25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
news 14 07 2017 45f
சரும பராமரிப்பு

எல்லோருக்குமே தங்கள் இளமை அழகைத் தக்கவைத்துக்கொள்ள ஆசை. அதற்காக என்னென்னவோ செய்கிறார்கள்.

யார், யாரோ கூறும் யோசனைகளைப் பின்பற்றுகிறார்கள், பலவித அழகுசாதனப் பொருட்களை வாங்கிப் பயன்படுத்துகிறார்கள், அவ்வப்போது அழகு நிலையத்துக்கும் சென்று வருகிறார்கள்.
ஆனால் கன்னாபின்னாவென்று அழகு முயற்சிகளை மேற்கொண்டால் செல்கள் பாதிக்கப்பட்டு விரைவில் தோல் சுருங்கிவிடும். மாறாக, சரியான உணவுகளை தொடர்ந்து உட்கொண்டு வந்தால், இளமை எழிலைக் காக்கலாம்.

அத்தகைய உணவுகள் பற்றிப் பார்ப்போம்…
கீரை: கீரையில் லுட்டின் மற்றும் சீக்சாக்தைன் என்னும் ஆன்டிஆக்சிடன்ட்கள் அதிகம் உள்ளன. எனவே கீரையை தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் இளமைத் தோற்றத்துடன் இருக்கலாம். ஒரு கப் பசலைக் கீரையில், சருமத்துக்கும், உடலுக்கும் ஆரோக்கியத்தைத் தரும் ஆன்டி ஆக்சிடன்ட்களான லைகோபீன் மற்றும் பல வைட்டமின்கள் நிறைந்துள்ளன.

ஆன்டி ஆக்சிடன்ட் உணவுகள்: நல்ல ஆரோக்கியமான, இளமைத் தோற்றத்தை நீட்டிக்கும் ஆன்டிஆக்சிடன்ட் அதிகம் உள்ள உணவுகளை சேர்த்து வந்தால், உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறி, உடல் நன்கு பொலிவு பெறும். அதிலும் குறிப்பாக, வைட்டமின் சி, ஏ, ஈ, லைகோபீன், லுட்டின் போன்ற ஆன்டி ஆக்சிடன்ட்கள் நிறைந்த பழங்களையும் காய்கறிகளையும் உணவில் அதிகம் சேர்த்து வந்தால், முதுமை வயதிலும், சற்று இளமையுடனேயே இருக்கலாம்.

மாம்பழம்: கோடைகாலத்தில் மாம்பழம் மிகவும் தாராளமாகக் கிடைக்கும். இந்தப் பழத்தில் கரோட்டினாய்டு, பீட்டா கரோட்டீன் என்னும் ஆன்டி ஆக்சிடன்ட் அதிகம் உள்ளது. இவை சருமத்தை பொலிவோடு வைத்துக்கொள்ள உதவும். எனவே முடியும்போதெல்லாம் மாம்பழம் வாங்கிச் சாப்பிடுவது, இளமை எழிலுக்கு உதவும்.

முட்டை: முட்டையிலும் லுட்டின், சீக்சாக்தைன் ஆகிய ஆன்டி ஆக்சிடன்ட்கள் நிறைந்துள்ளன. இவை சருமத்துக்கு மட்டுமின்றி, கண்களுக்கும் சிறந்தவை.
புராக்கோலி: பச்சை இலைக் காய்கறிகளில், புராக்கோலியில் அதிக அளவில் லைகோபீன் உள்ளது. எனவே இந்தக் காய்கறியை தொடர்ந்து உணவில் சேர்த்துவந்தால், சருமத்தில் உள்ள சுருக்கங்களைப் போக்கி, நன்கு இளமையாகக் காணப்பட வழிகோலும்.
பால்: பாலில் கால்சியம், புரதம் மட்டுமின்றி வைட்டமின் ‘ஏ’ மற்றும் கரோட்டீனாய்டுகள் அதிகம் நிறைந்துள்ளன. எனவே பாலை அதிகம் குடித்தால், நிச்சயம் உடல் ஆரோக்கியத்துடன் இளமையோடு இருக்கலாம்.

குடைமிளகாய்: குடைமிளகாயில் சருமத்தையும், உடலையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் வைட்டமின் ‘ஏ’ அதிகம் உள்ளது. குடை மிளகாய்கள் பல வண்ணங்களில் உள்ளன. இவை அனைத்திலுமே கரோட்டினாய்டுகளும், பீட்டா கரோட்டீனும் அதிகம் உள்ளன.
ஆரஞ்சு, எலுமிச்சை: சிட்ரஸ் பழங்களில் ஆரஞ்சு, எலுமிச்சையில் வைட்டமின் ‘சி’ நிறைந்திருக்கிறது. எனவே இந்தப் பழங்களைச் சாப்பிட்டால் இவற்றில் உள்ள வைட்டமின் ‘சி’, உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, சருமத்தைப் புத்துணர்ச்சியுடனும், அழகாகவும் வைத்துக் கொள்ள உதவுகிறது.

நீர்ச்சத்து நிறைந்துள்ள இந்தப் பழங்களில் லைகோபீன் அதிகம் உள்ளது. எனவே இவற்றை அதிகம் சாப்பிட, வெயிலினால் பாதிப்படைந்த சருமச் செல்கள் அனைத்தும் குளிர்ச்சியடைந்து, சருமம் அழகாகும்.

தக்காளி: தக்காளியில், சருமத்தில் உள்ள சுருக்கங்களையும் முதுமைக் கோடுகளையும் தடுக்கும் லைகோபீன் அதிகமாக இருக்கிறது. எனவே இதை அப்படியே சாப்பிடலாம் அல்லது சருமத்துக்கு ‘மாஸ்க்’ போல தடவிப் பயன்படுத்தலாம்.

உடற்பயிற்சி: ஆரோக்கியமான காய் கறிகள், பழங்களுடன், போதுமான உடற் பயிற்சி செய்வதும் முக்கியம். உடல் உறுப்புகளின் சீரான செயல்பாட்டுக்கும், நல்ல நிலையில் வைத்துக்கொள்வதற்கும் உடற்பயிற்சியே உதவும். உடற்பயிற்சி செய்வதன் மூலம் தசைகள் நன்றாக விரிவடையும். ரத்த ஓட்டம் சீராகும், உடலில் சோர்வு நீங்கி புத்துணர்ச்சி ஏற்படும், மனதில் உற்சாகம் பிறக்கும். ஆழ்ந்த உறக்கம் வரும்.

தொடர்ந்து உடற்பயிற்சி செய்பவர் களுக்குப் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புகள்கூட குறையும் என்கிறது ஓர் ஆராய்ச்சி.

வாரத்துக்கு மூன்று மணி நேரம் நடந்தால், மாரடைப்பைத் தடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று ஓர் ஆய்வு கூறுகிறது. தொடர்ந்து உடற்பயிற்சியில் ஈடுபடுபவர்களுக்கு மாரடைப்பு மட்டுமல்ல, பல்வேறு நோய்கள் வருவதற்கான வாய்ப்பும் வெகுவாகக் குறையும்.
அதிகாலை 5 மணிக்கெல்லாம் எழுந்து உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, யோகாசனம் போன்றவற்றில் ஈடுபடலாம். காலை வேளையில் சுத்தமான காற்றைச் சுவாசிக்கும்போது, சுகமான காற்று முகத்தில் படும்போது புத்துணர்ச்சி கிடைக்கும்.

பிறகு, அரை மணி நேரம் கழித்து சூடான ஆரோக்கிய பானம் எதையாவது பருகலாம். காலை வேளை உணவைத் தவிர்க்காமல் சாப்பிட வேண்டும். மதியம், இரவு உணவுகளையும் நேரந்தவறாமல் சாப்பிட வேண்டும். எளிதில் செரிமானம் ஆகும் உணவுகளை, அளவோடு சாப்பிடுவது நல்லது.

இரவு உணவை அதிகபட்சம் 8 மணிக்குள் முடித்துவிட வேண்டும். அதன் பின் 10 மணிவாக்கில் கட்டாயம் தூங்கி விட வேண்டும். இரவில் நெடுநேரம் கண் விழித்திருப்பது கூடவே கூடாது.
‘ஜங்க் புட்’ எனப்படும் துரித வகை உணவுகளை தொடக் கூடாது. செயற்கைக் குளிர்பானங்களை அறவே தவிர்க்க வேண்டும்.

இவை எல்லாவற்றையும் தவறாது பின்பற்றினால், என்றும் 16 என உற்சாகமாய் நீங்கள் வலம் வரலாம்!
news 14 07 2017 45f

Related posts

இந்த எளிய வழிமுறைகளை பின்பற்றினால், நீங்களும் ஒரு அழகி தான்!

sangika

ஒரே வாரத்தில் முகத்தில் உள்ள சுருக்கங்கள் எல்லாம் காணாமல் போய் விடும்!…

sangika

கை, கால் முட்டிகளில் கருப்பு நிறம் மாற….

nathan

தேங்காய் எண்ணெய்யை தொப்புளில் விடுங்கள் கிடைக்கும் நன்மைகளோ ஏராளம் தெரியுமா ?

nathan

பளபளப்பான சருமம் வேண்டுமா?

nathan

ஆண்களே தெரிஞ்சிக்கங்க…ஷேவ்விங் செய்த பிறகு சருமத்தில் உள்நோக்கி வளரும் முடிகளை தடுப்பது எப்படி?

nathan

விளக்கெண்ணெயின் அழகு நன்மைகள்!!!

nathan

கோடைக்காலத்தில் ஏற்படும் அரிப்பு பிரச்சனையை சமாளிக்க வழிகள்

nathan

பெண்களே இடுப்பு பகுதியில் ஏற்படும் கருமையை போக்க வேண்டுமா? அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan