28.4 C
Chennai
Sunday, Nov 17, 2024
chicken1 05 1496645103
அசைவ வகைகள்

இப்தார் விருந்துக்கு சிக்கன் நகட்ஸ் தயாரிப்பது எப்படி? சிம்பிள் விளக்கம்!!

இது ரம்ஜான் மாதம் அல்லவா! அதனால் வீட்டிலிருக்கும் பெண்கள், எதாவது புதிய டிஷ்ஷினை இப்தாரில் சமைத்து, வீட்டில் உள்ளவர்களை ருசியால் அசத்த வேண்டுமென ஆசைகொள்வார். அனைவரும் அறிந்த சிக்கன் கறி, சிக்கன் கபாப் யம்மி டேஸ்டினை தந்து, உங்கள் வயிற்றினை நிரப்பினாலும்…அதனை விட புதிய யம்மி டேஸ்ட் டிஷ்ஷினை பார்த்தால்…நம் மனம் அதனை மறக்கதானே செய்யும்.

இந்த சிக்கன் நகட்ஸ், க்ரிஸ்பியாக இருப்பதுடன்…வெளியில் க்ரஞ்சியாகவும் இருந்து, ஈரப்பதத்துடனும் ஜூசியாகவும் உள்ளே அமைந்து, நம் நாவை ருசியால் வருடுகிறது. இந்த சிக்கன் நகட்ஸ், ஆரோக்கியமாகவும் அத்துடன் சத்துள்ளதாகவும் அமைந்து நம் மனதில் நீங்கா இடத்தினை பிடிக்கிறது.

கண்டிப்பாக உங்கள் வீட்டில் உள்ள குட்டீஸில் தொடங்கி பெரியவர்கள் வரை இந்த சிக்கன் நகட்ஸ் கவரும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் வேண்டாம். நாங்கள் இப்பொழுது தரப்போகும் ரெசிபியை கொண்டு உங்கள் வீட்டிலேயே ஆரோக்கியமான மற்றும் டேஸ்டியான சிக்கன் நகட்ஸினை, நீங்கள் சமைத்து மகிழலாம்.

பரிமாற – 4 நபர் குக்கிங்க் டைம் – 30 மினிட்ஸ் தயாரிக்க – 2 மணி நேரம்

தேவையான பொருட்கள்: சிக்கன் – வெட்டுவதற்கு உகந்தது தயிர் – 1 கப் (கெட்டியானது) வாட்டர் – ¼ கப் சால்ட் – 1 டீ ஸ்பூன்

சிக்கன் நகட்ஸுக்கு தேவையான பொருட்கள்: கோழியின் மார்புப்பகுதி – 250 கிராம் ப்ளைன் மாவு – ½ கப் பெப்பர் பவுடர் – ½ டீ ஸ்பூன் கரம் மசாலா – ½ டீ ஸ்பூன் இஞ்சி மற்றும் பூண்டு பேஸ்ட் – ½ டீ ஸ்பூன் முட்டை – 1 ப்ரட் க்ரம்ப்ஸ் – ¾ கிராம் உப்பு – ருசிக்கு ஏற்றவாறு

செய்முறை: 1. கடிப்பதற்கு உகந்த அளவில் கோழி மார்பகங்களை நறுக்கவேண்டும். 2. கெட்டியான தயிர், தண்ணீர் மற்றும் சால்டை மிக்ஸ் பண்ணி ஒரு கரைசல் போல் வைத்துகொள்ள வேண்டும். அந்த கரைசலில் சிக்கன் மார்பக பீஸ்களை நன்றாக முக்கி ஓர் இரவு அல்லது 2 மணி நேரமாவது குளிர்சாதனபெட்டியில் வைக்க வேண்டும். 3. அதன்பின் கோழித்துண்டுகளை மட்டும் தனியாக எடுத்துவிட்டு, அந்த கரைசலை வடிகட்ட வேண்டும். பிறகு, ½ அளவு உப்பு, பெப்பர் பவுடர் மற்றும் கரம் மசாலாவை சிக்கன் பீஸ்களுடன் சேர்த்து முழுவதுமாக மிக்ஸ் பண்ண வேண்டும். இந்த முறைகளை கொண்டு நம்மால் கோழி பீஸ் ஸாப்டாக இருக்கிறதா? என்பதனை உறுதி செய்துகொண்டு, வறுக்க உகந்ததா என்பதனையும் உறுதி செய்துகொள்ள வேண்டும்.

4. ஒரு பௌலில் ப்ளைன் மாவை எடுத்துக்கொள்ள வேண்டும். மீதமிருக்கும் உப்பு, பெப்பர் பவுடர் மற்றும் கரம் மசாலாவை நன்றாக மிக்ஸ் பண்ணி கொள்ள வேண்டும். 5. மற்றுமொரு பௌலில் நன்றாக வடிகட்டப்பட்ட சிக்கன் பீஸை எடுத்துகொள்ள வேண்டும். மீதமிருக்கும் பெப்பர் பவுடரையும், உப்பையும் அதோடு சேர்க்க வேண்டும். அத்துடன் கரம் மசாலாவையும் பௌல் முழுவதும் எல்லா இடங்களிலும் பரவுமாறு மிக்ஸ் பண்ண வேண்டும். 6. இன்னொரு பௌலை எடுத்துகொள்ளுங்கள். முட்டையை உடைத்து அதில் ஊற்றி கொள்ளுங்கள். முட்டையை நன்றாக உடைத்துகொள்ள (கூல் போல்) வேண்டியது அவசியமாகும்.

7. மூன்றாவது பௌலை எடுத்துகொண்டு…அதில் ப்ரட் க்ரம்பினை சேர்த்துகொள்ள வேண்டும். 8. இப்பொழுது சிக்கன் மார்பு பீஸ்களை எடுத்துகொண்டு, அதனை அந்த பீஸ்கள் முழுவதும் படுவது போல் மாவோடு நன்றாக உருட்ட வேண்டும். 9. இப்பொழுது சிக்கன் பீஸ்களை, நன்றாக முட்டை உடைத்து கூளாக்கப்பட்டிருக்கும் பௌலில் முக்க வேண்டும். 10. முட்டை பூசப்பட்ட துண்டுகளை… ப்ரட்க்ரம்பில் (ரொட்டி துண்டுகள்) வைக்க வேண்டும். அதன் பின்னர் நன்றாக உருட்ட (முழுவதுமாக மூடப்படும்படி உருட்ட) வேண்டும்.

11. இந்த முறையை தொடர்ந்து செய்து…அனைத்து சிக்கன் பீஸ்களையும் ப்ரட் க்ரம்பை கொண்டு மூட வேண்டும். 12. சில நிமிடங்கள் கழித்து…ரொட்டி துண்டுகளை (ப்ரட்க்ரம்ப்) கொண்டு முழுவதுமாக சிக்கன் பீஸ்கள் மூடப்பட்டிருக்கிறதா? என்பதனை உறுதி செய்துகொள்ள வேண்டும். 13. இப்பொழுது பீஸை வெளியில் எடுத்து…நன்றாக குலுக்கி, எக்ஸ்ட்ரா இருக்கும் ப்ரட் க்ர்ம்ப்களை நீக்க வேண்டும். 14. மெதுவாக சிக்கன் பீஸை கடாயில் போட்டு…மிதமான சூட்டோடு இருக்கும் ஆயிலை அதில் ஊற்ற வேண்டும். ஒருவேளை ஆயில் மிகவும் சூடாக இருக்குமெனில், நக்கட்டின் வெளிப்புறம் ப்ரௌன் கலரில் மாறிவிடும். அப்பொழுது…உள்ளே சரியாக வேக வாய்ப்பில்லை என்று அர்த்தம்.

5. மேலும் 5 பீஸ்களை கடாயில் போட்டு வறுக்க வேண்டும். அதன் நிறம், கோல்டன் ப்ரௌன் கலர் வரும்வரை நன்றாக வறுக்க வேண்டும். 16. கிட்சன் பேப்பரை கொண்டு சிக்கன் நகட்ஸை நீக்க வேண்டும். 17. அனைத்து சிக்கன் நகட்ஸும் தயார் நிலையில் ஆகும் வரை இந்த முறையை தொடர்ந்து நீங்கள் செய்ய வேண்டும். 18. அவ்வளவுதான்…சுட சுட, இப்தார் ஸ்பெஷல் ரெடி ஆச்சு. அத்துடன் சூடான ஒரு கப் சாயாவும் ஆச்சு.

chicken1 05 1496645103

Related posts

பாதாம் சிக்கன்

nathan

குழந்தைகளுக்கு சத்தான கேரட் முட்டை ஆம்லெட்

nathan

அடுப்பு இல்லாமல் அசத்தலான டிஷ்…இலங்கையின் தேசிய உணவு -மாசிக்கருவாடு சம்பல்!

nathan

டேஸ்டி சிக்கன் வறுவல்

nathan

செஸ்வான் சிக்கன் நூடுல்ஸ்

nathan

சிக்கன் நக்கட்ஸ்-chicken nuggets

nathan

ரமலான் ஸ்பெஷல்: காஷ்மீரி ரோகன் ஜோஷ்

nathan

இரும்புச்சத்தை அதிகரிக்கும் முருங்கைக்கீரை முட்டை பொரியல்

nathan

இடுப்பில் இருக்கும் கருமை நிற‌ தழும்புகள் மறைந்து அழகாக . . .

nathan