28.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
3
முகப் பராமரிப்பு

கருப்பாக இருப்பவர்களுக்கான அழகு குறிப்பு

இந்த உலகில் அழகாக இருக்க வேண்டும் என்று நினைக்காதவர்கள் எவரும் இருக்க முடியாது. அவ்வாறு அழகாக இருக்க வேண்டும் என்பதற்காக அழகு நிலையங்களுக்குசென்று அழகுப்படுத்திக் கொள்கின்றனர். அதில் பெரும்பாலும் அழகு நிலையங்களுக்குச் சென்று அழகுப்படுத்துவதில் முதல் காரணமாக இருப்பது, கருப்பாக இருக்கிறோம் என்பதற்காகவே. இவ்வாறு கருப்பாக இருப்பதற்கு முதல் காரணம் உடலில் இருக்கும் நிறமி செல்களான மெலனின் அளவு அதிகமாக இருப்பது.

அவ்வாறு அதிக நிறமிசெல்கள் உடலில் இருந்தால் அந்த இடமானது கருப்பாக இருக்கும். சிலர் திடீரென்று கருப்பாக மாறுவார்கள், அதற்கு அவர்களது உடலில் உள்ள நிறமிச் செல்கள் அதிக அளவு மெலனினை சுரக்கும்.
அதுமட்டுமல்லாமல் இத்தகைய செல்களின் சுரப்புத் தன்மையை குறைவுப்படுத்த பல கெமிக்கல் கலந்த அழகு சாதனப் பொருட்கள் இருந்தாலும், வீட்டில் இருந்தே சில இயற்கையான பொருட்களை வைத்து செய்தால், சருமமானது அழகோடு இருப்பதுடன், மெலனின் அளவையும் கட்டுப்படுத்தலாம் என்று அழகியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

* 2-3 டேபிள் ஸ்பூன் பால் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கலந்து, முகத்தில் தடவி ஊற வைத்து முகத்தில் குளிர்ந்த நீரில் அலசி வந்தால், முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் போவதோடு, முகமும் பளிச்சென்று இருக்கும்.

* பாதாம், பால் மற்றும் தேன் போன்றவை சருமத்திற்கு ஏற்ற சிறந்த பொருள். ஆகவே 3-4 பாதாம் பேஸ்ட், 1/2 டேபிள் ஸ்பூன் பால் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பின் அந்த பேஸ்டை முகத்திற்கு தடவி, 30 நிமிடம் ஊற வைத்து பிறகு கழுவவும். அதனை தொடர்ந்து செய்தால் முகத்தில் இருக்கும் கருப்பானது மறையும்.

* சந்தன பவுடர் ஒரு நல்ல சிறந்த சரும பராமரிப்பிற்கு ஏற்ற பொருள். அதனை தண்ணீரில் குலைத்து, கருமை அதிகமாக இருக்கும் இடத்தில் தடவ வேண்டும். வறண்ட சருமம் உள்ளவர்கள், அதோடு பால் மற்றும் சிறிது தேனை சேர்த்து கலந்து தடவி, 10-15 நிமிடம் ஊற வைத்து செய்யுங்கள். அதனை நாள்தோறும் செய்து வந்தால், நாளடைவில் நிறமி செல்களான மெலனின் அளவு குறைந்துவிடும்.

* கோக்கோ வெண்ணெய் ஒரு நல்ல மாஸ்சுரைசர் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்த பொருள். அது விரைவில் மெலனின் அளவை சரிசெய்யும். மேலும் எந்த இடம் அதிகமான அளவு கருப்பாக உள்ளதோ, அந்த இடத்தில் தடவி, 10 நிமிடம் ஊற வைத்து கழுவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும். அதுவும் அதனை செய்தால் உடலில் இரத்த ஓட்டத்தின் அளவு அதிகரிக்கும். மேலும் இது செல்கள் பாதிப்படையாமல் காத்துக் கொள்ளும். இந்த முறை உடலுக்கு விரைவில் நல்ல நிறத்தைக் கொடுக்கும். மேற்கூறியவாறெல்லாம் செய்தால் உடலில் அதிகமாக இருக்கும் மெலனின் அளவு குறைவதோடு, முகமும் அழகாக பொலிவோடு இருக்கும்.
3

Related posts

உங்களுக்கான தீர்வு முகத்தில் வளரும் தேவையற்ற முடிகளை இயற்கை முறையில் நீக்க???

nathan

பொலிவான பட்டுப்போன்ற சருமத்தைப் பெற உதவும் ஆயுர்வேத ஃபேஸ் பேக்கு(face pack)

nathan

பப்பாளி சருமத்தை பளபளப்பாக

nathan

வீட்டிலேயே செய்யப்படும் ஃபேஷியல் டிப்ஸ்

nathan

பிளாக்ஹெட்ஸை அகற்ற, நீங்கள் முட்டையின் வெள்ளை பகுதியை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

nathan

கோடையில் வெளியில் சென்று வந்த பின் முகத்திற்கு செய்ய வேண்டியவை

nathan

வீட்டிலேயே நாமாகவே ஃபேஷியல் செய்யும் முறை

nathan

உங்களுக்கு முகத்தில் மச்சம் இருக்கிறதா? அப்ப இத படிங்க!

nathan

முக வறட்சியை போக்கும் காட்டு முள்ளங்கி பேஸ் க்ரீம்

nathan