29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
tDedHP1
முகப் பராமரிப்பு

கருவளையம் எளிதாக மறைக்கப்பட அற்புதமான வைத்திய முறை !!

கருவளையம் ஒருவரின் அழகை குறைக்கச் செய்யும். அதனை மேக்கப் போட்டு மறைப்பதற்கு பதிலாக இயற்கையாக மறையச் செய்ய முயற்சி செய்யுங்கள். இங்கே சொல்லப்பட்டிருக்கும் குறிப்புகள் மிகவும் சக்தி வாய்ந்தவை விரைவில் கருவளையத்தைப் போக்கும் மூலிகை குறிப்புகள். பயன்படுத்திப் பாருங்கள்.

ஆரஞ்சு சாறு : கண்களின் கருவளையத்தை தவிர்க்க ஆரஞ்சுப்பழச் சாற்றை கண்ணுக்குக் கீழே தேய்த்து சற்று நேரம் கழித்து இதமான வெந்நீரில் கழுவிவிடுங்கள் பிறகு அந்த இடத்தில் வெள்ளரிப் பிஞ்சை தேயுங்கள். மெல்ல மெல்ல கருவளையம் காணாமல் போய்விடும்.

பூசணிக்காய் : பூசணிக்காயை சிறு துண்டுகளாக நறுக்கு கண்மேல் வைத்தால் மெல்ல மெல்ல கருவளையம் மறையும்.

அகத்திக் கீரை : கண்களுக்குக் கீழே கருவளையம் இருப்பவர்கள் அகத்திக்கீரையை சிறிதளவு தேங்காய்ப் பால் விட்டு அரைத்து உடல் முழுவதும் தேய்த்துக் குளித்தால் தோல் பிரச்சினைகள் இருக்காது.

தக்காளி வெள்ளரி கலவை : ஒரு வெள்ளரித்துண்டு, அரை தக்காளி இரண்டையும் அரைத்துக் கொள்ளுங்கள். இமைகளின் மேல் கலவையைப்பூசி 2 நிமிடம் கழித்துக் கழுவுங்கள். ஓரிரு வாரங்கள் இதைச் செய்து வந்தாலே கருவளையம் காணாமல் போவதுடன் கண்களும் பளிச்சென்று இருக்கும்.

தாமரைப் பூ : தாமரைப்பூ இதழ்களை மிக்சியில் தண்ணீர் விடாமல் அரைக்கவும். அதில் 2 ஸ்பூன் விளக்கெண்ணெயும், 1 ஸ்பூன் தேனும் கலந்து 7 மணி நேரம் வெளியே வைக்கவும். பிறகு ஃப்ரிட்ஜில் வைத்துக் கொண்டு, கண்களைச் சுற்றி பேக் போலத் தடவி, 1 மணி நேரம் கழித்துக் கழுவவும்

சாமந்திப் பூ : 2 கைப்பிடி சாமந்திப்பூவின் இதழ்களை மட்டும் எடுத்துக் கொள்ளவும். 1 கப் தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து, அதில் இந்தப் பூக்களைப் போட்டு, உடனே மூடி வைக்கவும். 24 மணி நேரம் அப்படியே ஊறட்டும். பிறகு அந்தத் தண்ணீரை ஃப்ரிட்ஜில் வைத்துக்கொண்டு, அவ்வப்போது பஞ்சில் நனைத்து கண்களின் மேல் வைத்துக் கொள்ளலாம்.tDedHP1

Related posts

இயற்கை வழியில் வெள்ளையாக வேண்டுமா? அப்ப இத ஃபாலோ பண்ணுங்க

nathan

பருக்கள் வந்த இடத்தில் இருக்கும் துளைகளை போக்கணுமா? அப்ப தினமும் செய்யுங்க…

nathan

முகத்தில் உள்ள இறந்தசெல்களை நீக்கி சருமத்தை அழகாக்க சூப்பர் டிப்ஸ்??முயன்று பாருங்கள்…

nathan

முக அழகை பொலிவாக வைத்து கொள்ள…..

sangika

சூப்பர் டிப்ஸ்! சிவப்பழகை எளிதில் பெற வேண்டுமா? அப்போ கற்றாழையை இப்படி பயன்படுத்துங்க

nathan

சூப்பர் டிப்ஸ்! உங்க முகம் ஃபிரெஷ்ஷா, பளிச்சுன்னு இருக்க இந்த ஃபேஸ் ப்ளீச் பயன்படுத்துங்க!

nathan

சருமத்தை எப்போதுமே பளபளவென மாற்ற!

sangika

பெண்களே தெரிஞ்சிக்கங்க…ஆச்சரியப்பட வைக்கும் சில நேச்சுரல் மேக்கப் ரிமூவர்கள்!!!

nathan

இரவு கிரீம்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் 11 அற்புத நன்மைகள்

nathan