29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
diTATfY
தலைமுடி சிகிச்சை

தலை அரிப்பை போக்குவது எப்படி போக்குவது எப்படி தெரியுமா?

நமக்கு அருகில், எளிதில் கிடைக்க கூடிய பொருட்கள், இல்லத்தில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பக்கவிளைவில்லாத பயனுள்ள மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், தலையில் உண்டாகும் அரிப்பை குணப்படுத்தும் மருத்துவத்தை பார்க்கலாம். இப்பிரச்னைக்கு ஆவாரம் பூ, அருகம்புல், பூண்டு, மஞ்சள் ஆகியவை மருந்தாகிறது.

தலையின் மேல் உள்ள தோல் பகுதியில் ஏற்படும் அரிப்பு காரணமாக செதில் செதிலாக மாவுபோன்று கொட்டுகிற நிலை, ஈறு மற்றும் பேன்கள் உருவாவது, பொடுகு தொல்லை, இதை தொடர்ந்து உடலில் அரிப்பு, சொரி போன்றவை ஏற்படும். பொடுகினால் அரிப்பு உண்டாகும். சொரியாசிஸ் உடல் முழுவதும் வரக்கூடியது. குறிப்பாக, கைகால் மூட்டுகளில் வந்து துன்புறுத்தும். இப்பிரச்னைகளை தடுக்க ஆரம்பத்திலேயே மருந்து எடுத்துக்கொள்வது அவசியம்.

ஆவாரம் பூவை பயன்படுத்தி தலை அரிப்பை போக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: ஆவாரம் பூ, இலுப்பை எண்ணெய். செய்முறை: ஆவாரம் பூ பசையுடன் இலுப்பை எண்ணெய் சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சவும். இதை வடிகட்டி இளஞ்சூடாக எடுத்து வாரம் இருமுறை தேய்த்து குளிப்பதால் தலையில் அரிப்பு, பொடுகு, சொரியாசிஸ் போன்றவை குணமாகும்.

பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட ஆவாரை சாலையோரங்களில் காணக்கூடியது. ஆண்டு முழுவதும் பூவோடு இருக்கும். தங்க நிறமுடைய பூக்களை கொண்டுள்ளது. அருகம்புல்லை பயன்படுத்தி தோல், தலையில் உண்டாகும் அரிப்பை குணமாக்கும் மருந்து தயாரிக்கலாம். அருகம்புல் சாறுடன் சிறிது மஞ்சள் பொடி, சித்தரத்தை பொடி சேர்த்து நன்றாக கலந்து தலையில் தேய்த்து அரைமணி நேரம் கழித்து குளித்தால் தலையில் ஏற்படும் அரிப்பு, பொடுகு தொல்லை நீங்கும்.

நல்லெண்ணெய்யை பயன்படுத்தி தலையில் ஏற்படும் அரிப்புக்கான மருந்து தயாரிக்கலாம். ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் எடுக்கவும். இதனுடன் பூண்டு பற்களை லேசாக தட்டிபோடவும். வெண்மிளகு பொடி சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சவும். தலையில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்தால் தலையில் உண்டாகும் அரிப்பு, பொடுகு தொல்லை நீங்கும். உடலுக்கு தேய்த்து குளிப்பதால் அரிப்பு பிரச்னை நீங்கும்.

தயிரை பயன்படுத்தி தலையில் ஏற்படும் அரிப்புக்கான மருந்து தயாரிக்கலாம். வெள்ளை மிளகு பொடி கால் ஸ்பூன் அளவுக்கு எடுக்கவும். இதனுடன் சிறிது தயிர் சேர்த்து கலந்து தலையில் மசாஜ் செய்து குளித்துவர அரிப்பு குணமாகும். தலையில் அரிப்பு ஏற்பட்டால், சிறிது உப்பு எடுத்து வெதுவெதுப்பான நீரில் கரைத்து தலையில் தேய்த்து குளித்தால் அரிப்பு இல்லாமல் போகும்.

குழந்தைகளுக்கு ஏற்படும் வயிறு மாந்தம், வயிற்றுபோக்கு பிரச்னைக்கான மருந்து தயாரிக்கலாம். முன்பெல்லாம் வயிற்று கோளாறு என்று வந்தால் ஓமம் தேனீர் பயன்படுத்துவார்கள். தற்போது மருந்து கடைகளில் கிடைக்கும் மருந்துகளைதான் உபயோகப்படுத்துகிறோம். ஓமம் கால் ஸ்பூன் எடுக்கவும். இதில், அரை டம்ளர் நீர் ஊற்றி அதை கால் பங்காக காய்ச்சவும். இதனுடன் தேன் சேர்த்து குழந்தைகளுக்கு கொடுத்துவர வயிற்று வலி, வயிற்றுபோக்கு, மாந்தம், வாந்தி உள்ளிட்ட வயிற்று கோளாறுகள் குணமாகும்.diTATfY

Related posts

முடி வளர்ச்சிக்கு கறிவேப்பிலையை எப்படி பயன்படுத்த வேண்டும்?

nathan

நீங்கள் Hair style செய்து கொள்வதற்கு முன் இதைப் படியுங்கள்..

nathan

தலைமுடி உதிர்வதைத் தடுக்கும் சில எளிய கிராமத்து வைத்தியங்கள்!

nathan

முடி வளர்ச்சியைத் தூண்டும் இயற்கை முறையில் செய்யப்படும் வைத்திய குறிப்புகள்

nathan

பிசுபிசுப்பான கூந்தலுக்கான காரணமும் தீர்வுகளையும் தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா?

nathan

முயன்று பாருங்கள்.. வீட்டிலேயே தயாரிக்கலாம்! தலை முடி வளர்ச்சியை தூண்டும் மூலிகை தைலம்.

nathan

சூப்பர் டிப்ஸ் முகத்தை பொலிவாக்க பேஷியல் செய்ய குளிர்காலம் மிகவும் ஏற்றது

nathan

இப்படி முடி வெடிச்சிகிட்டே இருக்கா? அப்ப இத படியுங்க….இனி அந்த கவலை எதுக்கு?

nathan

முடி வளர சித்த மருத்துவம்

nathan