24.7 C
Chennai
Saturday, Dec 13, 2025
24 1487915579 4 face mask
முகப் பராமரிப்பு

காலையில் தூங்கி எழும் போது முகம் பிரஷ்ஷாக இருக்க வேண்டுமா? அப்ப இத ஃபாலோ பண்ணுங்க…

காலையில் எழும் போது பலரும் தங்களது முகத்தை கண்ணாடியில் பார்ப்பார்கள். அப்படி பார்க்கும் போது, முகம் புத்துணர்ச்சியின்றி இருந்தால், அதுவே பலரது மனநிலையை பாதிக்கும். ஆனால் ஒரு குறிப்பிட்ட செயல்களை இரவில் படுக்கும் போது செய்தால், நிச்சயம் மறுநாள் காலையில் தூங்கி எழும் போது, நன்கு பிரஷ்ஷாக காட்சியளிக்கலாம்.

இக்கட்டுரையில் ஒவ்வொரு நாளும் காலையில் எழும் போது, முகம் பிரஷ்ஷாக காட்சியளிக்க இரவில் படுக்கும் முன் மேற்கொள்ள வேண்டிய சில பழக்கங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் படித்து தெரிந்து, அவற்றைப் பின்பற்றினாலே நிச்சயம் முகம் பிரகாசமாக புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

டிப்ஸ் #1 சில துளிகள் லாவெண்டர் எண்ணெயை சிறிது நீரில் கலந்து, இரவில் படுக்கும் முன், முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து தூங்கினால், இரவில் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெறுவதோடு, மறுநாள் காலையில் முகமும் பிரகாசமாக காட்சியளிக்கும்.

டிப்ஸ் #2 பலருக்கும் இரவில் படுக்கும் முன் எண்ணெயைக் கொண்டு மசாஜ் செய்து தூங்கினால், பருக்கள் வந்துவிடுமோ என்ற அச்சம் இருக்கும். ஆனால் இரவில் படுக்கும் முன் ஃபேஷியல் எண்ணெய்களைக் கொண்டு மசாஜ் செய்து தூங்கினால், சரும செல்கள் ஊட்டம் பெற்று, முகம் எப்போதும் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

டிப்ஸ் #3 இரவில் படுக்கும் முன்பும், காலையில் எழுந்த பின்பும் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தைக் கொள்ளுங்கள். இது ஆரம்பத்தில் சற்று கடினமாக தான் இருக்கும். ஆனால் இப்படி நீரைக் குடிப்பதால் ஓர் முக்கிய நன்மை உள்ளது. அது தூங்கி எழுந்ததும் வாய் துர்நாற்றம் வீசுவதைத் தடுக்கும்.

டிப்ஸ் #4 இரவில் படுக்கும் முன் முகத்திற்கு கடலை மாவு மற்றும் பால் சேர்த்து மாஸ்க் போட்டு ஊற வைத்து கழுவி தூங்கினால், பாதிக்கப்பட்ட சரும செல்கள் புதுப்பிக்கப்படுவதோடு, சரும ஆரோக்கியமும் தக்க வைக்கப்படும்.

டிப்ஸ் #5 இரவில் படுக்கும் முன்னும், காலையில் எழுந்த பின்பும் முகத்தை குளிர்ந்த நீரில் நன்கு கழுவுங்கள். இந்த ஒரு செயலே சருமத்தில் உள்ள அழுக்குகளை வெளியேற்றி, முகத்தை பொலிவோடு காட்டும்.

டிப்ஸ் #6 முக்கியமாக மொபைல், லேப்டாப் போன்றவற்றை அதிகம் பயன்படுத்துவதை நிறுத்துங்கள். அதுவும் இரவில் படுக்கும் முன் இவற்றைப் பயன்படுத்துவதைத் தவிர்த்தாலே, இரவில் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெற்று முகத்தைப் பொலிவோடு வைத்துக் கொள்ளலாம்.

24 1487915579 4 face mask

Related posts

பளபளப்பான அழகான முகத்தை பெற கிரீன் டீயை இவ்வாறு பயன்படுத்துங்கள்!…

sangika

இதோ பெண்களின் முகத்தில் வளரும் தேவையற்ற முடிகளை நீக்க சில டிப்ஸ்…!

nathan

உங்க முகம் ஹீரோயின் மாதிரி அழகாக இருக்க… இதை செய்யுங்கோ..!!

nathan

சருமத்திற்கு அழகு தரும் பீர் பேஷியல்

nathan

பொலிவு தரும் முகப் பூச்சுகள்

nathan

அழகை கெடுக்கும் முகப்பருவிலிருந்து! இதை மட்டும் பயன்படுத்துங்கள்..

nathan

இதை நீங்களே பாருங்க.! உதட்டை விட்டு கண்ணுக்கு தாவிய பெண்கள்

nathan

முகத்தில் இருக்கும் தழும்புகளை நீக்குவதற்கான சில எளிய வழிகள்!

nathan

ஸ்டிக்கர் பொட்டு அலர்ஜியால் வரும் கருமை மறைய டிப்ஸ்

nathan