சருமத்திற்கு தொடர்ந்து பராமரிப்பு கொடுத்தால்தான் சருமம் இளமையாக வசீகரமாக இருக்கும். இருப்பினும் சில பொருட்கள் உடனடியாக அழகை தரும். சரும மற்றும் கூந்தல் பாதிப்புகளை போக்கும்
க்ரீம்கள் இவ்வாறு கொடுத்தாலும் அவற்றிலுள்ள கடும் ரசாயனங்கள் பக்க விளைவுகளை தரும். இங்கே சொல்லப்பட்டிருக்கும் பொருட்கள் எந்தவித பக்கவிளைவுகள் இல்லாமல் உங்கள் பிரச்சனைகளை போக்கும். அவற்றை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
உடனடியாக பளபளக்க :
சருமம் உடனடியாக பளபளக்க, சுத்தமான க்ரீன் தேயிலை தூளுடன் சிறிது தேன் கலந்து முகத்தில் மென்மையாக தேயுங்கள். சருமத்துளைகளில் தங்கியிருக்கும் பல அழுக்குகள், இறந்த செல்கள் வெளியேறிவிடும். முகம் மின்னும்.
உடனடியாக பளபளக்க :`1`
சருமம் உடனடியாக பளபளக்க, சுத்தமான க்ரீன் தேயிலை தூளுடன் சிறிது தேன் கலந்து முகத்தில் மென்மையாக தேயுங்கள். சருமத்துளைகளில் தங்கியிருக்கும் பல அழுக்குகள், இறந்த செல்கள் வெளியேறிவிடும். முகம் மின்னும்.
கன்னம் சிவப்பாக :
சிலருக்கு மட்டும் கன்னச் சதுப்புகள் சிவப்பாக இருக்கும். அது அழகை அதிகரிக்கச் செய்யும். அதற்கு மேக்கப் எல்லாம் வேண்டாம். பீட்ரூட் சாறினை கன்னத்தில் பூசுங்கள். காய்ந்தும் அழுத்தி தேய்க்காமல் கழுவவும். கன்னங்கள் ரோஜா நிறத்தில் இருக்கும்.
நரை முடியை போக்க :
நரை முடி உடனடியாக மறையாது. இருந்தாலும் எலுமிச்சை சாறு உங்கள் நரை முடியின் நிறத்தை மாற்றும் தன்மைகொண்டது. எலுமிச்சை சாறை நேரடியாக தலையில் தேய்த்து சிறிது நேரம் சூரிய வெளிச்சத்தில் இருங்கள். நரைமுடி யின் நிறம் மாறும்.
கருவளையம் மறைக்க :
கருவளையத்தோடு ஒரு விழாவிற்கு போக முடியாது. அதை மறைக்க மேக்கப் செய்யும் முன் ஆரஞ்சு நிற லிப்ஸ்டிக்கை கண்களுக்கு அடியில் லேசாக தடவுங்கள். கருவளையம் மறைந்துவிடும். வீட்டிற்கு வந்ததும் மறக்காமல் கழுவி விடுங்கள்.
செல்லுலைட் :
உடலில் குறிப்பாக தொடைகளில் மடிப்பு மடிப்பாக கொழுப்பு செல்லுலைட் உருவாகும் அவற்றை போக்க, தினமும் காபிப் பொடியை ஆலிவ் எண்ணெயுடன் கலந்து தேயுங்கள். இதனால் அவை மறையும். கூடுதலாக சருமம் பளபளக்கும்.
நுனி வெடிப்பிற்கு :
கூந்தலின் நுனி வெடித்திருந்தால் அதனை சரிப்படுத்த பெட்ரோலியம் ஜெல்லியினால் நுனியில் த்டவுங்கள். இதனால் வெடிப்புகள் மேற்கொண்டு பரவாது. முடி உதிர்தலும் தடுக்கப்படும்.