28.1 C
Chennai
Sunday, Dec 22, 2024
17 1463477952 2 loosehair
தலைமுடி சிகிச்சை

தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்க வெந்தயம் மற்றும் கறிவேப்பிலையை எப்படி பயன்படுத்துவது தெரியுமா?

இங்கு தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்க வெந்தயம் மற்றும் கறிவேப்பிலையைக் கொண்டு எப்படி எண்ணெய் தயாரிப்பது என்று கொடுக்கப்பட்டுள்ளது.
17 1463477952 2 loosehair
தலைமுடி பிரச்சனையை சரிசெய்ய கண்ட சிகிச்சைகளை மேற்கொள்வதை விட, தலைமுடிக்கு ஊட்டமளிக்கும் பொருட்களைக் கொண்டு பராமரிப்பு கொடுத்து வந்தால், தலைமுடி பிரச்சனையில் இருந்து விரைவில் விடுபடலாம். அதிலும் நம் வீட்டு சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டு பராமரித்தாலே போதும்.
curry leafs with methi 03 1475478532 08 1486533845
குறிப்பாக வெந்தயம் மற்றும் கறிவேப்பிலையைக் கொண்டு தலைமுடியைப் பராமரித்து வந்தால், இன்னும் சிறப்பான பலன் கிடைக்கும். அதுவும் அந்த பொருட்களைக் கொண்டு எண்ணெய் தயாரித்து தினமும் பயன்படுத்தினால் மிகவும் நல்லது. இங்கு தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்க வெந்தயம் மற்றும் கறிவேப்பிலையைக் கொண்டு எப்படி எண்ணெய் தயாரிப்பது என்று கொடுக்கப்பட்டுள்ளது.
13 1434176239 3 curry leaves 600 jpg
கறிவேப்பிலை நன்மைகள்:
* கறிவேப்பிலையில் உள்ள பீட்டா-கரோட்டீன் மற்றும் புரோட்டீன்கள், தலைமுடி உதிர்ந்து மெலிவதைத் தடுக்கும்.
* கறிவேப்பிலையில் உள்ள அமினோ அமிலங்கள், மயிர்கால்களை வலிமைப்படுத்தி, ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.
* கறிவேப்பிலையில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடென்ட் பொடுகுத் தொல்லையில் இருந்து விடுவித்து, முடியின் வளர்ச்சியையும் தூண்டும்.
தேவையான பொருட்கள்:
1461825650 5263 4
வெந்தயம் – 2 ஸ்பூன்
24 1419425567 3 coconut oil image 2
தேங்காய் எண்ணெய் – 1/2 கப்
15 1500098884 2 1
ஆலிவ் ஆயில் – 1 ஸ்பூன்
13 1434176239 3 curry leaves 600 jpg
கறிவேப்பிலை – 10-20
1461825650 5263 4
தயாரிக்கும் முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெயை ஊற்றி சூடேற்றி, அத்துடன் வெந்தயத்தை போட்டு சிறிது நேரம் கொதிக்க வைக்க வேண்டும். எண்ணெய் கருப்பாக மாறியதும், அத்துடன் ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, கறிவேப்பிலையையும் போட்டு கொதிக்க வைத்து இறக்கி, குளிர வைத்து பயன்படுத்த வேண்டும்.
08 1486533718 5 oil
எண்ணெயின் நன்மைகள்:
* இந்த எண்ணெய் பாதிக்கப்பட்ட மயிர்கால்களை சரிசெய்ய உதவும்.
* ஸ்கால்ப்பை வறட்சியின்றி பார்த்துக் கொள்ளும்.
* தலைமுடியின் வளர்ச்சியைத் தூண்டும்.
* தலைமுடி உதிர்வதைத் தடுக்கும்.
* முடி வெடிப்பைத் தடுக்கும்.
* நரைமுடியைத் தடுக்கும்.
* பொடுகைப் போக்கும்.
* ஸ்கால்ப்பில் உள்ள தொற்றுக்களை சரிசெய்யும்.

Related posts

நரைமுடியை மீண்டும் கருமையாக்க முடியுமா?..

nathan

நீங்க இப்படியா தலைக்கு எண்ணெய் தேய்குறீங்க? சீரற்ற பராமரிப்பு முறை…

nathan

தெரிந்து கொள்ளுங்கள்.. கருப்பு முடி விரைவாக கருப்பு நிறமாக இருக்க இதை செய்ய வேண்டும்…

nathan

கூந்தல்

nathan

பொடுகை போக்கும் ஆப்பிள் சீடர் வினிகர் – எளிய நிவாரணம்

nathan

நரை முடியைப் போக்க உதவும் ஹேர் பேக்குகள்!!

nathan

முடி உதிர்வை வீட்டிலேயே கட்டுப்படுத்தும் சூப்பரான மாஸ்க் ரெசிபி !!சூப்பர் டிப்ஸ்

nathan

கூந்தல் பராமரிப்பு – முடி மிருதுவாக இருக்க

nathan

கூந்தல் பராமரிப்பு!

nathan