பெண்களாக இருத்தாலும் சரி, ஆண்களாக இருந்தாலும் சரி, முடி தான் அவர்களுக்கு முழுமையான அழகை தருகிறது. ஆனால் வயதாக வயதாக நெற்றி பகுதியில் முடி குறைந்து கொண்டே போகும்.
பெண்களுக்கு தலை சொட்டை விழுகாது என்றாலும், முன்பகுதியில் பலருக்கு நெற்றி நீண்டு கொண்டே போகும். இது அவர்களது தோற்றத்தையே சீர்குலைக்கும்.
ஆண்களுக்கு என்று பார்க்கும் போது நெற்றியில் முடி சரிந்து விழுவது தான் அழகு..! ஆனால் சிலருக்கு அவ்வாறு இருக்காது. பெரிதாக தெரியும் நெற்றியை சிறிதாக்க இத எல்லாம் டிரை பண்ணுங்க..!
1. வெங்காயம் வெங்காயத்தில் அதிகளவு சல்பர் அடங்கியுள்ளது. இது மீண்டும் முடி வளர வேர்கால்களை உருவாக்கி தருகிறது. வெங்காய சாறை மேல் நெற்றியில் இட்டு மசாஜ் செய்து வந்தால் முடி நன்றாக வளரும். வெங்காயத்தை தலைமுடி வளர்ச்சிக்கும் பயன்படுத்தலாம்.
2. ஆலிவ் ஆயில் ஆலிவ் ஆயிலில் ஆன்டி ஆக்ஸிடண்டுகள் மற்றும் விட்டமின் ஈ அதிகமாக உள்ளது. இது முடி வளர்ச்சியை தூண்டுகிறது. ஆலிவ் ஆயிலில் ஒரு டீஸ்பூன் இலவங்க பட்டை பொடி மற்று ஒரு டீஸ்பூன் தேன் கலந்து மசாஜ் செய்து, 20 முதல் 30 நிமிடங்கள் விட்டுவிட்டு மையில்ட் ஷாம்பு கொண்டு கழுவி விட வேண்டும்.
3. மிளகு மிளகு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இதனால் முடியின் வேர்கால்கள் உறுதியாகி முடி வளர உதவுகிறது. மிளகை நன்றாக அரைத்துக்கொண்டு அதில் சில துளிகள் எலுமிச்சை சாறு சேர்த்து சொட்டையாக உள்ள இடத்தில் மசாஜ் செய்து, காய்ந்த உடன் கழுவி விட வேண்டும்.
4. பீட்ரூட் இலைகள் பீட்ரூட் இலைகளில் அதிகளவு பொட்டாசியம் நிறைந்துள்ளது. அதுமட்டுமின்றி விட்டமின் பி 6 உள்ளது இது முடி வளர்ச்சியை தூண்டுகிறது. ஒரு கைப்பிடி பீட்ரூட் இலைகளை தண்ணீரில் போட்டு கொதிக்க விட வேண்டும். பின்னர் இதனை பேஸ்டாக அரைத்துக்கொள்ள வேண்டும். அரைத்த பீட்ரூட் இலை பேஸ்ட்டில் தேவையான அளவு மருதாணி பொடியை சேர்த்து மாஸ்காக அப்ளை செய்து கொள்ள வேண்டும். 20 நிமிடங்கள் கழித்து முடிக்கு ஷாம்பு மற்றும் கண்டிஸ்னர் போட்டு அலச வேண்டும்.
5. கொத்தமல்லி கொத்தமல்லியில் அதிகளவு விட்டமின் சி, இரும்பு சத்து, புரோட்டின் அடங்கியுள்ளது. இது முடி உதிர்வை தடுத்து புதிய முடிகளை வளர செய்கிறது. ஒரு கைப்பிடி கொத்தமல்லியை எடுத்து அரைத்துக்கொள்ள வேண்டும். இதனை தலையில் அப்ளை செய்து 5 நிமிடங்கள் சுழற்சி முறையில் மசாஜ் செய்ய வேண்டும். அரை மணி நேரம் கழித்து தலைமுடியை வாஷ் செய்து கொள்ளுங்கள்.