ரம்ஜான் வந்துவிட்டால் இஸ்லாமியர்கள் நீண்ட விரதம் இருப்பது வழக்கமே. அவர்கள், ஒரு நாளின் முடிவில் நல்ல ஆரோக்கியமான சத்துள்ள உணவுகளை அவர்கள் தெம்புக்காக எடுத்துகொள்வதும் உண்டு. அவ்வாறு விரதத்தின் போது அவர்கள் மனதினை கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்து உண்ணுவது பற்றியே சிந்தனையையே தவிர்த்துவிடுவார்கள். அதனால் அவர்கள் ஒருபோதும்..அதனை களைப்பாய் கருதுவதும் இல்லை.
இருப்பினும்…ரம்ஜானின் போது இஸ்லாமியர்கள் இருக்கும் நோன்பினால், அவர்களுடைய உடம்பில் இருக்கும் ஊட்டசத்துகள் குறைவதுடன் நீர்ச்சத்து குறைகிறது. உங்களுடைய விரதம்…உணவின் பற்றாக்குறையால் தடைப்படாமல் இருக்கவேண்டுமென்றால், நீங்கள் உண்ணும் உணவில் வைட்டமின்கள், மினரல், மற்றும் அத்தியவாசிய கொழுப்பு சத்து குறைவாக இருக்க வேண்டியது அவசியமாகிறது.
அதனால், இப்பொழுது நாம் ஒரு ஹெல்தியான சூப் எப்படி தயாரிப்பது? என பார்க்கலாம். இந்த சூப், சிக்கனால் தயாரிக்கப்பட…இதில் இருக்கும் இன்கிரீடியன்ட்ஸ் நமக்கு நன்மை பயக்கும் ஒன்றாகவும் இருக்கிறது. இது வீட்டிலே நாம் தயாரிக்க கூடிய வகையில் இருக்கும் கிளியர் சூப் ஆகும்.
இந்த சூப் ஆரோக்கியமானதாகவும் இருக்க…இதில் நாம் ஆயிலையோ, அல்லது வெண்ணெய்யையோ சேர்க்க தேவையில்லை. இந்த ரெசிபிக்கு ஒரு சில இன்கிரீடியன்ட்களே நமக்கு தேவைப்படுகிறது. தயாரிக்கும் முறையும் மிகவும் எளிதாகவே இருக்கிறது. சரி. தேனுடன் சேர்ந்த கிளியர் சிக்கன் சூப் எப்படி தயாரிப்பது என நாம் இப்பொழுது பார்க்கலாம். பரிமாற தேவையான நபர்: 3 தயாரிக்க தேவையான நேரம் – 30 நிமிடம் குக்கிங்க் டைம் – 45 நிமிடம்
தேவையான பொருட்கள்: சிக்கன் பீஸ் – ½ கப் இஞ்சி மற்றும் பூண்டு – 1 டீ ஸ்பூன் (நறுக்கப்பட்டது) கேரட், ஸ்வீட் கார்ன், பட்டாணி – ½ கப் (நறுக்கப்பட்டது) மஞ்சள் தூள் – ¼ டீ ஸ்பூன் கொத்துமல்லி தழை – 2 டீ ஸ்பூன் (நறுக்கப்பட்டது) சால்ட் – சுவைக்கு ஏற்ப அளவு பெப்பர் – சுவைக்கு ஏற்ப தண்ணீர் – 3 கப் தேன் – 2 லிருந்து 3 டீ ஸ்பூன்
செய்முறை: 1.ஒரு பானையை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் சிக்கன், கேரட், பட்டாணி, ஸ்வீட் கார்ன் ஆகியவற்றை சேர்த்து கொள்ளுங்கள். 2.அத்துடன் தண்ணீரையும் சேர்த்து கொள்ளுங்கள். 3.மஞ்சள், பெப்பர் மற்றும் சால்டையும் அத்துடன் சேர்த்து கொள்ளுங்கள். 4.இப்பொழுது பானையிலிருக்கும் அனைத்தையும் கொதிக்க வையுங்கள். 5.சிக்கன் அரை நிலையில் வேகும் வரை கொதிக்க வைக்க வேண்டும். 6.இப்பொழுது, கொத்துமல்லி தழைகளை அதில் தூவி…பானையை மூட வேண்டும்.
7.சிக்கன் முழுவதுமாக வேகும் வரை காத்திருக்க வேண்டும். 8.ஒரு போதும் ஓவர்குக் ஆகும் அளவிற்கோ அல்லது சிக்கன் சவசவ எனவும், மற்றும் ரப்பர் போல் (கடிக்க கடினம்) ஆகும் அளவிற்கோ விட்டுவிடாதீர்கள். 9.இப்பொழுது பௌலில் சூப்பை கொட்ட வேண்டும்.
10.அதில் இரண்டு டீ ஸ்பூன் தேனை சேர்த்து நன்றாக கொதிக்க விட வேண்டும். 11.மறுபடியும் ப்ரஸ் கொத்துமல்லி இலைகளை கொண்டு சூப்பை அழகுபடுத்தவும் (மேலே தூவ) 12.அதனை சுட சுட எடுத்து…ப்ரட் அல்லது கார்லிக் ப்ரட் ஸ்டிக்குகளுடனோ சேர்ந்து டேஸ்ட் செய்ய… எல்லையில்லா ஆனந்தத்தில் நீங்கள் மூழ்வீர்கள் என்பதில் எந்த ஒரு ஆச்சரியமும் வேண்டாம்.