27.2 C
Chennai
Tuesday, Jan 27, 2026
11 1486802006 2neemflower
தலைமுடி சிகிச்சை

தலை முழுவதும் பொடுகா? நீங்கள் செய்ய வேண்டியது இப்படித்தான்!!

பொடுகு எல்லாருக்கும் இருக்கும் கூந்தல் சார்ந்த பிரச்சனை. அதனை பெரிதுபடுத்தாமல் விட்டுவிட்டால் முடி உதிர்வு, சொட்டை வரை கொண்டு போய் விட்டுவிடும். அதுமட்டுமல்லாமல் ஆரோக்கியமற்றதும் கூட.

முடிஉதிர்தலுக்கும் அடர்த்தி குறைதலுக்கும் மிக முக்கிய காரணமான பொடுகை எளிதில் விரட்ட இந்த குறிப்புகளை பயன்படுத்திப் பாருங்கள்.

வேப்பம் பூ : நாட்டு மருந்து கடையில் காய்ந்த வேப்பம்பூ கிடைக்கும். அதனை 50 கிராம் வாங்கி, அதை 100 கிராம் தேங்காய் எண்ணெயில்போட்டு நன்கு காய்ச்ச வேண்டும். இளஞ்சூடாக இருக்கும் போது வேப்பம் பூவுடன் சேர்த்து எண்ணெயை தலையில் நன்றாகத் தேய்த்து அரை மணிநேரம் ஊறிக் குளித்தால், பொடுகுபிரச்னை தீரும்.

கற்பூரம் : கற்பூரத்தை பொடி செய்து அதனை சூடான தேங்காய் எண்ணெயுடன் கலந்து தலையில் தேய்க்கவும். 15 நிமிடம் கழித்து குளித்தால் பொடுகு தலைகாட்டாது

உப்பு : உப்பு சிறந்த கிருமி நாசினி. பூஞ்சை மற்றும் பேக்டீரியாவை அழிக்கும். உப்பை வெதுவெதுப்பான நீரில் கரைத்து அதனை கூந்தலின் வேர்க்கால்களில் த்டவி 5 நிமிடம் கழித்து குளியுங்கள். வாரம் 3 நாட்கள் செய்தால் பொடுகு மறைந்துவிடும்.

ஆப்பிள் சைடர் வினிகர் : ஆப்பிள் சைடர் வினிகர் மற்றும் நீர் சம அளவு கலந்து தலையில் தேய்த்து 15 நிமிடம் கழித்து குளித்தால் பொடுகு மறைந்துவிடும். வெள்ளையாக தென்படுவதும் நின்றுவிடும்.

எலுமிச்சை சாறு : எலுமிச்சை சாறிலும் பொடுகை விரட்டும் சக்தி உள்ளது. எலுமிச்சை சாறை தலையில் தடவி 15 நிமிடம் கழித்து தலைமுடியை அலச வேண்டும். அதன் தோலைக் கொண்டும் ஸ்கால்ப்பில் அழுந்த தேய்த்தால் பொடுகு வருவதும் கட்டுப்படும்.

11 1486802006 2neemflower

Related posts

கூந்தல் உதிர்வை தடுக்க இரவில் செய்ய வேண்டியவை

nathan

பொடுகை போக்கும் ஆப்பிள் சீடர் வினிகர்

nathan

எலுமிச்சையோட இதுல ஏதாவது ஒன்னு சேர்த்து தேய்ங்க… வழுக்கையே விழாது… சூப்பர் டிப்ஸ்..

nathan

கருமை நிறம் கொண்ட அடர்த்தியான அழகான முடியை பெற கற்பூரத்தை எப்படி பயன் படுத்த வேண்டும் தெரியுமா?

nathan

தலைக்கு எண்ணெய் தேய்ப்பது அவசியமா?

nathan

25 வயதிற்குட்பட்டவர்களுக்கு ஏன் இவ்வளவு சீக்கிரம் முடி உதிர்கிறது தெரியுமா?

nathan

இளநரை முடி தொல்லையா? இதச் செய்யுங்க மறைந்துவிடும்!

nathan

கொத்து கொத்தா முடி கொட்டுதா? இதோ அற்புதமான எளிய தீர்வு

nathan

tips.. அவசியம் செய்யவேண்டியவை..! எந்தெந்த நாளில் எண்ணெய் தேய்த்து குளிக்கலாம்.?

nathan