28.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
06 1486372963 1 undereyes
ஆண்களுக்கு

ஆண்களே! எப்போதும் அழகாக காட்சியளிக்க வேண்டுமா? அப்ப இதெல்லாம் மறக்காம செய்யுங்க…

தற்போது பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் தங்களது அழகின் மீது அதிக அக்கறை கொண்டுள்ளனர். தங்களது அழகை அதிகரிக்க ஆண்கள் பல க்ரீம்கள் மற்றும் ஜெல்களை வாங்கிப் பயன்படுத்துகின்றனர். ஆனால் வெறும் க்ரீம்கள் மட்டும் ஒருவரது அழகை அதிகரித்துக் காட்டாது. ஆண்களின் அழகே அவர்கள் தங்களது உடலமைப்பை வைத்துக் கொள்வதில் தான் உள்ளது.

ஆண்கள் தங்களின் உடலமைப்பையும், சருமத்தையும் அழகாக வைத்துக் கொள்ள ஒருசில செயல்களை தவறாமல் செய்ய வேண்டும். இங்கு எப்போதும் அழகாக காட்சியளிக்க ஆண்கள் பின்பற்ற வேண்டிய சில செயல்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

மாய்ஸ்சுரைசர் மற்றும் சன்ஸ்க்ரீன் இவை இரண்டும் பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் தான். சரும செல்கள் ஆரோக்கியமாக இருந்தால் தான், நீண்ட நாட்கள் இளமையுடன் காட்சியளிக்க முடியும். அதற்கு இந்த மாய்ஸ்சுரைசர்களும், சன் ஸ்க்ரீனும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆகவே ஆண்களே, உங்களுக்காக விற்கப்படும் மாய்ஸ்சுரைசர் மற்றும் சன் ஸ்க்ரீனை தவறாமல் வாங்கிப் பயன்படுத்துங்கள்.

உடற்பயிற்சி அன்றாடம் உடற்பயிற்சியை மேற்கொள்வதன் மூலம், உடலமைப்பு கச்சிதமாக இருக்கும். அதற்கு ஜிம் சென்று தான் உடற்பயிற்சியை செய்ய வேண்டும் என்பதில்லை, யோகா, நண்பர்களுடன் கிரிக்கெட், கால் பந்து, கூடைப்பந்து போன்ற விளையாட்டுக்களிலும் ஈடுபடலாம். அதுவும் வாரத்திற்கு 5 நாட்கள் தவறாமல் பின்பற்ற வேண்டியது அவசியம்.

புகைப்பிடிப்பது புகைப்பிடித்தால், உடல் நலம் பாதிக்கப்படுவதோடு, சருமத்தில் வேகமாக சுருக்கங்களும் வரும். எனவே இளமையுடனும் ஆரோக்கியமானவராகவும் காட்சியளிக்க புகைப்பிடிப்பதை நிறுத்துங்கள்.

ஆரோக்கியமான டயட் ஆரோக்கியமான டயட்டை ஆண்கள் பின்பற்ற வேண்டியது மிகவும் அவசியம். இது அவர்களின் உடல் நலத்தில் மட்டுமின்றி, அழகிலும் முக்கிய பங்கை வகிக்கிறது.

தூக்கம் இரவில் நீண்ட நேரம் விழித்திருப்பதைத் தவிர்த்திடுங்கள். இதனால் போதிய ஓய்வு கிடைக்காமல் உடல்நலம் தான் மோசமாகும். மேலும் கருவளையங்கள், கண்களைச் சுற்றி சுருக்கங்கள் போன்றவை வர ஆரம்பித்து, முகப் பொலிவை இழக்கச் செய்துவிடும். எனவே தினமும் தவறாமல் குறைந்தது 7 மணிநேர தூக்கத்தை மேற்கொள்ளுங்கள்.

தண்ணீர் தினமும் போதிய அளவில் நீரைப் பருக வேண்டும். எவ்வளவுக்கு எவ்வளவு நீரை அதிகம் குடிக்கிறோமோ, சரும செல்கள் ஆரோக்கியமாகவும், புத்துணர்ச்சியுடனும் இருந்து, சருமத்தைப் பொலிவோடு வெளிக்காட்டும்.

பழங்கள் மற்றும் காய்கறிகள் பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் சாப்பிடுங்கள். இது ப்ரீ-ராடிக்கல்களால் உடல் பாதிக்கப்படுவதைத் தடுத்துப் பாதுகாக்கும். எனவே ஸ்நாக்ஸ் நேரத்தில் பேக்கரி பொருட்களை சாப்பிடாமல், ஃபுரூட் சாலட்டை சாப்பிடும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.

கார்டியோ பயிற்சிகள்
தினமும் கார்டியோ பயிற்சிகளான ரன்னிங், சைக்கிளிங் போன்றவற்றை 30 நிமிடம் செய்து வந்தால், மன அழுத்தம் குறைந்து, முகத்தைப் பிரகாசமாக வெளிக்காட்டும். மேலும் இப்பயிற்சிகளால் கலோரிகள் எரிக்கப்பட்டு, இதய ஆரோக்கியம் மேம்படும்.

06 1486372963 1 undereyes

Related posts

என்னென்ன பொருள்களை ஷேவிங் கிரீமுக்கு மாற்றாகப் பயன்படுத்தலாம் !..

sangika

உஷார்! இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் காதலி கழட்டி விட போறாங்கனு அர்த்தம்..!!

nathan

ஆண்களே! ஹேண்ட்சம் பாய் போல காட்சியளிக்க சில சிம்பிளான வழிகள்!!!

nathan

அழகை அதிகரிக்க நினைக்கும் ஆண்கள் செய்யும் மிகப்பெரிய தவறுகள்!!!

nathan

ஆண்கள் தங்கள் அழகை அதிகரிக்க தவறாமல் பின்பற்ற வேண்டியவைகள்!

nathan

ஆண்களே! உங்க அழகைப் பராமரிக்க நேரமில்லையா? இதோ சில சிம்பிள் டிப்ஸ்…

nathan

ஆண்களுக்கு ஏற்படும் வழுக்கை பற்றி உங்களுக்கு தெரியாத சில விஷயங்கள்!

nathan

ஆண்களே! உங்கள் உடலில் வளரும் முடிகளை இப்படித்தான் பராமரிக்கணும்…

nathan

அழகாக இருக்க நினைக்கும் ஆண்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்!

nathan