நீங்கள் இல்த்தரசியா? வேலையில் இருந்து ஓய்வு பெற்றவரா? ஓய்வு நேரத்தை பயனுள்ளதாக்க சில வழிகள் இதோ! ஓய்வு நேரத்தை எப்படி செலவு செய்வது என்று தெரியாமல் பலர் நேரத்தை வீணடித்துக் கொண்டிருப்பார்கள்.அவர்களுக்கு பயனுள்ள சில யோசனைகள். வீட்டில் இருக்கும் பெண்கள், அவர்களுக்குப் பிடித்த வாழை, மலர் செடிகள்,துளசி, மருதாணி போன்றவற்றை வாங்கி வளர்க்கலாம். வீட்டில் தோட்டம் வைக்கும் அளவுக்கு இடம் இல்லை என்றால், இருக்கவே இருக்கு தொட்டிகள்; அதில் வளர்க்கலாம்.லேசாக உடைந்த பெரிய பிளாஸ்டிக் உபகரணங்களில், மலர்ச் செடிகள், ருதாணி, வெண்டைக்காய், தக்காளி, கத்தரிக்காய், கீரைகள், புதினா, கொத்தமல்லி, மிளகாய் செடி போன்றவற்றை நட்டு வளர்க்கலாம். இதனால் நம் வீட்டு காய்கறி செலவு மிச்சம் ஆவதுடன் மிஞ்சிய காய்களை அக்கம் பக்கம் உள்ளவர்களுக்கும் விற்கலாம்.நம் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு தனித்திறமை ஒளிந்திருக்கும். பாட்டு, சமையல், நல்ல கல்வி அறிவு, நடனம், கைவினை, தையல் போன்ற ஏதோ ஒன்று தெரிந்திருக்கும். அவற்றை அருகில் வசிப்பவர்களுக்கு சொல்லித் தரலாம். பிற மொழி தெரிந்திருந்தால், அதை சில மணி நேரம் மட்டுமே வகுப்பெடுத்து நாமும் பயன் பெறலாம்.தினந்தோறும் அல்லது முடிந்த போதெல்லாம் அருகில் உள்ள ஆசிரமம், முதியோர் இல்லங்களுக்குச் சென்று அங்கிருப்பவர்களிடம் பேசி விட்டு வரலாம். அவர்கள் ஏங்கும் ஒரே விசயம் உறவுகள் தான். அதையும் நீங்கள் செய்த மாதிரி இருக்கும்.
உங்களுக்கும் ஒரு ஆத்ம திருப்தி கிடைக்கும். வீட்டில் ஒரு கணினி இருந்தால் அதைக்கொண்டு ஆன்லைன் புக்கிங், கரண்ட் பில், போன் பில் கட்டுதல், பங்குச்சந்தையில் முதலீடு செய்தல் போன்றவற்றைச் செய்யலாம்.
வீட்டில் இருந்தபடியே, உங்களின் பொருளாதாரத்தை முன்னேற்றும் வழிமுறைகள் ஏராளம், அதற்கான பயிற்சி வகுப்புக்களும் நடைபெறுகின்றன. அதை தேர்ந்தெடுத்துக்களமிறங்கலாம். இதற்காக குறிப்பிட்ட நேரம் ஒதுக்கினால் போதும்.