒவ்வொரு செய்முறைகளை யும் சரியாக செய்தால் கண்டிப்பாக நீங்கள் ஒரு தேவதை போல் காட்சியளிப்பீர்கள் என்பது நிதர்சனமான உண்மை. ஆனால் அதற்காகும் நேரம் அதிகம்.

ஆனால் நமக்கோ கண்ணாடி முன்னாடி வெகு நேரம் உட்கார நேரமில்லை. நம்மளுக்கு தேவையானது எல்லாம் விரைவான மேக்கப் ஆனால் நல்ல ரிசல்ட். எனவே தான் உங்களுக்காக ஈஸியான மேக்கப் ட்ரிக்ஸ்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

இதனால் நீங்கள் அழகாகவும் காட்சியளிப்பீர்கள் அதே நேரம் உங்கள் நேரமும் உங்கள் கைக்குள் இருக்கும். உங்கள் மேக்கப் நேரங்களில் இந்த ட்ரிக்ஸ்யை பின்பற்றி பாருங்கள்.

ட்ரிக்ஸ் #1 லிப்ஸ்டிக் பயன்படுத்தும் போது அங்கே இங்கே திட்டு திட்டா இல்லாமல் பள பளப்பாக எல்லா இடங்களிலும் சமமாக இருக்க ஆசைப்படுவோம். ஆனால் என்னங்க பண்றது போதுமான நேரம் இல்லாததால் அதை செய்ய முடிவதில்லை அல்லவா. இதைச் ஒரு நொடிப் பொழுதில் சரி செய்ய லிப்ஸ்டிக் போட்டு வதற்கு முன்னாடி முகத்திற்கு பூசும் பவுடரை உதட்டில் நன்றாக பரப்பி விட்டு லிப்ஸ்டிக் போட்டால் ரெம்ப கச்சிதமாக இருக்கும்.

ட்ரிக்ஸ் #2 உங்களது ஐ ஷேடோவை நீண்ட நேரம் வைக்க ஐ பிரைமர் பயன்படுகிறது. இந்த ஐ பிரைமர் அப்ளே செய்ய வெகு நேரமானால் அதற்கு பதிலாக லிக்யூட் கான்சீலரை மேல் இமைப்பகுதியில் தடவி விட்டு அப்புறம் ஐ ஷேடா போட்டால் நல்ல மாற்றத்தை நீங்கள் காணலாம்.

ட்ரிக்ஸ் #3 எல்லா பெண்களுக்கும் தங்களது உடைக்கு தகுந்தாற் போல் நெயில் பாலிஷ் போட ஆசை இருக்கும். ஆனால் அதை போட்டு காய வைப்பது கடுப்பெடுத்த விஷயம் மட்டுமில்ல நேரமமும் அதிகமாகும். இதற்காக நீங்க கவலைப்பட வேண்டாம். ஒரு நிமிடத்தில் உங்கள் நெயில் பாலிஷ் காய உங்கள் கைவிரல் நகங்களை ஒரு டம்ளர் குளிர்ந்த நீரில் மூழ்கினால் போதும் சீக்கிரம் காய்ந்து உங்கள் நகங்களில் கச்சிதமாக பிடித்துக் கொள்ளும்.

ட்ரிக்ஸ் #4 ஓய்வே இல்லாமல் நகரும் இவ் வாழ்க்கையில் நீங்கள் மட்டுமில்லாமல் உங்கள் கண்களும் சோர்ந்து போய் உற்சாகமில்லாமல் காணப்படும். சரி அப்படி இருந்தா என்ன என்று கேட்குறீங்களா? உங்கள் வாய் மொழியை விட கண்ணின் மொழி மிகவும் அழகானது. அப்படிப்பட்ட கண்களை நீங்கள் அழகாக காட்ட வேண்டாமா. அதற்குத்தான் இருக்கவே இருக்கு ஒரு சூப்பர் ட்ரிக். ஒரு வெள்ளை கலர் பென்சீலை எடுத்துக் கொண்டு உங்கள் கண்களின் கீழ் இமையின் உட்பகுதியில் அப்ளே பண்ணுங்கள். இதை உங்கள் ஐ மேக்கப்பிற்கு முன்னாடி செய்தால் பெரிய அகலமான கவர்ச்சிகரமான கண்கள் கிடைக்கும்

ட்ரிக்ஸ் #5 உங்கள் முகத்திற்கு பவுடர் பூசம் போது அப்படியே கைகளில் எடுத்து அப்பிக் கொள்ள வேண்டாம். வெவ்வேறு வகையான ப்ரஷ்யை பயன்படுத்துவது சிறந்தது. உங்கள் முகத்தின் சுற்றளவை பொருத்து பவுடரை பூச வேண்டும். கன்னங்கள், நெற்றி, தாடை போன்ற பகுதிகளில் அகன்ற ப்ரஷ்யையும் மூக்கு பக்கவாட்டில், கண்களுக்கு கீழ்பகுதியில் ஐ காண்டூர் ப்ரஷ்யை பயன்படுத்தினால் உங்கள் முகம் சமமான அழகை பெறும்.

ட்ரிக்ஸ் #6 பெண்களுக்கு தங்கள் முகத்திற்கு தேவையான லிக்யூட் பவுண்டேஷன் அளவு சரிவர தெரிவதில்லை. இதன் அளவு உங்கள் முக கவரேஜை பொருத்தது. ஒரு லைட்டான கவரேஜூக்கு லிக்யூட் பவுண்டேஷன் ஒரு தடவை பூசினால் போதும். இதுவே ஒரு மீடியம் கவரேஜூக்கு இரண்டு தடவை அப்ளை பண்ண

ட்ரிக்ஸ் #7 கண்சீலரை பயன்படுத்தி பருக்கள் அல்லது மருக்களை மறைப்பது மிகவும் கடினம். ஏனெனில் அந்த சின்ன புள்ளி போன்ற பகுதியில் கண்சீலரை கொஞ்சம் எடுத்து அப்ளே பண்ண முடியாது. கண்சீலர் ட்யூப்பின் வாய் பகுதி அகலமாக தட்டையாக இருப்பதால் அப்படியே பருக்கள் பகுதியில் தடவும் போது நிறைய மற்ற இடங்களிலும் பரவிவிடுகின்றன. எனவே இதற்கு ஐ லைனர் ப்ரஷ் கொண்டு கண்சீலரை எடுத்து சிறிய புள்ளி போல் பருக்களின் மீது வைத்து அதை எளிதாக மறைத்து விடலாம்.

ட்ரிக்ஸ் #8 சில சமயங்களில் நிகழ்ச்சிக்கு ஜொலிக்கும் மேக்கப் செய்வது எப்படி என்று தெரியாது. அதற்கு ப்ளஷ்யை பவுண்டேஷனுக்கு முன்னாடி அப்ளே பண்ணால் போதும் உங்கள் முகம் அழகாக ஜொலிக்கும். பவுண்டேஷன் மேல் ப்ளஷ்யை தடவக் கூடாது.

ட்ரிக்ஸ் #9 உங்கள் மூக்கு அகலமாகவும், தட்டையாகவும் இருக்கா? கவலை வேண்டாம் மேக்கப் ட்ரிக்ஸ் மூலம் அதை கூர்மையாக அழகாக மாற்றி விடலாம். உங்களது மூக்கின் பக்கவாட்டு பகுதி மற்றும் உள் பகுதியில் தொடங்கி அதை ஹைலைட் செய்ய வேண்டும். பிறகு மூக்கின் நடுப்பகுதியில் ஹைலைட் பண்ண வேண்டும். இது உங்கள் மூக்கை கூர்மையாக அழகாக காட்டும்.

ட்ரிக்ஸ் #10 மஸ்காரா உங்கள் இமைகளை அடர்த்தியாகவும் அழகாகவும் காட்டவில்லை என்றால் பெட்ரோலியம் ஜெல் பயன்படுத்துங்கள். மஸ்காரா பயன்படுத்துவதற்கு முன்னால் பெட்ரோலியம் ஜெல்லை இமைகளில் தடவி அப்புறம் மஸ்காரா போட்டால் அடர்த்தியான மென்மையான இமைகள் கிடைக்கும்.

ட்ரிக்ஸ் 11 எல்லா பெண்களும் பவுண்டேஷன் வாங்கும் போது செய்யும் தவறு என்னவென்றால் சருமத்திற்கான பவுண்டேஷனை தேர்ந்தெடுக்க கையில் தடவி பார்ப்பர். உங்கள் கைகளும் முகத்தின் நிறமும் மாறுபடும். எனவே இது முற்றிலும் தவறு. இதற்கு அந்த பவுண்டேஷனை கழுத்தில் தடவி பார்த்து வாங்கவும். ஏனெனில் உங்கள் கழுத்தும் முகமும் ஏறக்குறைய ஓரே மாதிரி நிறத்தில் இருக்கும். இதனால் தவறான பவுண்டேஷனை தேர்ந்தெடுப்பதை தவிர்க்கலாம். மேலே குறிப்பிட்டுள்ள மேக்கப் ட்ரிக்ஸ்கள் அனைத்தும் இந்த மேக்கப் தொழிலில் சிறந்த பியூட்டி எக்ஸ்பட்டினால் சொல்லப்பட்டது. எனவே நீங்களும் இதை பயன்படுத்தி பயனுடன் அழகையும் சேர்ந்து பெறுங்கள்.

03 1501747497 11foundation

Related posts

முகத்துக்கு ஆவி பிடிக்கும் முறை..

nathan

உங்க முகம் அடிக்கடி வறண்டு போகுதா? இதை மட்டும் பயன்படுத்துங்கள்…

nathan

கண்களை சுற்றி கருவளையம் தோன்றுவதற்கான காரணங்களும் அவற்றிற்கான தீர்வுகளும்…!

nathan

இரவு படுக்கைக்குச் செல்லும்முன் இருபது நிமிடங்கள் இதற்கு ஒதுக்கினாலே போதுமானது!…தெரிந்துகொள்வோமா?

nathan

எளிமையான வழி…முகப்பருக்களை சரிசெய்ய…

nathan

பளபளவென ஜொலிக்க இதோ சூப்பர் பேஷியல்

nathan

முகத்தை ஜொலிக்க வைக்கும் மஞ்சள் நீராவி

nathan

வெயில் கொடுமை தாங்கமுடியலையா? அப்ப இத படிங்க!

nathan

சருமத்தை இளமையாக்கும் பாதாம் ஃபேஸியல்

nathan