28.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
201706231532418824 super snacks omam fish bajji SECVPF
கார வகைகள்

ஸ்நாக்ஸ் ஓமம் மீன் பஜ்ஜி

குழந்தைகளுக்கு மீன் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று குழந்தைகளுக்கு மாலையில் சூடாக சாப்பிட ஓமம் மீன் பஜ்ஜி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

சூப்பரான ஸ்நாக்ஸ் ஓமம் மீன் பஜ்ஜி
தேவையான பொருட்கள் :

துண்டு மீன் – 500 கிராம்
கடலை மாவு – 1 கப்
கெட்டியான தயிர் – கால் கப்
இஞ்சி பூண்டு விழுது – 2 டேபிள் ஸ்பூன்
சோடா பானம் – 1/2 பாட்டில்
ஆரஞ்சு கலர் பொடி – தேவைக்கேற்ப
லெமன் – 2
எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்
ஓமம் விதைகள் – 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
சாட் மசாலா – 1 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை :

* ஒரு பெரிய பெளலில் தயிர், இஞ்சி பூண்டு விழுது, ஆரஞ்சு கலர் பொடி, கடலை மாவு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

* நன்றாக கலந்த இந்த கலவையுடன் ஓமம், மிளகாய் தூள், சாட் மசாலா மற்றும் உப்பு சேர்த்து கலக்க வேண்டும்.

* பிறகு கொஞ்சம் கொஞ்சமாக சோடா பானம் ஊற்றி மிதமான பதத்தில் பேட்டர் தயாரிக்க வேண்டும். பேட்டர் தயாரிக்கும் போது கட்டியில்லாமல் பார்த்து கொள்வது முக்கியம். சோடா பானம் தான் மீனின் மொறு மொறுப்பு தன்மைக்கு காரணம். இதற்கு பதில் நீங்கள் தண்ணீர் அல்லது பீர் கூட பயன்படுத்தலாம்.

* அப்புறம் மீனை முள்கள் இல்லாமல் துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். அதை பேட்டரில் போட்டு மீனின் இருபக்கமும் நன்றாக படும் மாதிரி புரட்ட வேண்டும்.

* இப்பொழுது பெளலில் ஒரு மூடி அல்லது கவர் போட்டு மூடி விட வேண்டும். இந்த கலவை நன்றாக கலக்கும் வரை பிரிட்ஜில் வைக்க வேண்டும்.

* சிறிது நேரம் கழித்து பிரிட்ஜிலிருந்து எடுத்து ஒரு தவாவில் எண்ணெய் ஊற்றி அதில் இரண்டு மீன்களை பொரித்து எடுக்க வேண்டும். இதை ரொம்ப கவனமாக செய்ய வேண்டும். ஏனெனில் எண்ணெய் அவ்வப்போது தெறிக்கும். பிறகு தீயை குறைத்து மிதமான தீயில் வைத்து பொரிக்க வேண்டும்.

* மீன்கள் பொன்னிறமாக வரும் வரை பொரிக்க வேண்டும்.

* இறுதியில் பொரித்த மீன்களை ஒரு தட்டில் வைத்து சாட் மசாலா மற்றும் லெமன் துண்டுகள் கொண்டு அலங்கரித்து பரிமாறவும். பார்ப்பதற்கு அழகாகவும் சுவையாகவும் இருக்கும்.

* சுவையான ஸ்நாக்ஸ் ஓமம் மீன் பஜ்ஜி201706231532418824 super snacks omam fish bajji SECVPF

Related posts

உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ்

nathan

மீன் கட்லட்

nathan

இனிப்பு மைதா பிஸ்கட்

nathan

பூண்டு முறுக்கு

nathan

New Year Special மினி சோள முறுக்கு : செய்முறைகளுடன்…!

nathan

பருத்தித்துறை வடை

nathan

தேங்காய் முறுக்கு

nathan

ஆத்தூர் மிளகு கறி,tamil samyal kurippu

nathan

ருசியான அவல் கார பொங்கல்!….

sangika