25.9 C
Chennai
Sunday, Feb 23, 2025
p23a
தலைமுடி சிகிச்சை

முடி வளர்ச்சியை தூண்டும் 6 உணவுகள்

ஆரோக்கியமான, அடர்த்தியான கூந்தலே நம் ஒவ்வொருவரின் ஆசையும். ஆனால், வாழ்க்கைமுறை மாற்றங்கள், தவறான உணவுப்பழக்கம், பாரம்பர்யம் போன்ற காரணிகளால் நம் முடி கபளீகரம் செய்யப்படுகிறது. உறுதியான கூந்தலுக்கு வைட்டமின் ஏ, சி, இ, பி5, பி6, பி12, இரும்புச்சத்து, துத்தநாகம், புரதம், கொழுப்பு அமிலங்கள் மிக முக்கியம். இவை நம் கூந்தலை பட்டுப்போன்று மென்மையாகவும் ஆரோக்கியமாகவும் மாற்றக்கூடியவை.

பருப்புகள்: பருப்பு வகைகளில் அதிக அளவு துத்தநாகம், பயோட்டின், இரும்புச்சத்து, புரதம் உள்ளன. குறிப்பாக, புரதச்சத்து தலைமுடிக்கு நல்ல உறுதியையும் வளர்ச்சியையும் கொடுக்கும். முடி உலர்ந்துபோகாமல் தடுக்கும். முடிக்கு நல்ல ஊட்டச்சத்தைக் கொடுக்கும்.

சர்க்கரைவள்ளிக் கிழங்கு: இதில் வைட்டமின் ஏ, பீட்டாகரோட்டின் நிறைவாக உள்ளன. மேலும், புரதம், தாமிரம், இரும்புச்சத்தும் உள்ளது. தினமும் உணவில் சர்க்கரைவள்ளிக் கிழங்கைச் சேர்த்துக்கொண்டால், முடி கொட்டுவதைத் தவிர்க்கலாம். இதில் வைட்டமின் ஏ நிறைந்துள்ளதால், செல் மற்றும் திசுக்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. முடிக்கும் சருமத்துக்கும் ஆரோக்கியத்தைத் தருகிறது. வறட்சியான சருமம், முடி, பொடுகு போன்றவை வைட்டமின் ஏ குறைபாட்டாலும் வரக்கூடியவையே.

கேரட்: வைட்டமின் ஏ உள்ளதால் முடியோடு சேர்த்து, கண்களுக்கும் சிறந்தது. தோல் மற்றும் முடியை இளமையாக மாற்றும் தன்மை இதற்கு உண்டு. சாலட் அல்லது ஜூஸ் போன்று தினமும் சேர்த்துக்கொள்வது நல்லது. முடி உதிர்வைக் கட்டுப்படுத்துகிறது. தினமும் காலை ஒரு கிளாஸ் கேரட் ஜூஸ் குடித்துவந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

பால் பொருட்கள்: குறைந்த கொழுப்புச்சத்துள்ள சீஸ், தயிர், கொழுப்பு நீக்கப்பட்ட பால் ஆகியவற்றில் ‘கேஸின்’ (Casein) எனும் ஊட்டச்சத்து உள்ளது. மேலும், புரதச்சத்து நிறைந்தது. இதனால், தலையில் வறட்சி ஏற்படுவது தடுக்கப்படுகிறது. இது முடி வளர்ச்சிக்குப் பெரிதும் உதவும்.

அடர் நிறப் பழங்கள்: மாம்பழம், ஸ்ட்ராபெர்ரி, கிவி, அன்னாசியில் வைட்டமின் சி உள்ளதால், முடியின் வடிவத்தைக் கொடுக்கக்கூடிய கொலாஜனை உற்பத்திசெய்யும். இந்தப் பழங்கள் அனைத்தையும் சாலட்போல் செய்து சாப்பிடலாம். தோலுக்கு நல்ல நிறத்தையும், முடிக்கு நல்ல பளபளப்பையும் தரக்கூடியது.

பச்சை வண்ணக் காய்கறிகள்: பச்சைக் காய்கறிகள், கீரைகளில் வைட்டமின் ஏ மற்றும் சி மிகுதியாக உள்ளன. இது, தலையில் உள்ள எண்ணெய் சுரப்பியைத் தூண்டி, முடிக்கு இயற்கையான கண்டிஷனராகச் செயல்படுகிறது.p23a

Related posts

மென்மையான பளபளப்பான கூந்தல் பெற வேண்டுமா…..பெண்களே தெரிஞ்சிக்கங்க…

nathan

பெரும்பாலானோருக்கு ஏற்படும் முடிப் பிளவுக்குத் தீர்வு!

nathan

டிப்ஸ் இங்கே.. உச்சந்தலை பிசுபிசுப்பாக உள்ள எண்ணெய் தலைமுடியை தவிர்க்க

nathan

வழுக்கை விழுவதைத் தடுக்க வழிகள்

nathan

குளிக்காலத்துல உங்க தலைமுடி கொட்டாம இருக்கவும் அதிகமா வளரவும் என்ன செய்யணும் தெரியுமா?தெரிஞ்சிக்கங்க…

nathan

கோடை காலத்தில் கூந்தல் வறட்சியை போக்கும் இயற்கை வழிகள்

nathan

தலைமுடி காக்கும் இயற்கையான வழிகள்!

nathan

தலைமுடி உதிர்வதைத் தடுத்து, முடியின் வளர்ச்சியைத் தூண்ட சாப்பிட வேண்டிய உணவுகள்!

nathan

உங்களுக்கு தலைமுடி ரொம்ப கொட்டுதா?இதோ எளிய நிவாரணம்

nathan