25.5 C
Chennai
Monday, Jan 27, 2025
Best Money Saving Beauty Tips
சரும பராமரிப்பு

உங்க பிட்டம் அசிங்கமா சுருக்கத்தோட இருக்கா? அப்ப இத ட்ரை பண்ணுங்க…

சிலருக்கு பிட்டம், தொடை போன்ற பகுதிகள் அசிங்கமாக சுருக்கங்களுடன் காணப்படும். இதைத் தான் செல்லுலைட் என்று சொல்வார்கள். செல்லுலைட் உருவாவதற்கு காரணம், சருமத்தில் உள்ள கொழுப்புச் செல்கள் அளவுக்கு அதிகமாக பெரிதாவது தான். இந்த செல்லுவைட்டுகளைப் போக்க பல சிகிச்சைகள் இருந்தாலும், இயற்கை வழிக்கு நிகர் எதுவும் வர முடியாது.

அதுவும் ஆப்பிள் சீடர் வினிகர், செல்லுலைட்டுகளைப் போக்க ஏற்ற ஒன்று. இதில் உள்ள அமிலங்கள் மற்றும் உட்பொருட்கள், அளவுக்கு அதிகமான கொழுப்புக்களை கரைப்பதோடு, டாக்ஸின்களை வெளியேற்றி, உடலை சுத்தம் செய்யும். உடலில் உள்ள செல்லுலைட்டுகளைப் போக்க ஆப்பிள் சீடர் வினிகரை குடிக்கவும் செய்யலாம் அல்லது சருமத்தில் பயன்படுத்தவும் செய்யலாம்.

இங்கு செல்லுலைட்டுகளைப் போக்க ஆப்பிள் சீடர் வினிகரை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்று கொடுக்கப்பட்டுள்ளது.

வழி #1 தேவையான பொருட்கள்: ஆப்பிள் சீடர் வினிகர் – 2 டேபிள் ஸ்பூன் தண்ணீர் – 1/2 லிட்டர் தேன் – 1 டீஸ்பூன்

பயன்படுத்தும் முறை: மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை ஒன்றாக கலந்து, தினமும் காலையில் உணவு உண்பதற்கு முன் குடிக்க வேண்டும்.

ஆப்பிள் சீடர் வினிகரைக் குடிப்பதால் கிடைக்கும் இதர நன்மைகள்: ஆப்பிள் சீடர் வினிகரைக் குடிப்பதால், உடலில் உள்ள செல்லுலைட்டுகள் மறைவதோடு, உடலின் இதர பகுதிகளில் தேங்கியுள்ள கொழுப்புக்களும் கரைந்து, உடல் மெலிய ஆரம்பிக்கும்.

வழி #2 தேவையான பொருட்கள்: ஆப்பிள் சீடர் வினிகர் – சிறிது மசாஜ் க்ரீம் அல்லது நறுமணமிக்க எண்ணெய்கள் – சிறிது

பயன்படுத்தும் முறை: ஆப்பிள் சீடர் வினிகருடன், சில துளிகள் லாவெண்டர் அல்லது ரோஸ்மேரி எண்ணெய் சேர்த்து கலந்து, தினமும் இரண்டு முறை செல்லுலைட் உள்ள இடத்தில் தடவி மசாஜ் செய்து வந்தால், அப்பகுதியில் இரத்த ஓட்டம் மேம்பட்டு, செல்லுலைட் வேகமாக மறையும்.

Best Money Saving Beauty Tips

Related posts

உடல் அழகைப் பேணும் அற்புதமான 5 இயற்கை குறிப்புகள்

nathan

சருமம் மிருதுவாக வெங்காயத்தை இவ்வாறு பயன்படுத்துங்கள்!…

sangika

அக்குள் கருமையை போக்கும் அரிசி ஸ்கரப்

nathan

ஹாட் அரோமா ஆயில் மெனிக்யூர் பற்றி தெரியுமா? கரடுமுரடான கையை மிருதுவாக மாற்றும்!

nathan

30 களில் உங்கள் சரும நிறத்தை அதிகரிக்க இதையெல்லாம் செஞ்சு பாருங்க !!

nathan

அழகுக்காக பயன்படுத்தும் கஸ்தூரி மஞ்சளில், இவ்வளவு மருத்துவ குணங்களா? படியுங்க..

nathan

ஆரஞ்சு பழத்தை வைத்து சருமம், கூந்தலை பராமரிக்கும் முறைகளை பார்க்கலாம்.

nathan

பெண்களே கோடையில் அழகைப் பாதுகாக்க மாம்பழத்தை யூஸ் பண்ணுங்க…

nathan

இந்த அழகுப் பொருட்களையெல்லாம் நீங்கள் கடைகளில் வாங்கிடாதீங்க!!

nathan