27 C
Chennai
Thursday, Nov 14, 2024
201706271524324201 super sidedish Crab Kurma SECVPF
அசைவ வகைகள்

சைடிஷ் நண்டு குருமா செய்வது எப்படி

சப்பாத்தி, புலாவ், ஆப்பம், இடியாப்பம், சாதத்திற்கு தொட்டுக்கொள்ள சூப்பரானது நண்டு குருமா. இன்று இந்த குருமாவை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

சூப்பரான சைடிஷ் நண்டு குருமா செய்வது எப்படி
தேவையான பொருட்கள் :

நண்டு – 1 கிலோ
எண்ணெய் – தேவையான அளவு
தேங்காய் பால் – 2 டம்ளர்
இஞ்சி, பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
கொத்தமல்லிதழை – சிறிதளவு
கறிவேப்பிலை – ஒரு கொத்து
கரம்மசாலாத்தூள் – ½ டீஸ்பூன்
வெங்காயம் – 2
தக்காளி – 1
பச்சைமிளகாய் – 2
மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்

அரைக்க :

தேங்காய் துருவல் – அரை கப்
மஞ்சள்த்தூள் – 2 டீஸ்பூன்
மிளகுத்தூள் – 1 டீஸ்பூன்
மல்லித்தூள் – 3 டீஸ்பூன்
சீரகத்தூள் – 2 டீஸ்பூன்
சோம்புத்தூள் – 1 டீஸ்பூன்
முந்திரி – 6
பாதாம் – 6
பூண்டு – 5 பல்

செய்முறை :

* நண்டை நன்றாக கழுவி வைக்கவும்.

* அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.

* வெங்காயம், தக்காளி, ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* அரைத்த விழுதை பாத்திரத்தில் போட்டு அதனுடன் இரண்டு டம்ளர் தண்ணீர், சிறிதளவு உப்பு சேர்த்து கரைத்து விட்டு, அதனுடன் பாதி கொத்தமல்லிதழையை சேர்த்து கொள்ளவும்.

* ஒரு அகலமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் ப.மிளகாய், தக்காளி அரை ஸ்பூன் உப்பும் சேர்த்து வதக்கவும்.

* தக்காளி நன்றாக வதங்கியதும் அதில் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும்.

* இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் மிளகாய்த்தூள், கரம்மசாலாத்தூள் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.

* இப்பொழுது கரைத்து வைத்திருக்கும் கரைசலை ஊற்றி கொதி வந்தவுடன் நண்டை போட்டு கொதிக்க விடவும்.

* இரண்டு கொதி கொதித்ததும் மிதமான தீயிலேயே வைக்க வேண்டும்.

* குருமா திக்கான பதம் வந்தவுடன் கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்.

* சூப்பரான சைடிஷ் நண்டு குருமா ரெடி.201706271524324201 super sidedish Crab Kurma SECVPF

Related posts

முட்டை குழம்பு வைப்பது எப்படி,ருசியான முட்டை குழம்பு ,egg curry recipe

nathan

காடை முட்டை குழம்பு

nathan

காரசாரமான ஆட்டு மூளை மசாலா

nathan

சூப்பரான செட்டிநாடு ஸ்டைல் முட்டை குழம்பு

nathan

சுவையான மட்டன் கடாய்

nathan

சுவையான க்ரீன் சில்லி சிக்கன்

nathan

சில்லி இறால் வறுவல் : செய்முறைகளுடன்…!

nathan

சிக்கன் கிரேவி / Chicken Gravy

nathan

மசாலா மீன் வறுவல்

nathan