28.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
1501925733 3376
சைவம்

பாலக்கீரை காளான் பிரட் டோஸ்ட்!

தேவையான பொருட்கள்:

காளான் – 10
பாலக்கீரை – தேவையான அளவு
பச்சை மிளகாய் – 2
பெரிய வெங்காயம் – 1
இஞ்சி விழுது – 1 டீஸ்பூன்
மிளகுத்தூள் – 1 டீஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
சீஸ் – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
பிரட் துண்டுகள் – 8

செய்முறை:

முதலில் பிரட் துண்டுகளை டோஸ்ட்டரில் வைத்து டோஸ்ட் செய்து கொள்ளவும். பிறகு ஒரு வாணலியில் தேவையான அளவு எண்ணெய் விட்டு சூடேற்றவும். எண்ணெய் காய்ந்த பின் துருவிய இஞ்சியை சேர்க்கவும். அதனுடன் பொடியாக வெட்டிய மிளகாய் சேர்க்கவும். பிறகு பொடியாக வெட்டிய வெங்காயம் சேர்த்து நன்றாக கலக்கவும்.

வெங்காயத்தின் நிறம் மாறியதும், பொடியாக வெட்டி வைக்கப்பட்ட காளான்களை சேர்த்து நன்கு கிளறவும். 3 நிமிடங்கள் கழித்து கழுவிய பாலக்கீரையை சேர்த்து அதனுடன், தேவையான அளவு உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்து நன்கு கலக்கவும். எல்லாம் வெந்து நிறம் மாறியதும் இறக்கிவிடலாம்.

பிறகு டோஸ்ட் செய்யப்பட பிரட் துண்டுகளில் இந்த கலவையை நிரப்புங்கள். இதன் மேல் துறுவிய சீஸை தூவினால் சுவையான சத்தான பாலக்கீரை காளான் பிரட் டோஸ்ட் தயார்.1501925733 3376

Related posts

வெந்தய சாதம்

nathan

சோயா மட்டர் புலாவ்|soya matar pulao recipe in tamil

nathan

பட்டாணி பன்னீர் கிரேவி

nathan

பிரிஞ்சி ரைஸ்

nathan

கொத்தவரங்காய் பொரியல்

nathan

பீர்க்கங்காய் புலாவ்

nathan

ஃபிரஞ்ச் ஃப்ரை

nathan

பன்னீர் பட்டாணி மசாலா

nathan

அமாவாசை வெள்ளை பூசணி சாம்பார்

nathan