25.5 C
Chennai
Sunday, Dec 22, 2024
GhkKhym
சரும பராமரிப்பு

உங்கள் சருமத்திற்கு மெருகூட்டும் பிபி, சிசி, டிடி க்ரீம் பற்றி தெரியுமா? தெரியலைன்னா தெரிஞ்சுக்கோ

இந்த காலத்து பெண்களுக்கு நிறைய விஷயங்களில் சுதந்திரமான நேரங்கள் கிடைத்துள்ளது. ஆனால் இருந்தாலும் தங்களை அழகாக வைத்துக் கொள்ள போதுமான நேரத்தை செலவழிக்க அவர்கள் தவறிவிடுகின்றனர். மார்க்கெட்டில் விற்கப்படும் நிறைய கெட்ட கெமிக்கல்கள் கலந்த பியூட்டி பொருட்களையே வாங்கி தங்களை அழகு படுத்திக் கொள்ள முயல்கின்றனர்.
அழகு பராமரிப்புக்கான மார்க்கெட் வளர்ந்து கொண்டே வருகிறது. இருக்கிற பொருட்கள் தவிர நிறைய புதுமையான பியூட்டி பொருட்களும் விற்பனைக்கு வரத்தான் செய்கிறது.

இந்த புதிய பொருட்களை எல்லாம் பெண்கள் பயன்படுத்தி மட்டும் பார்த்து விட்டு அதை வாங்கி விடுகின்றனர். ஆனால் அது எப்படி செயல்படுகிறது அதன் பயன்கள் என்பதை பற்றிய எந்த ஒரு தகவலும் அவர்களுக்கு தெரிவதில்லை.

உங்களுக்கான பியூட்டி பொருட்களை வெளியில் வாங்கும் போது உங்களுக்கு தேவையான பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும். நீங்கள் வாங்கும் ஷாப்பில் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் எல்லா பொருட்களையும் வாங்கக் கூடாது.

உங்களது சரும வகை, வயது மற்றும் வேற காரணங்களை மனதில் கொண்டு தான் உங்களுக்கு தேவையான பியூட்டி பொருட்களை வாங்க வேண்டும். சரி உங்களுக்கு எந்த வகை பியூட்டி பொருட்கள் தேவை என்பது தெரியவில்லை என்றாலும் எதுவுமே தெரிய வில்லை என்றாலும் கவலைப்பட வேண்டாம்.

அதற்காகத்தான் நாங்கள் கீழே தற்போது மார்க்கெட்டில் விற்கப்படும் மூன்று வகையான BB, CC மற்றும் DD க்ரீம்களை பற்றிய தகவலை இங்கே கொடுக்க உள்ளோம்.

இந்த மூன்று க்ரீம்களை பற்றி நிறைய பேர் குழப்பத்தில் இருக்கின்றனர். இந்த மூன்று க்ரீம்களும் வித்தியாசமானவை. மேலும் வெவ்வேறு பயன்பாட்டுக்கு பயன்படுகிறது. சரி வாங்க இப்பொழுது அதை பற்றி பார்க்கலாம்.

1.BB க்ரீம் இதன் விரிவாக்கம் Beauty Balm அல்லது Beauty Benefit என்பதாகும். இது பொதுவாக சாதாரணமாக பயன்படுத்தப்படும் க்ரீம் ஆகும். இது உங்களுக்கு மீடியம் சரும நிறத்திலிருந்து நல்ல கலரையும், சரும நிறத்தை சமநிலையாக்குதல், சூரியக்கதிர்களிடமிருந்து பாதுகாப்பு மற்றும் தினமும் சருமத்திற்கு ஈரப்பதம் அளித்தல் போன்ற பயன்களை அள்ளித் தருகிறது.

ஆழமான பவுண்டேஷன் பண்ணாத தினமும் கேஷூவலான மேக்கப் போடும் பெண்களுக்கும் அல்லது ஆபிஸ் போகும் பெண்களுக்கு முகப்பரு மற்றும் கரும்புள்ளிகளை மறைப்பதற்கு பயன்படுகின்றனர்.

சில BB க்ரீம்கள் சருமம் வெள்ளையாகுவதற்கும் பயன்படுகிறது. இது அவசரமான மீட்டிங் மற்றும் டேட்டிங் போன்ற மேக்கப்பிற்கு சிறந்தது. ஒரு நல்ல BB க்ரீம்யை எடுத்து முகத்தை நன்றாக வாஷ் பண்ணி விட்டு தடவி கொஞ்சம் ஹைலைட்டர் மற்றும் லிப்ஸ்டிக் போட்டு போனால் போதும் மிகவும் அழகாக காட்சி அளிப்பீர்கள்.

2.CC க்ரீம்ஸ் இந்த வகை க்ரீம்கள் நம் இந்திய மார்க்கெட்டில் இப்பொழுது தான் நுழைந்துள்ளது. இது உங்களை அழகாக செதுக்க பயன்படுகிறது. இதன் விரிவாக்கம் Coverage Control அல்லது Color Corrector என்று அழைக்கப்படுகிறது. இது நிறைய வெவ்வேறு பயன்பாட்டுக்கு பயன்படும் க்ரீம் ஆகும்., இது லைட்டான தன்மையை கொடுத்தாலும் BB க்ரீமுடன் ஒப்பிடும் போது நல்ல கவரேஜை கொடுக்கிறது. இந்த க்ரீம் பிரைமர், பிரைட்டனர், பவுண்டேஷனுடன் சூரியக்கதிர்களிடம் இருந்து சருமத்தை பாதுகாத்தல் மற்றும் ஆன்டி ஏஜிங் பயன்கள் போன்றவற்றை தருகிறது. இதில் அடங்கியுள்ள கனிம நிறமிகள் சரியில்லாத பவுண்டேஷனை மறையச் செய்கிறது.

சில CC க்ரீம்களில் தீவிர சரும பிரச்சினைக்கு எதிராக செயல்படும் தன்மையும், சூரிய ஒளி பாதிப்பு மற்றும் சுருக்கங்கள் போன்றவற்றை போக்கும் தன்மைகளையும் கொண்டுள்ளது. தினமும் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளுக்கும் மற்றும் தினசரி பழக்க வழக்கத்திற்கும் இதை உபயோகிக்கலாம்.

3.DD க்ரீம்ஸ் இந்த வகை க்ரீம்கள் நம் இந்திய மார்க்கெட்டில் தற்போது இல்லை. BB க்ரீம்கள் மற்றும் CC க்ரீம்களை முன்னோடியாக வைத்து இதை கொண்டு வந்துள்ளனர். இது Daily Defense என்று அழைக்கப்படுகிறது. இது சூரியக் கதிர்கள் பாதிப்பு அல்லது சருமம் வெள்ளையாகுதல் போன்றவற்றை செய்வதில்லை. இதனால் இது எல்லாராலும் விரும்பப்படுவதில்லை. கடினமான வேலைப் பார்ப்பவர்களுக்கு இது தேவையான ஈரப்பதத்தை தருகிறது. முகத்திற்கு மட்டுமில்லாமல் கால்கள் கைகள் போன்றவற்றிற்கும் போதுமான ஈரப்பதத்தை அளிக்கிறது. இதை பெரிதும் வறண்ட பகுதிகளான கால்கள், மூட்டுகள் மற்றும் தோள்பட்டை பகுதியில் பயன்படுத்துவர்.

புதிதாக வந்துள்ள DD க்ரீம்கள் வெளிநாட்டு மார்க்கெட்டில் விற்கப்படுகிறது. இதில் ஆன்டி ஏஜிங் பொருட்கள், சருமத்தை மிருதுவாக்குதல் மற்றும் சரும கோடுகளை சரி செய்தல் போன்றவற்றை செய்கிறது. என்னங்க இப்பொழுது உங்களுக்கு இந்த மூன்று வகை க்ரீம்களை பற்றி நன்றாக தெரிந்து இருக்கும் அல்லவா. இதில் உங்களுக்கு தகுந்த க்ரீம்யை தேர்ந்தெடுத்து பயன்படுத்துங்கள். நீங்கள் கண்மூடித்தனமாக மார்க்கெட்டில் வாங்கும் க்ரீம்களால் உங்கள் சருமம் பாதிக்கத்தான் படுமே தவிர நல்ல பலன் கிடைக்கும் வாய்ப்புகள் குறைவு. தேவையில்லாத பொருட்களை எல்லாம் உங்கள் முகத்திற்கு ஏற்றாதீர்கள். அதற்கு மூச்சுவிட நேரம் கொடுங்கள். உங்கள் சருமத்தை பராமரிப்பது மிகவும் எளிது, எல்லாம் உங்கள் கைக்குள் இருப்பதில்லை இருந்தாலும் இங்கே உள்ள தகவலை பின்பற்றினால் வாழ்க்கையின் முக்கியமான செயல்களை செய்திட போதுமான நேரம் கண்டிப்பாக உங்களுக்கு கிடைக்கும்.GhkKhym

Related posts

பெண்களின் சருமத்தை அழகூட்டும் இயற்கை பொருட்கள்

nathan

சுருக்கம் இல்லாத சருமம் வேண்டுமா ?

nathan

சரும பிரச்சனைகளைத் தடுக்க வெந்தயத்தைப் பயன்படுத்துவது எப்படி?

nathan

அழகாக இருப்பதற்கான 6 ரகசியங்கள்!

nathan

கருவளையும், கழுத்தும் கருமையும் இருந்த இடம் காணாமல் போக

nathan

கோடைக்காலங்களில் சரும நோய்

nathan

இதோ சில இயற்கை வழிகள்! குதிகால் வெடிப்பை போக்க…

nathan

உங்களை அழகாக்கும் ரகசியம் காபிக் கொட்டைகளிடம் இருக்கிறது.

nathan

முகம் முழுக்க ஒரே நிறமா இல்லாம சில இடத்துல வெள்ளையும், சில இடத்துல கருப்பும் இருக்கே என்ன செய்றது…

nathan