29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
27 1422357438 1 hairloss
தலைமுடி சிகிச்சை

முடி உதிர்தலை அறவே நிறுத்தும் அற்புத உபயோகமான குறிப்புகள்!! இதோ உங்களுக்காக !!!

சருமப் பிரச்சனைகள் அனைத்திற்கும் உதவக்கூடிய ஒரு அற்புதமான பொருள் என்றால் அது தேங்காய் எண்ணெய் தான். சாப்பிடுவதில் இருந்து, சரும பராமரிப்பு வரை அனைத்திற்கும் தேவைப்படுவது தேங்காய். தேங்காய் சருமத்திற்கு மட்டுமல்ல தலைமுடிக்கும் சிறந்தது. இது ஆன்டிசெப்டிக், ஆன்டி வைரல் மற்றும் ஆன்டி பாக்டீரியல் ஆகியவையாக செயல்படுகிறது.
27 1422357438 1 hairloss
இதனால், தலை முடிப் பிரச்சனைகள் அனைத்திற்கும் சிறந்த மருந்தாகவே தேங்காய் விளங்குகிறது. விலைக் குறைவான அற்புதமான மருந்தான தேங்காய் எண்ணெயை தினமும் தலைக்கு தேய்த்து வந்தாலே பல பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம்.
தேங்காய் எண்ணெயை வைத்து செய்யக்கூடிய சில ஹேர் மாஸ்க் பற்றி இப்போது பார்ப்போம். இவற்றைப் படித்து தலைமுடிக்கு இந்த மாஸ்க்கை போட்டால் மிருதுவான, அடர்த்தியான மற்றும் வலுவான கூந்தலை நிச்சயம் பெறலாம்.
x10 1494397753 blood purify2.jpg.pagespeed.ic .QjTl4odwGV
தேங்காய் மற்றும் எலுமிச்சை ஹேர் மாஸ்க்
1/2 கப் தேங்காய் எண்ணெயை சிறிது சூடேற்றி இறக்கி, அத்துடன் 2-3 ஸ்பூன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, ஸ்கால்ப்பில் தடவி, வெதுவெதுப்பான நீரில் நனைத்த துணியால் தலையைச் சுற்றி, சிறிது நேரம் ஊற வைத்து, பின் ஷாம்பு பயன்படுத்தி வெதுவெதுப்பான நீரில் தலைமுடியை அலச வேண்டும்.
05 1496641947 2avocado 1
தேங்காய் எண்ணெய் மற்றும் அவகேடோ மாஸ்க்
பொலிவிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட தலைமுடியைக் கொண்டவர்களுக்கு இந்த மாஸ்க் ஏற்றது. அதற்கு 1/2 கப் தேங்காய் எண்ணெயுடன் 5-7 ஸ்பூன் அவகேடோ எண்ணெய் சேர்த்து கலந்து, ஸ்கால்ப்பில் தடவி மசாஜ் செய்து, பின் ஷாம்பு பயன்படுத்தி அலச வேண்டும். ஒருவேளை உங்களிடம் அவகேடோ எண்ணெய் இல்லாவிட்டால், அவகேடோ பழத்தை மசித்து சேர்த்து பயன்படுத்தலாம்.
05 1496641959 3sheabutter 1
தேங்காய் எண்ணெய் மற்றும் ஷியா வெண்ணெய்
தலைமுடி வறட்சியுடன் தேங்காய் நார் போன்று இருந்தால், இந்த ஹேர் மாஸ்க் நல்ல மாற்றத்தைக் கொடுக்கும். அதற்கு 1/2 கப் தேங்காய் எண்ணெயுடன் சிறிது ஷியா வெண்ணெய், 2 ஸ்பூன் அர்கன் ஆயில் சேர்த்து கலந்து, ஸ்கால்ப்பில் தடவி நன்கு மசாஜ் செய்து, 1/2 மணிநேரம் கழித்து, ஷாம்பு பயன்படுத்தி குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
05 1496641970 4honey 1
தேங்காய் எண்ணெய் மற்றும் தேன் மாஸ்க்
பெரும்பாலான தலைமுடி பிரச்சனைகளை தேங்காய் எண்ணெய் மற்றும் தேன் ஹேர் மாஸ்க் சரிசெய்யும். அதற்கு 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெயுடன் 2 ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, தலைமுடியில் தடவி 20 நிமிடம் நன்கு ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
05 1496641983 5egg 1
தேங்காய் எண்ணெய் மற்றும் முட்டை
ஸ்கால்ப்பில் உள்ள தீவிர பிரச்சனையை சரிசெய்ய தேங்காய் எண்ணெய் முட்டை மாஸ்க் உதவும். அதற்கு 1 கப் தேங்காய் எண்ணெயுடன் 1 முட்டையின் வெள்ளைக்கருவை சேர்த்து நன்கு கலந்து, ஸ்கால்ப்பில் படும்படி தடவி சிறிது நேரம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் அலச வேண்டும்.
05 1496641994 6coconutmilk 1
தேங்காய் எண்ணெய் மற்றும் தேங்காய் பால்
தலையில் எப்போதும் ஈரப்பசை இருக்க வேண்டுமானால், இந்த தேங்காய் எண்ணெய் மற்றும் தேங்காய் பால் மாஸ்க் போடுங்கள். அதற்கு 1/2 கப் தேங்காய் எண்ணெயுடன், 1/2 கப் தேங்காய் பால் சேர்த்து கலந்து, ஸ்கால்ப்பில் தடவி நன்கு மசாஜ் செய்து, 45 நிமிடம் கழித்து ஷாம்பு பயன்படுத்தி வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
05 1496642005 7banana 1
தேங்காய் எண்ணெய், வாழைப்பழம் மற்றும் அவகேடோ
1 அவகேடோ பழத்தின் சதைப் பகுதியை ஒரு பௌலில் போட்டு மசித்து, அத்துடன் 1 வாழைப்பழத்தையும் மசித்து சேர்த்து, சிறிது தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து ஸ்கால்ப்பில் தடவி 10 நிமிடம் கழித்து, ஷாம்பு போட்டு வெதுவெதுப்பான நீரில் அலசவும்.
05 1496642415 8aloevera 1
தேங்காய் எண்ணெய் மற்றும் கற்றாழை ஜெல்
2 ஸ்பூன் தேங்காய் எண்ணெயுடன் 2 ஸ்பூன் கற்றாழை ஜெல் சேர்த்து கலந்து, ஸ்கால்ப்பில் படும்படி தடவி நன்கு மசாஜ் செய்து, 20-25 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இந்த மாஸ்க்கால் தலைமுடி நன்கு வலிமையடையும்.
05 1496642016 9vitamine 1
தேங்காய் எண்ணெய் மற்றும் வைட்டமின் ஈ மாஸ்க்
இந்த ஹேர் மாஸ்க் வறட்சியான மற்றும் பொலிவிழந்துள்ள தலைமுடியினருக்கு ஏற்றது. இந்த மாஸ்க் செய்ய 1 கப் தேங்காய் எண்ணெயுடன், 1 ஸ்பூன் வைட்டமின் ஈ எண்ணெய் மற்றும் 1 ஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, தலையில் தடவி 15 நிமிடம் நன்கு ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் அலச வேண்டும்.

Related posts

மோசமான பொடுகை விரட்டும் வெங்காயச்சாறு சூப்பர் காம்பினேஷனை உபயோகப்படுத்துவது எப்படி?

nathan

உங்களுக்கு தெரியுமா பெண்களை கவர கூடிய சுருட்டை முடியை ஆண்கள் பெறுவது எப்படி..?

nathan

தினமும் தலை முடியை அலசுபவர்களா நீங்கள்? பல பக்க விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்

nathan

கூந்தல் உதிர்ந்து தலை வழுக்கை ஆகிவிட்டதா? இதை படிங்க…

nathan

பொடுகு என்றால் என்ன? எதனால் வருகிறது?

nathan

தலைக்கு ஏன் தேங்காய் எண்ணெய் பயன்படுத்த வேண்டும்?

nathan

இளநரையை போக்கும் மூலிகை தைலம்!!

nathan

பெண்களுக்கு ஏற்படும் முடி உதிர்தலுக்கான முதன்மையான 10 காரணங்கள்!!!தெரிஞ்சிக்கங்க…

nathan

கூந்தல்: கோடை பாதிப்புக்கான வீட்டு சிகிச்சை

nathan