23.8 C
Chennai
Saturday, Dec 13, 2025
சிற்றுண்டி வகைகள்

பனீர் பாலக் பரோட்டா

என்னென்ன தேவை?

மேல் மாவிற்கு…

கோதுமை மாவு – 2 கப்,
உப்பு – தேவைக்கு,
பாலக் கீரை – 1 கட்டு,
கோதுமை மாவு – 3 கப்,
அரைத்த பச்சைமிளகாய் – 1/4 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்,
சீரகத்தூள் – 1/4 டீஸ்பூன்,
எண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்.

ஸ்டஃப்பிங்க்கு…

துருவிய பனீர் – 1/4 கப்,
நறுக்கிய பச்சைமிளகாய் – 3,
கொத்தமல்லித்தழை – 4 டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கு.

எப்படிச் செய்வது?

பாலக் கீரையை வேகவைத்து அரைத்துக் கொள்ளவும். இத்துடன் கோதுமை மாவு, உப்பு, மஞ்சள் தூள், சீரகத்தூள், அரைத்த பச்சைமிளகாய், எண்ணெய் 1 டேபிள்ஸ்பூன் சேர்த்து மிருதுவான சப்பாத்தி மாவாக பிசைந்து கொள்ளவும். மல்லித்தழை, பனீர், பச்சைமிளகாய், உப்பு அனைத்தையும் ஒன்றாக கலந்து வைக்கவும். மாவை சம அளவு உருண்டைகளாக உருட்டி, பூரி அளவிற்கு திரட்டி பனீர் கலவையை வைத்து நன்றாக மூடி கையால் தட்டி மெதுவாக திரட்டி, சூடான தோசைக்கல்லில் போட்டு நெய் விட்டு இருபுறமும் நன்கு வெந்து பொன்னிறமாக வந்ததும் எடுத்து சூடாக பரிமாறவும்.VXQPvRc

Related posts

சூப்பரான மொறு மொறு பூண்டு பக்கோடா…

nathan

மாலை நேர ஸ்நாக்ஸ் ரைஸ் வெஜ் பால்ஸ்

nathan

காளான் கொழுக்கட்டை

nathan

ரஸ்க் லட்டு

nathan

இறாலில் செய்திடலாம் பஜ்ஜி…!!

nathan

காலிஃப்ளவர் பக்கோடா – cauliflower pakoda

nathan

வாழைப்பழ அப்பம்

nathan

மாலை நேர ஸ்நாக்ஸ் ஃபிங்கர் சிக்கன்

nathan

பேரிச்சம்பழம் லட்டு செய்முறை!

nathan