25.9 C
Chennai
Sunday, Feb 23, 2025
acne 09 1486623064
முகப்பரு

முகப்பரு தழும்பு மறையனுமா? இரவில் இந்த ஒரு டிப்ஸ் தினமும் செய்து பாருங்க!!

சருமத்தில் உண்டாகும் பலப் பிரச்சனைகளில் முகப்பரு, கருமை, கரும்புள்ளி, மற்றும் தழும்புகள். இவற்றை போக்க பல வித குறிப்புகளை நீங்கள் பயன்படுத்தி இருக்கலாம்.

துவுமே சரிவரவில்லை என்றால் உடனே நீங்கள் உபயோகப்படுத்தும் குறிப்புகளை மாற்ற வேண்டும். ஆனால் அதற்காக விதவிதமான க்ரீம்களை நீங்கள் முயற்சிக்க் கூடாது. நீங்கள் இயற்கையான ஆயுர்வேத குறிப்புகளை முயற்சிக்க வேண்டும். மாறி மாறி ஆயுர்வேத குறிப்புகளை பயனபடுத்துவதால் பிரச்சனை உண்டாகாது. மாறாக நல்ல பலன் தரும் .

பால் : முகத்தை கழுவியபிறகு சிறிதளவு பாலை உள்ளங்கையில் எடுத்து முகத்தில் பூசவும். இவ்வாறு தொடர்ந்து 2 – 3 வாரங்கள் வரை செய்துவந்தால் சருமத்துளைகளிலிருக்கும் விடாப்பிடியான அழுக்கு வெளியேறி உங்கள் சருமம் பொலிவடைந்திருப்பது கண்கூடாக தெரியும்.

இள நீர் சிறிதளவு இளநீரை முகம், கழுத்து பகுதி, கைகளில் பூசிவந்தால் சரும நிறம் மாறும். இள நீரிலுள்ள கஞ்சியை சருமத்தில் பூசிப்பாருங்கள். சருமம் ஜொலிக்கும்.

சீரகம் : சீரகம் மற்றும் முள்ளங்கியை ஆகியவற்றை தனித்தனியே தண்ணீரில் கொதிக்கவைத்து, அந்த தண்ணீரில் முகத்தை கழுவினால் மாசுகள் அகற்றப்பட்டு முகம் பிரகாசமாக தோன்றும்.

பரு தழும்பு மறைய : இரவு படுக்கும் முன், புதினா சாறு இரண்டு ஸ்பூன் அரை மூடி எலுமிச்சம்பழம் சாறு ஆகியவற்றுடன் பயற்றம்பருப்பு மாவை கலந்து முகத்தில் தடவிக் கொண்டு பத்து நிமிடம் ஊறிய பிறகு ஐஸ் ஒத்தடம் கொடுத்து அதன் பின் கழுவுங்கள். முகம் சுத்தமாகும். பருவினால் ஏற்படும் தழும்பும் மறையும்.

வேப்பிலை : வேப்பிலை, புதினா, சிறிது மருதாணி மற்றும் குப்பைமேனி இலைகளை காயவைத்துபொடி செய்து கொள்ளுங்கள். அதனை பாலில் குழைத்து முகத்தில் தடவி கழுவினால் வேர்க்குரு, பருக்கள், கரும்புள்ளிகள் வராமல், முகமும் கருத்துப் போகாமல் இருக்கும்.

acne 09 1486623064

Related posts

Beauty tips.. முகப்பருவை போக்க சில டிப்ஸ்!

nathan

முகப்பரு தழும்பை போக்க எலுமிச்சை சாறை எப்படி உபயோகப்படுத்துவது என தெரியுமா?

nathan

முகப்பருவை விரட்டும் எளிய மூலிகைகள்!

nathan

இந்த முகப்பரு பிரச்சினைக்கு தீர்வு….

sangika

சருமக்குழிகளை சரி செய்துவிட சோற்றுக்கற்றாழையை இவ்வாறு பயன்படுத்துங்கள்!…

sangika

முகப்பருவை போக்கும் வில்வம்

nathan

முகத்தில் பரு அதிகம் இருக்கா? அப்ப விஸ்கி ஃபேஸ் பேக் போடுங்க…

nathan

இப்படி தினமும் செய்து வந்தால், பருக்கள் வருவதைத் தடுக்கலாம்…….

sangika

பருவால் உண்டான வடு மறைய ஸ்ட்ராபெர்ரி ஃபேஸ் பேக்

nathan