25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
E0AE95E0AEB0E0AF81 E0AEA8E0AF80E0AEB3 E0AE95E0AF82E0AEA8E0AF8DE0AEA4E0AEB2E0AF8D
தலைமுடி சிகிச்சை

நீண்ட கருமையான கூந்தல்வேண்டுமா?

* சீப்பு உங்களுக்கென்று தனியாக வைத்துக்கொள்ளவும். வாரத்தில் மூன்று தடவை அதைக் கழுவ வேண்டும். உலோகத்தால் ஆன சீப்புகளைத் தவிர்க்கவும். நல்ல மரச் சீப்பினால் அழுந்த வாரினால் மயிர்க் கால்களில் இரத்த ஓட்டம் அதிகமாவதோடு முடி வளர்வதும் தூண்டப்படுகிறது.

* தேங்காயைத் தண்ணீர் சேர்க்காமல் அரைத்துப் பால் பிழியவும். இதை இரும்புக் கடாயில் காய்ச்சினால் எண்ணெய் தனியாக வரும். அந்த எண்ணெயைத் தலையில் தடவி ஊறிய பின் சீயக்காய் அல்லது கடலை மாவு தேய்த்து அலசவும்.

* கூந்தல் வறண்டு இருந்தால் ஒரு கிண்ணத்தில் மருதாணிப் பொடி, தேங்காய்ப்பால், தேங்காய் எண்ணெயும் சேர்த்துக் குழைத்துத் தலையில் மசாஜ் செய்யவும். அரை மணி நேரம் கழித்துத் தலைக்குக் குளிக்கலாம்.

* விளக்கெண்ணையைப் போல் குளிர்ச்சி தருவது வேறு எதுவுமே இல்லை. விளக்கெண்ணெய் இரண்டு டேபிள் ஸ்பூன், தேங்காய் எண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன் எடுத்து இலேசாகச் சுடவைத்து மயிர்க்கால்களில் நன்றாகப் படும்படி தடவி விடவும். ஒரு பழைய துணியை வெந்நீரில் நனைத்து பிழிந்து, தலையின் மீது சுற்றவும். அந்தச் சூடு உள்ளே இறங்கும். சற்று ஆறியதும் மீண்டும் அவ்வாறு செய்யவும். பிறகு தலையை ஷாம்பூ போட்டு அலசி விடவும். முடி உதிராமல் இருக்க முத்தான வழி இது.

* தலைக்கு சீயக்காய்த்தூள் தேய்த்துக்கொள்ளும் போது, சீயக்காய்த் தூளுடன் தண்ணீருக்குப் பதில் மோர் விட்டுக் கரைத்து தேய்த்துக் குளித்தால், தலை முடியில் உள்ள அழுக்கு சுத்தமாக நீங்கி விடும். சீயக்காயும் குறைந்த அளவே போதும்.
%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81 %E0%AE%A8%E0%AF%80%E0%AE%B3 %E0%AE%95%E0%AF%82%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D

Related posts

பொடுகை போக்கி, இளநரையை தடுக்கும் வெந்தயம்

nathan

தலைமுடி உதிர்வதைத் தடுக்கும் அற்புத ஹேர் மாஸ்க்!இத ட்ரை பண்ணி பாருங்க…….

nathan

முடியின் அடர்த்தியை அதிகரிக்க வேண்டுமா? அப்ப இதெல்லாம் ட்ரை பண்ணி பாருங்க…

nathan

பொடுகு தொல்லையா? இதோ சில டிப்ஸ்!

nathan

கூந்தல் உதிர்வை தடுக்கும் முட்டை மசாஜ்

nathan

தேங்காய் எண்ணெயில் (Coconut Oil) வெந்தயத்தை சேர்த்து காய்ச்சி தலையில் தேய்த்து வந்தால் பொடுகுப் பிரச்சனை போயே போச்சு!

nathan

உங்க கூந்தல் வளர என்ன செய்யலாம்?அப்ப இத படிங்க!

nathan

உங்களுக்கு வெள்ளை முடி இருக்கா? அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

எத்தனை நாட்களுக்கு ஒருமுறை ‘ஷாம்பு’ பயன்படுத்தலாம்

nathan