இப்போது இளமையிலேயே வயதான தோற்றத்தைப் தரும் உணவுகள் வகைகளை பார்க்கலாம். இந்த உணவுகளை அடிக்கடி சேர்த்து கொள்வதை தவிர்க்க வேண்டும்.
• சர்க்கரை சாப்பிட சுவையாகத் தான் இருக்கும். ஆனால் இதனை எவ்வளவுக்கு எவ்வளவு எடுத்துக் கொள்கிறோமோ, அவ்வளவுக்கு அவ்வளவு அது உங்களை வயதானவராக வெளிக்காட்டும். எனவே நீங்கள் இளமையுடன் நீண்ட நாட்கள் காணப்பட வேண்டுமானால், சர்க்கரை கலந்த உணவை அளவாக உட்கொள்ளுங்கள். முடிந்தால், சர்க்கரையை தவிர்த்திடுங்கள். 30 வயதிற்கு மேல் சர்க்கரை சேர்ப்பதை தவிர்த்து விடுவது நல்லது.
• உப்பை அதிகம் சேர்த்து வந்தால், அதுவும் முதுமைத் தோற்றத்தை வேகப்படுத்தும். எனவே உணவில் உப்பை முடிந்த அளவில் குறைத்துக் கொள்ளுங்கள்.
• தாகத்தில் இருக்கும் போது தண்ணீர் குடிப்பது நல்லது. ஆனால் பலரோ தண்ணீருக்கு பதிலாக கார்போனேட்டட் சோடாக்களை வாங்கிக் குடிப்பார்கள். இப்படி சோடா பானங்களை அதிகம் குடித்து வந்தால், அதுவும் முதுமைத் தோற்றத்தைத் தரும்.
• ஃபாஸ்ட் புட் உணவுகளை எப்போதாவது சாப்பிட்டு வந்தால், எவ்வித ஆபத்தும் இல்லை. ஆனால் அது அளவுக்கு அதிகமானால், அதுவே பெரும் ஆபத்தையும், முதுமைத் தோற்றத்தையும் ஏற்படுத்தும்.
• காப்ஃபைன் நிறைந்த பானங்களை அளவாக குடித்து வந்தால், இளமையுடன் காணப்படலாம். ஆனால் அதுவே அதிகமானால், முதுமைத் தோற்றத்தைத் தான் பெற வேண்டும்.