தினமும் அவசர அவசரமாக மேக்கப் செய்யும் போது, சில சொதப்பல்களை செய்திருப்போம்… இது மட்டும் எனக்கு வரவே மாட்டிங்குது என்று வருத்தப்பட்டிருப்போம்… பவுண்டேஷன்,கன்சீலர், ஸ்மோக்கி ஐ, காண்ட்டோரிங் ….. எனத் துவங்கி பல விதமான மேக்கப்களை அறிந்து வைத்திருக்கும் நமக்கு அதனை நடைமுறைப்படுத்துவதில் பலவிதமான சிக்கல்கள் இருக்கும். அதனை இன்னும் எளிதாக செய்வதற்கும், அழகு சாதனப்பொருட்கள், க்ரீம்கள் என பலவற்றையும் பயன்படுத்தும் நாம் அதை இப்படியும் பயன்படுத்தலாம் என்பதற்கும் சில உதாரணங்கள்.
ஐ பென்சில் :
கண்மையிடுவதற்காக இப்போது பெரும்பாலான பெண்கள் பென்சிலைத்தான் பயன்படுத்துகிறார்கள், அது எவ்வளவுதான் சீவினாலும் டார்க்காக வரவில்லையென்றாலோ அல்லது ஜெல் லைனர் மாதிரியான தோற்றம் வேண்டும் என்றால் அந்த பென்சிலை லேசாக தீயில் காட்டுங்கள்.
ஸ்பூன் : கண்ணுக்கு Winged லைனர் போட நினைப்பவர்கள் ஸ்பூனை பயன்படுத்தலாம். முதலில் ஸ்பூனை பிடிக்கும் தண்டுப் பகுதியை நெற்றியிலிருந்து மேல் நோக்கி கண் அருகில் வைத்து ஒரு கோடு வரைந்து கொள்ளுங்கள்,பின்னர் ஸ்பூன் பகுதியை நீங்கள் கோடு வரைந்த இடத்திற்கு அருகில் வைத்து வளைவை வரைந்து கொள்ளுங்கள். இப்போது உங்களுக்கு பார்டர் லைன் கிடைத்துவிடும், அதை பேஸாக வைத்து நடுவில் முழுவதும் நிரப்பிக் கொள்ளலாம்.
ஸ்மோக்கி ஐ : ஸ்மோக்கி ஐ ஷேடோ போட வேண்டும் ஆனால் சரியாக போட முடியவில்லை என்று தவிப்பவர்களுக்கான சூப்பர் டிப்ஸ் இது. கண்ணோரத்தில் சாய்வாக ஒரு X மார்க் போட்டுக்கொள்ளுங்கள் அந்த X மார்க்கில் டார்க்காக ஆரம்பித்து பாதி கண்களில் லைட்டாக முடியும் படி ஷேடோ இட்டால் பெர்ஃபெக்ட் ஸ்மோக்கி ஐ வந்துவிடும்.
மஸ்காரா : மஸ்கரா போடும் போது கண்களின் மேற்பகுதிகளில் மஸ்கரா ஒட்டுவிடும் என்கிற பயம் இனி இருக்காது உங்களுக்கு மஸ்கரா போடும் போது ஸ்பூனின் பின் பகுதியை கண்ணுக்கு மேலே பிடியுங்கள். கண் இமைகள் ஸ்பூனில் படுமாறு இருக்கும். இப்போது நீங்கள் பயமில்லாமல் மஸ்கரா போட்டுக் கொள்ளலாம்.
ஐ லாஸ் : ஐ லாஸ் அணிவதற்கு முன்னால் அதனை ஹீட்டரில் காட்டினால் நீண்ட நேரம் நன்றாக கர்வாக இருக்கும் அதே போல ஐ லாஸ் அணிபவர்கள் அதில் கம் தடவ ஹேர் பின் பயன்படுத்தலாம்.
லிப்ஸ்டிக் : நீண்ட நேரம் லிப்ஸ்டிக் இருக்க வேண்டும் என்றால், முதலில் லிப்ஸ்டிக் போட்டுக் கொள்ளுங்கள் பின்னர் அதன் மீது ஒரு டிஸ்யூ பேப்பரை வைத்து அதில் ரோஸ் பவுடர் லேசாக போட்டுக் கொண்டால் லிப்ஸ்டிக் நீண்ட நேரம் இருக்கும்.
டார்க் சர்க்கிள் : கண்ணைச் சுற்றியுள்ள டார்க் சர்க்கில் இருந்தாலோ அல்லது வீங்கிய கண்களை மறைக்க கன்சீலர் பயன்படுத்தும் போது கண்ணுக்கு கீழேயிருந்து தலைகீழான முக்கோணமாக அப்ளை செய்யுங்கள். முக்கோணத்தின் நுனிப் பகுதி கன்னத்தை நோக்கி இருக்க வேண்டும்.
கண்ட்டோரிங் : ஒவ்வொரு மாதிரியான முக அமைப்பு இருக்கும் எந்த இடத்தில், எந்த கோணத்தில் கண்ட்டோரிங் செய்வது என்பதில் குழப்பங்கள் இருக்கும். இதனை எளிதாக தீர்க்க முடியும், மேக்கப் எல்லாம் முடிந்த பிறகு கடைசியாக கண்ட்டோரிங் செய்கையில் பென், அல்லது மேக்கப்பிரசின் தண்டுப் பகுதியைக் கொண்டு உங்கள் கன்னத்தில் லேசாக உருட்டுங்கள் அப்படி செய்தால் கண்ட்டோரிங் செய்ய வேண்டிய இடம் கச்சிதமாக தெரியும்.