செய்முறை
அரிசிமா – 1/2 கப்
பயறு – 1/4 கப்
தேங்காய்ப்பால் – 2 கப்
பனங்கட்டி – 3/4 கப்
தேங்காய்ச்சொட்டு – 3 மேசைக்கரண்டி
உப்பு
தண்ணீர்
பயறு, அரிசிமாவை தனித்தனியாக வெறும் சட்டியில் போட்டு வறுக்கவும்.
2 கப் தண்ணீரைக் கொதிக்கவைத்து அதனுள் வறுத்த பயறை போட்டு அவிய விடவும்.
பயறு ஓரளவு வெந்தவுடன் அரிசி மாவை தேங்காய்ப்பாலில் கரைத்து அதனுள் விடவும்.
மா கட்டிபடாமல் இருக்குமாறு அடிக்கடி கிளறவும்.
மா வெந்ததும் (கூழ் தடிப்பாகும்) அதனுள் பனங்கட்டி , உப்பு, தேங்காய்ச்சொட்டு சேர்த்து கிளறி இறக்கவும்.
சுவையான ஆடிக்கூழ் தயார். சுடச்சுட அருந்தவும்.
குறிப்பு:
தேங்காயை சிறிய துண்டுகளாக வெட்டுவதுதான் தேங்காய்ச்சொட்டு. பனங்கட்டிக்கு பதில் கற்கண்டு சேர்க்கலாம் (கற்கண்டுக்கூழ்)