25.8 C
Chennai
Sunday, Nov 24, 2024
1
முகப் பராமரிப்பு

கரும்புள்ளிகள்/ தழும்புகளை குணமாக்க வெந்தயத்தை எப்படி உபயோகிக்க வேண்டும் தெரியுமா?

வெந்தயத்தை இரவு முழுவதும் நீர்விட்டு ஊற வைத்து காலையில் மைய அரைத்து வைத்துக் கொண்டு அதனோடு சிறிது தயிர் சேர்த்து நன்கு குழைத்து தலை முடிக்கும் தலையின் மேற்புறத்தும் தடவி நன்றாக மசாஜ் செய்து வைத்திருந்து 20 நிமிடங்களுக்குப் பிறகு தலைக்கு குளிக்க பொடுகுகள் போகும்.
1
வெந்தயத்தை இரவு ஊற வைத்து காலையில் முகத்துக்கு தடவி வைத்திருந்து குளித்து விடுவதால் முகத்தில் உள்ள மருக்கள், கரும்புள்ளிகள், தழும்புகள் மறைந்து போகும்.
2 1
வெந்தயத்தோடு தேன் சேர்த்து முகப்பருக்களின் மீது பூசி வைத்திருந்து இளஞ்சூடான நீரில் கழுவி வர முகப்பருக்கள் குணமாகும்.
3 1
வெந்தயம் ஒரு கைப்பிடி அளவு எடுத்து அதனோடு 4 கப் நீர் ஊற்றி அடுப்பிலிட்டு 15 நிமிடங்கள் காய்ச்சி எடுத்து ஆற வைத்து வடிகட்டி வைத்துக் கொண்டு தினம் 2 முறை முகத்தைக் கழுவுவதற்கு உபயோகித்தால் முகத்துக்கு நல்ல வனப்பையும், சுருக்கங்களை நீக்கி நல்ல மென்மையும்பொன் வண்ணத்தையும் தரும்.
4 2
முடி கொட்டுகிற பிரச்சனைக்கு வெந்தயம் மிகச் சிறந்த நிவாரணி. முடி கொட்டுதல்,பொடுகு, தலை வழுக்கை, முடி மெல்லியதாக ஆகுதல் ஆகியவற்றுக்கு வெந்தயத்தை தாராளமாக உணவில் சேர்த்து கொள்வதோடு ஊறவைத்து அரைத்து தலைக்கு தடவி வைத்திருந்து குளிப்பதால் நல்ல பலன் கிடைக்கும்.
5 1
வெந்தயம் இளநரையையும் போக்ககூடிய நன்மருந்தாகும். கைப்பிடி அளவு வெந்தயத்தை 300மி.லி தேங்காய் எண்ணெயில் இட்டு கொதிக்க வைத்து எடுத்து வடிகட்டி இளஞ்சூட்டோடு தலைக்குத் தேய்த்து நன்கு மசாஜ் செய்து வர இளநரையைத் தடுத்து நிறுத்தும். எண்ணெய் இரவு முழுவதும் தலையில் ஊறும்படி வைத்திருந்து காலையில்குளிக்க வேண்டும்.

Related posts

முகத்தில் பருத்தொல்லையா? இதோ எளிய நிவாரணம்….

nathan

முகத்தில் தேவையற்ற முடிகளை நீக்குவதற்கு,tamil beauty tips for face in tamil language,tamil beauty tips for face

nathan

வீட்டிலேயே கவனமாக ஒரு ஃபேசியல் எவ்வாறு செய்து கொள்வது

nathan

சுருக்கம் வேண்டாம்; பளபளப்பு வேணும்!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… 35-வயதில் முகம் பளிச்சிட

nathan

ஆரஞ்சு ஃப்ரூட் பேக் முகத்தை பளபளப்பாக்கும்!….

nathan

கருவளையத்தை எளிதில் விரட்டும் மோர்!! 5 அழகுக் குறிப்புகள்!!

nathan

உங்களுக்கான தீர்வுஎண்ணெய் வழியும் சருமத்திற்கு…

nathan

சாமந்தி பூ ஃபேஸ் பேக்

nathan